Tuesday 28 February 2017

Tamil cinema has ever seen a story ... It is urgent! - Director Suresh Kamakshi

Tamil cinema has ever seen a story ... It is urgent! - Director Suresh Kamakshi


மிக மிக அவசரம்... இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதை! - இயக்குநர் சுரேஷ் காமாட்சி


 சுரேஷ் காமாட்சி...

தமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன். குறிப்பாக தயாரிப்பாளர்கள் - நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனி கவனம் உண்டு.

அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார்.

அவர் முதல் முறையாக இயக்கும் படத்துக்கு மிக மிக அவசரம் என தலைப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு பிரச்சினையை இந்தப் படத்தில் முன்வைத்திருப்பதாகச் சொல்கிறார் சுரேஷ் காமாட்சி.

இயக்குநர் சுரேஷ் காமாட்சியுடன் ஒரு நேர்காணல்...

தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்?

முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் கூட. அமரர் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படைக்கு தயாரிப்பாளரானேன். கங்காரு படத்துக்குப் பிறகு புதிய படம் செய்ய கதைகளை யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஜெகன் சொன்ன இந்தக் கதை கவனத்தை ஈர்த்தது. அதைத்தான் மிக மிக அவசரம் எனப் படமாக்கியுள்ளேன்.

அப்படி என்ன கதை இது?
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் போலீசாரின் பாதுகாப்புக்காக எத்தனையே ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடக்கின்றன. அதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மிக உணர்வுப்பூர்வமான கதை. திரையில் வரும்போது அதிர்வுகளை ஏற்படுத்தும்.

 நடிகர் நடிகைகள்...

 இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களில் நடித்த ஸ்ரீஜா (ஸ்ரீபிரியங்கா) நாயகியாக நடித்துள்ளார். கோரிப்பாளையம் ஹரீஷ், வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்ததா.. ஏதேனும் சுவாரஸ்ய நிகழ்வுகள்?

 99 சதவீதம் முடிந்துவிட்டது. இந்தப் படம் முழுவதுமே பவானிக்குப் பக்கத்தில் உள்ள கோனேரிப்பட்டி அணையில்தான் நடந்தது. பாக்யராஜ் சார் பவுனு பவுனுதான் படத்தை இங்குதான் எடுத்திருந்தார். அதன் பிறகு 25 ஆண்டுகள் வேறு படங்களுக்கு அங்கே அனுமதி தரவில்லை. போராடி நாங்கள் அனுமதி வாங்கி படமாக்கினோம். அந்த அணையும் ஒரு பாத்திரமாகவே வருகிறது இந்தப் படத்தில். படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் தந்த அபார ஒத்துழைப்பை மறக்க மாட்டேன்.

 ஒரு இயக்குநராக உங்கள் அனுபவம் எப்படி?

 எனக்கு திரை இயக்கம் புதிதில்லை. இயக்கம் - சுரேஷ் காமாட்சி என போட்டுக் கொள்வது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். என் திரைப் பயணம் சினிமா இயக்கத்துடன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. படத்தின் கதை வசனத்தை ஜெகன் எழுதியுள்ளார் (புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை இயக்குநர்).
 திரைக்கதை எழுதி இயக்கியுள்ளேன். நல்ல ஆர்டிஸ்டுகள் அமைந்துவிட்டார்கள். ஸ்ரீஜாவுக்கு இந்தப் படம் வேறு ஒரு தளத்தை உருவாக்கித் தரும் என நம்பலாம். வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த் என எல்லோருமே பிரமாதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். என் வேலையைச் சுலபமாக்கியிருக்கிறார்கள்.

முதல் படமே ஹீரோயினை மையப்படுத்தி உருவாக்கியது ஏன்?

 பெண்களை மையப்படுத்தி என்பதை தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நம்மை இயக்கும் அச்சே பெண்தான். அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட, அவர்களுக்கு எதிரான சீண்டல்கள், தொல்லைகள் ஓய்வதில்லை. அதை என் முதல் படத்திலேயே சொல்ல முயற்சித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றுதானே...

 நீங்க எப்போ ஹீரோவாக களமிறங்கப் போறீங்க...?
அது அமைகிற வாய்ப்புகளைப் பொறுத்தது!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பரபரப்பு... நடிகர் சங்க பஞ்சாயத்து என ஒன்றையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறீர்கள்.. இயக்க எப்படி நேரம் கிடைத்தது?

நானாக வலிந்து போய் எந்தப் பிரச்சினையையும் இழுப்பதில்லை. நான் வளர்ந்த, இருக்கிற சூழல் திரைத்துறையில் நடக்கிற கூத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க விடவில்லை. நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் திரைத்துறையில் சிஸ்டம் சரியாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயற்சிக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது வெறும் பரபரப்பாகத் தெரியும். உள்ளே இருப்பவர்களுக்கு என்னைப் புரியும். அதனால்தான் விஷயமறிந்த அத்தனைப் பேரும் என்னை ஆதரிக்கிறார்கள். இதுவே என் முழு நேர வேலையில்லை. பட இயக்கம், தயாரிப்புதான் பிரதானம். அதனால் நேரம் ஒரு பிரச்சினையில்லை.

Baashaa makes a digital comeback

Baashaa makes a digital comeback
Baashaa makes a digital comeback
மீண்டும் திரைக்கு வரும் பாட்ஷா 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவின் சிம்மாசனத்தில் இன்றைக்கு வரைக்கும் அமர்ந்திருக்கும் படம் 'பாட்ஷா'. நொடிக்கு நொடி மாஸ், ஆக்ஷன் என ரஜினியின் விஸ்வரூப இமேஜுக்கு பாட்ஷாவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். பாட்ஷா வெற்றி விழாவில் தான் ரஜினியின் அரசியல் பேச்சும், சூட்டைக்கிளப்பி திமுக ஆட்சிக்கு வர உதவியது. தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என டப் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. 
இன்றைக்கும் பாட்ஷாவை டிவியில் போட்டால் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில இருக்கிறது. எந்த ஒரு ரஜினி ரசிகரும் பாட்ஷா படத்தை குறைந்தது 10 முறைக்கு மேலாவது பார்த்திருப்பார். அப்படிப்பட்ட மாஸ் திரைப்படமான பாட்ஷா, இந்த மார்ச் மாதத்தில் மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. பாட்ஷா ஹிந்தி வெர்ஷன் ஏற்கனவே டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. 22 வருஷமாக ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் படம்,எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. மார்ச்-ல் இன்னொரு திருவிழாவிற்கு தயாராகி வருகிறது தமிழ் சினிமா என்றே சொல்ல வேண்டும். 
 
Super Star Rajni's blockbuster hit movie 'Baashaa' is making its comeback in digital format in March across Tamil Nadu. Baashaa is still grabs the top position in TRP rating whenever telecasted in TV. Fans are gearing up to celebrate the movie's comeback after 22 years.

Dhanush appeared in court | கோர்ட்டில் ஆஜரான நடிகர் தனுஷ்

Dhanush appeared in court | கோர்ட்டில் ஆஜரான நடிகர் தனுஷ்
Dhanush appeared in court |  கோர்ட்டில் ஆஜரான நடிகர் தனுஷ் 
தமிழ் சினிமா நடிகர், நடிகையர், இயக்குனர்கள் எத்தனையோ வழக்குகளை பார்த்திருப்பார்கள். ஆனால், நடிகர் தனுஷ் மற்றும் அவர் குடும்பத்தின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு நிச்சயம் புதுமையானது. நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், சிறு வயதில் சினிமா ஆசையில் ஊரைவிட்டு ஓடிப்போனார் என்றும், தாங்கள் வறுமையில் வாடுவதாகவும், தங்களின் பராமரிப்பிற்காக மாதம் 65000 வழங்கவேண்டும் எனவும் ஒரு தம்பதியினர் தனுஷ் மற்றும் அவர் குடும்பம் மீது வழக்குப் போட்டிருந்தனர். 

இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணை நேற்று மதுரையில் நடைபெற்றது. வழக்கில் குறிப்பிடப்பட்டது போன்ற அங்க அடையாளங்கள் தன்னுடைய உடலில் இல்லை என்பதை நிரூபிக்க நடிகர் தனுஷ் கோர்ட்டில் நேரடியாக ஆஜர் ஆகி இருந்தார். பின்னர், அந்த தம்பதி தாக்கல் செய்திருந்த ஆவணங்களின் படி தனுஷின் உடலின் ஒரு தழும்பும், மச்சமும் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்து கோர்ட்டுக்கு அறில்க்கை கொடுத்துள்ளனர். அந்த அடையாளங்கள் ஏதும் தன்னுடைய உடலில் இல்லை என்று தனுஷும் நிரூபித்தார். ஆனாலும் இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு அழங்கப் படவில்லை. 

Actor Dhanush has appeared in Madrai court on a case that is filled against him. The petitioner has claimed that Dhanush is their son who moved to Chennai to become an actor. Dhanush was asked to appear in the court and prove that the physical marks in the body are not matching as per the file. Reportedly those mole and scar was not found in Dhanush's body. However, the verdict is still reserved. 
Ajith Vedalam hindi dubbed movie 1C views.
Vedalam is an Thala Ajith's 56th movie (Thala 56) direction by Siruthai Siva, who has earlier worked with Ajith in "Veeram". The movie produced by AM Rathnam, which is his third consecutive movie with Ajith after "Arrambam" and "Yennai Arindhaal". The film stars Ajith Kumar, Lakshmi Menon and Shruti Haasan, Aniket Chouhan, Kabir Singh and many others in the lead roles.
Ajith is working as a taxi driver. Ajith and his sister, played by Lakshmi Menon, arrives kolkalta in order to pursue Lakshmi Menon's education at a fine arts college. Cops in Kolkata ask Taxi and Auto drivers for help in pointing criminal members of Rahul's gang and prepare a suspect list. Ganesh identifies one of the suspects and informs the police about the where abouts of the criminals which leads to a large haul of illegal weapons, drugs, money and also arrest of many of lower level gang members belonging to Rahul. Frustrated Aniket finds Ganesh and brings him to his Yacht to be killed, but is instead killed by Ganesh who becomes extremely violent during the altercation. There the story begins.
Now whats interesting is the movie which is dubbed in Hindi has crossed 1 crore views in youtube. That’s to be appreciated. Kudos Team!!! 

Melur couple has filled a case against Dhanush in Chennai highcourt in Madurai division.
Kathiresan and Meenatchi who is from Madurai has filed a case in highcourt mentioning that actor Dhanush is there elder son. Actor Dhanush have to take care of them by giving 65 k per month for their expense. In this scenario, dhanush has asked to cancel this case. However, melur couple has filed a response to a petition. They have mentioned that they have sufficient proof to prove that actor dhanush is there son. When the petition was already on live, melur couple has submitted proof including school transfer certificate. Judge has ordered to check whether the moles are there as per the school TC for dhanush. Court has ordered Dhanush lawyer to file a report. This case was brought into notice on Friday, judge was g. Sokkalingam. Dhanush lawyer has mentioned that all the body markings submitted was incorrect. Dhanush does not have any mole as mentioned and this case is completely based on snatching money from Dhanush.
For this the melur couple has filed a return petition, stating that there are chances of changing the body marks. Based on this case, actor Dhanush appeared in highcourtMadurai division and requested to postpone the case. 

Sasikala vs Cyanide Mallika

Sasikala vs Cyanide Mallika
Sasikala vs Cyanide Mallika
சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
பிப்ரவரி 15ம் தேதி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவை சந்திக்க, தினந்தோறும் வழக்குரைஞர்கள், கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் என வந்த வண்ணம் இருந்தனர். இதுகுறித்து மற்ற கைதிகள் இது குறித்து பிரச்னை செய்தனர்.
பொதுவாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதியை, ஒரு வாரத்துக்கு 3 முறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும். அதுவும் அதிகபட்சம் 1 மணி நேரம் தான். ஆனால், சசிகலாவை தினந்தோறும் ஏராளமானோர் சந்தித்து வந்தனர். இந்த சந்திப்பு 2 லிருந்து 3 மணிவரை  நிகழ்ந்தது.
இதனால் சசிகலாவின் உறவினர்கள் மட்டுமே அவரை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த வாரம் பெங்களூர் சிறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி ஆகியோருக்கு சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.
மேலும் பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா அடைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்து அறையில் சயனைட் மல்லிகா என்ற தொடர் கொலைக் குற்றவாளி அடைக்கப்பட்டிருந்தார். இது குறித்து சமூக தளங்களிலும் செய்திகள் பரவியது. இந்நிலையில் மல்லிகா பெல்காம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

'RUDRA will be a special character for me, my first foray in to Tamil Cinema that I love so much and inspires me. And I want it to be special also for Tamil cinema as a whole' says ace Bollywood Director Anurag Kashyap about his role in Imaikkaa Nodi

'RUDRA will be a special character for me, my first foray in to Tamil Cinema that I love so much and inspires me. And I want it to be special also for Tamil cinema as a whole' says ace Bollywood Director Anurag Kashyap about his role in Imaikkaa Nodi
"RUDRA will be a special character for me, my first foray in to Tamil Cinema that I love so much and inspires me. And I want it to be special also for Tamil cinema as a whole" says ace Bollywood Director Anurag Kashyap about his role in Imaikkaa Nodigal. 
 
Imaikkaa Nodigal, with the magnanimous starcast of Nayanthara, Atharvaa and Raashi Khanna will see Anurag Kashyap, the director who made heads from around the world turn & look at Indian films with new awe and apppreciation play the baddie. It is surprising that, although Anurag Kashyap has always loved, adored and followed Tamil films and also has a very friendly connection with directors like Vetrimaaran; this will be Mr.Kashyap's first ever association with tamil films in any manner.
 
Imaikkaa Nodigal which is being produced by Mr C J Jayakumar of Cameo Films is being directed by Ajay Gnanamuthu of De'Monte Colony fame. The cinematography of the film is by R D Rajasekhar and music by Hiphop Tamizha. Important sequences of the film have already been shot with the lead actors in live locations in Bangalore and Chennai and the shoot will go on in the coming months in Chennai and other locations in India.
 
"What pulled me towards acting in Imaikkaa Nodigal is the role. RUDRA is not your typical baddie. He doesn't just smoke, drink, order his men around and indulge in item numbers. He is menacing, scary, smart and cunning. This strange mixture that forms the role is what tempted me to take it up although I was tied up with my own projects back in Mumbai. When the audience watch the movie in theatre, if I'm able to evoke the tiniest of fears in them, as Rudra, I'll consider my work done."
 
Having shot with the team for a few days, Anurag Kashyap has nice things to say about the team. "It's great to see youngsters take up the initiative and do interesting films like this. Films that demand a lot of experience and detailing. I'm surprised by Director Ajay's command over the medium. DOP RD Rajasekhar is a friend of mine and I've had the joy of working with him in A R Murugadoss's Akira before this. His frames are a delight to watch. Additionally, the production has been impeccable. Every need of the artistes, technicians and the film is being taken care to the tee."
 
While three schedules of the film are already over, there are a couple more schedules to go as the film will wrap up by the end of April. All eyes are on Imaikkaa Nodigal and Anurag Kashyap tells us that it will be worth the wait. 
 
"I can't wait to see the movie on screen myself!" signs off Anurag enthusiastically.⁠⁠⁠⁠
"நான் மிகவும் ரசித்து தேர்வு செய்த கதாபாத்திரம் 'ருத்ரா'. இந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது எனக்கு மகிழ்ச்சி. மேலும் தமிழ் திரையுலகிற்கு இந்த 'ருத்ரா', ஒரு சிறப்பான கதாபாத்திரமாக இருக்கும்"  என்று 'இமைக்கா நொடிகள்' படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்தை பற்றி கூறுகிறார், பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்
 
நயன்தாரா - அதர்வா மற்றும் ராஷி கண்ணா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்,  தன்னுடைய திரைப்படங்களால் உலகையே திரும்பி  பார்க்க வைத்த இயக்குநர் அனுராக் காஷ்யப். இயக்குநர் வெற்றி மாறனோடு நெருங்கிய நட்புறவில் இருக்கும் இவருக்கு தமிழ் படங்கள் மீது எப்போதும் ஈர்ப்பு அதிகம். இருந்தாலும் அனுராக் காஷ்யப்  முதல் முதலாக பணியாற்றும் முதல் தமிழ்  திரைப்படம் 'இமைக்கா நொடிகள்' தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
'கேமியோ பிலிம்ஸ்' சார்பில் சி ஜே ஜெயக்குமார் தயாரித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தை, 'டிமான்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.  ஒளிப்பதிவாளராக ஆர் டி ராஜசேகர் மற்றும் இசையமைப்பாளராக 'ஹிப் ஹாப் தமிழா'  பணியாற்றுகின்றனர்.  இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகள் அனைத்தும் முன்னணி நடிகர்களோடு பெங்களூர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு,  வரும் மாதங்களில்  நாங்கள் சென்னையிலும், இந்தியாவில் இருக்கும் மற்ற இடங்களிலும் எங்கள் படப்பிடிப்பை தொடர இருக்கின்றோம். 
 
"இமைக்கா நொடிகள் படத்தில் நான் நடிப்பதற்கு முக்கிய காரணம், என்னுடைய ருத்ரா கதாபாத்திரம் தான். வழக்கமாக இருக்கும் வில்லன்கள் போல் குடி, சிகரெட், அடியாட்களை ஏவிவிடுவது என்று இல்லாமல், புத்திசாலித்தனமாகவும் அதே நேரத்தில் தந்திரமாகவும் செயல்படக்கூடிய ஒரு மிரட்டலான வில்லன் தான் இந்த ருத்ரா. மும்பையில் நான் என்னுடைய பிற வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், இந்த  வித்தியாசமான குணாதியசங்களை கொண்ட ருத்ரா கதாபாத்திரம் என்னை 'இமைக்கா நொடிகள்' படத்திற்குள் அழைத்து வந்துவிட்டது.  இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் சிறிய அளவு பயத்தை என்னுடைய ருத்ரா கதாபாத்திரம் வெளி கொண்டு வந்து விட்டால், நான் செய்த பணி முழுமை பெற்று இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வேன். 
 
இளைஞர்கள்  இது போன்ற சுவாரசியமான கதையம்சங்களை கொண்டு படம் எடுப்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது.  இத்தகைய வலுவான கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவதற்கு நிச்சயமாக அதிக அனுபவம் தேவை. ஆனால் அஜய் ஞானமுத்து அந்த பணியை கன கச்சிதமாக செய்து வருவதை பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக இருக்கின்றது. ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் என்னுடைய நண்பர். அவருடன் நான் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸின் 'அகிரா' படத்தில் பணியாற்றி இருக்கின்றேன். நிச்சயமாக அவருடைய எழில் மிகு காட்சிகள் ஒவ்வொன்றும், ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து செல்லும்.  நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவினரின் தேவையகளையும் முழுவதுமாக பூர்த்தி செய்து, அனைவருக்கும்  உறுதுணையாய் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர், இந்த படத்தின் தயாரிப்பு துறையினர். என்னை நானே  திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றேன்" என்று உற்சாகமாக  கூறுகிறார் அனுராக். 
 
மூன்று கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது மேலும்  இரண்டு கட்ட  படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படக்குழுவினர், வருகின்ற ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்ய உள்ளனர்

Friends Cultural Fest 2017 Function Stills

ACTRESS PRIYANKA NAIR STILLS GALLERY

Love Presented With Poetic - Yeno Vaanilai Maaruthey

Love Presented With Poetic - Yeno Vaanilai Maaruthey

காதலை கவித்துவமாக கூறும் "ஏனோ வானிலை மாறுதே"
 
வெளியான நாள் முதல் யூ டியுபில் தொடர்ந்து முதல் #10 Trendingக்குள் வலம் வந்த Youthful Magic "ஏனோ வானிலை மாறுதே" குறுத்திரை படத்தை வெள்ளித்திரை தரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி ரசனையாக இயக்கியுள்ளார் இயக்குனர் புனித்.
 
ஒவ்வொரு Shotம் Sweetஅஹ் Cuteஅஹ் கண்ணுக்கு குளிர்ச்சியா ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத்ராஜேந்திரன். புனித்தின் கதை களத்திற்கும் வினோத்தின் ஒளிப்பதிவிற்கும் இணைந்து காவியமாய் அமைந்துள்ளது சித்துகுமாரின் இசை.
தமிழ்குமரனின் எடிட்டிங் ஏனோ வானிலை மாறியதை எதார்த்தமாய் காட்டியிருக்கிறது. இந்த ஒட்டு மொத்த குழுவின் உன்னத உழைப்பு மக்களின் ஆதரவிலும் படத்தின் தரத்திலும் தெரிகிறது.
 
இன்று இணையத்தை  ஆட்கொண்டிருக்கும் "ஏனோ வானிலை மாறுதே" இளைஞர்கள் மனதில் "அழகாய் காதல் தூருதே"
ஏனோ வானிலை மாறுதே குறும்படம் காதலர்களை காதலுக்கும் கடத்தி செல்லும் கவிதை.
 
வெளியிட்டதிலிருந்து 9 நாட்களில் 18 லட்சத்திற்கும் மேல் பார்வைகளை பெற்றுள்ள ஏனோ வானிலை மாறுதே,  இன்னும் ஒரு நாளிள் அது 20 இலட்சம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
காதலும் காமெடியும் கலந்த கதம்பம், இந்த மாதிரி ஒரு காதல் நம்ம வாழ்க்கையிலும் வரனும்னு ஆசைப்படுற அளவுக்கு அழகாய் இருக்கிறது படம். பேபி மனுஸ்ரீ கொஞ்சி கொஞ்சி நடிச்சிருக்காங்க, நக்ஷத்த்ராவும் அருணும் காதலை கண்ணியமா பிடிச்சிருக்காங்க.
 
எப்ப வரும் எப்படி  வரும்னு தெரியாத காதலை இந்த படம் Youtube ல் வந்து அழகாய் சொல்லிருக்கு.
காதலை கண் குளிரும் தரத்தில், காதலை காதலின் நிறத்தில், சொல்லிய அழகிய குறும்படம் "ஏனோ வானிலை மாறுதே"
 
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விவரங்கள் :-
 
நடிப்பு  : அருண், நக்ஷத்ரா நாகேஷ், கல்லூரி மதன்
 
எழுத்து & இயக்கம் : புனித்
 
இசை : சித்துகுமார்
 
ஒளிப்பதிவு : வினோத் ராஜேந்திரன்
 
படத்தொகுப்பு : தமிழ் குமரன்
 
பாடல்கள் : அஜித் சாய் , விக்னேஷ் ராமகிருஷ்ணன்
Vfx - Naren And Manikanda Prabhu 
Design - Yuvaraj and Saba 
Singers - Rahul Hariharan, Ananthu Nair , Joe Yamini G
Mixed and Mastered - Abin Pushpakaran
Helicam - Anand 
Light Unit - Raj Cine Service
 
Love Presented With Poetic - Yeno Vaanilai Maaruthey
 
Its been a while since tamil audience faced such a beautiful Rom-Com short film "Yeno Vaanilai Maaruthey". 
 
A talented young team achieved 18 Lakhs more hits in youtube in just 9 days which is something tremendous and waiting to reach 20 Lakhs in two more days.
 
The comical story telling by punith, Very colorful and eye pulling DOP by Vinod Rajendran, High standard background score by Siddhu Kumar, 
Romantic lyrics given by Vignesh Ramakrishna and Ajith Sai made this film to reach this milestone. It has all capacities to be a feature film. 
 
Expecting the director to bag film chances soon who has some interesting skills to sit on directors chair.
Cast :- Arun Prasath, Nakshatra & Madhan Gopal
Crew :-
Director - Punith
Dop - Vinod Rajendran
Music - Siddhukumar 
Editor - Tamilkumaran 
Lyrics - Ajith Sai & Vignesh Ramakrishna 
Vfx - Naren And Manikanda Prabhu 
Design - Yuvaraj and Saba 
Singers - Rahul Hariharan, Ananthu Nair , Joe Yamini G
Mixed and Mastered - Abin Pushpakaran
Helicam - Anand 
Light Unit - Raj Cine Service

Meenam Rasi (Pisces) March Month Predictions 2017 – Rasi Palangal