Saturday 25 February 2017

ADMK's triple split, who will succeed

ADMK's triple split, who will succeed
ADMK's triple split, who will succeed 
மூன்றாக பிரிந்த அதிமுக, முன்னிலை பெறுவது யார் 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதிமுக எனும் கட்சியை தன் அரசியல் ஆசான் எம்ஜிஆருக்குப் பின்னர் மாபெரும் கட்சியாக வளர்த்தெடுத்தார். கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்றரைக் கோடிக்கும் மேல் கொண்டு சென்றவர், 50 எம்பிக்களுடன் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக அதிமுகவை உயர்த்தினார். கட்சிக்குள் பல கோஷ்டிகள் உருவானாலும், எல்லாவற்றையும் தன் ஒற்றைப் பார்வையில் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. அதிமுகவை இரும்புக்கு கோட்டை என்றே அவர் அழைத்தார், அப்படியே உறுதியாக வைத்திருந்தார். 
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காட்சிகள் மாறத் தொடங்கியது. உயிரோடு இருந்தவரை ஜெயலலிதாவால் கண்டுகொள்ளப்படாமல் இருந்த அவரது அண்ணன் மகள் தீபா, அரசியல் அரங்கிற்கு வந்தார். தன் அத்தையின் இடத்தை நிரப்புவேன் என்றார். மற்றொரு பக்கம், 33 வருடமாக ஜெயலலிதா உடனேயே இருந்த சசிகலா, கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சசிகலாவை ஏற்காத நிர்வாகிகளும், தொண்டர்களும் மாற்று தலைவரை எதிர்பார்த்தனர். அவர்களின் ஒரே மாற்றாக இருந்தது தீபா மட்டுமே. ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்ற ஒரு தகுதியே பலருக்கு தீபாவின் தலைமையை ஏற்றுக்கொள்ள போதுமானதாக இருந்தது. 

எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்க யாரும் எதிர்பாராத வகையில் ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். புதிதாய் ஓர் அணி அவர் பின்னால் தொடக்கமானது. தீபா அணியைப் போல் அல்லாமல் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் என பலரும் ஓபிஎஸ் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தனர். இதனால் அடி  வாங்கியது சசிகலா தரப்பு மட்டுமல்ல தீபா தரப்பும் தான். ஒருகட்டத்தில் தீபாவின் கூடாரம் காலியாகும் நிலைக்கு சென்றது.  சுதாரித்துக் கொண்ட தீபா, ஓபிஎஸ்ஸை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்து அதிமுகவின் இரு கரங்களாக செய்லபடுவோம் என சொல்லி தன் இருப்பைக் காட்டிக் கொண்டார். 

ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று திடீரென புதிதாய் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பைத் தொடங்கி அதைக்கென பிரத்யேகமாக கொடியையும் வெளியிட்டுள்ளார் தீபா. இதன் மூலம் அதிமுக எனும் மாபெரும் கட்சி கிட்டத்தட்ட மூன்றாக பிரிந்துள்ளது. இதில் யார் கை ஓங்கும் என்பது இனிவரும் காலங்களில் தெரியும். தான் இருந்த வரை குடும்ப ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர் ஜெயலலிதா, ஆனால் அவரின் குடும்பத்தில் இருந்தே ஒருவர் அவர் பெயரில் ஓர் அரசியல் இயக்கத்தை தொடங்கி இருப்பது தான் காலத்தின் விளையாட்டு. 

After the sudden demise of late Chief Minister Jayalalithaa, her party has seen triple split now. Jayalalithaa made ADMK as third largest party in Indian Parliament, is challenged now by her own associates. Sasikala has acquitted the party, OPS has walked out and formed his own group. Jayalalithaa's niece Deepa has started her own political party named 'MGR Amma Deepa Peravai'. Since ADMK has a triple split now, we have to wait and see who could be the real winner of the battle. 

No comments:

Post a Comment