Hara Hara Mahadevaki Box Office Collection| Spyder Movie Box Office| Karuppan Box Office Report
Hara Hara Mahadevaki Box Office Collection| Spyder Movie Box
Office| Karuppan Box Office Report
Hara Hara Mahadevaki Box Office Collection| Spyder Movie Box
Office| Karuppan Box Office Report | Tamil Cinema News | Tamil Cinema Seithigal
| Tamil Cinema Hot News
தொடர் அரசு விடுமுறையை
குறிவைத்து இந்தவாரம் வெளிவந்த படங்கள் ஸ்பைடர், கருப்பன், ஹர ஹர மஹாதேவகி. இந்த மூன்று
படங்களில் எந்தபடம் ஹிட்டு எந்தபடம் ஃப்ளாப்பு வாங்க பார்க்கலாம்.
ஸ்பைடர் படம் தோராயமாக
145 கோடியில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில்
உருவான இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தெலுங்கு படங்களின் சூப்பர்
ஸ்டார் மஹேஷ்பாபு, ரகுல்ப்ரீத் சிங், தமிழ் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர்
நடிப்பில் வெளிவந்த இந்தப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்.
மிகப்பெரிய வசூலை
வாரிக்குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட படம் கடும் தோல்வியைத்தான் சந்தித்து. அமெரிக்காவில்
இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆந்திராவிலும், தெலுங்கானவிலும் கூட வெற்றியைத்
தக்க வைக்க முடியவில்லை. ஆந்திராவில் ஸ்பைடர் படத்தை தமிழ் டப்பிங் படமாகவே கருதியுள்ளனர்,
அதே போல் தமிழில் தெலுங்கு டப்பிங் படமாகவே பார்த்துள்ளனர். அதோடு படத்தின் திரைக்கதை
சுவாரஷ்யமில்லாமல் போனதால் இந்தப்படம் தோல்விப்படமாக கருதப்படுகிறது.
ஸ்பைடர் சென்னையை
பொறுத்தவரையில் தோராயமாக 2,45,80,000 வசூல் செய்ததாக கூறப்படுகிறது
முழுக்க முழுக்க
அடல்ட்ஸ் ஒன்லி படமாக விளம்பரம் செய்யப்பட்டு வெளிவந்துள்ள படம் ஹர ஹர மஹாதேவகி. கௌதம்கார்த்தி,
நிக்கிகல்ராணி ஆகியோர் நடித்த படம். வெளியான அன்றே கடு தோல்வியை சந்திக்கும் என விநியோகஸ்தர்களால்
எதிர்பார்க்கப்பட்ட படம். அதற்கு மாறாக இளைஞர்கள் இந்தப்படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து
வெற்றி பெற செய்திருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வசூலை
வாரிக்குவிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டால் இன்னும்
அதிகமாகன வசூலை இந்தப்படம் ஈட்டும். சென்னையில் 46,84,500 ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
விஜய்சேதுபதி ஆல்டைம்
விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நட்சத்திரம். இவரும், தான்யாவும் இணைந்து நடித்து வெளிவந்துள்ள
படம் கருப்பன். பார்த்துப் பார்த்து சலித்துபோன பழைய கதை தான் என்றாலும் வலுவான திரைக்கதையின்
மூலம் வெற்றிப்படமாகியிருக்கிறது. கல்யாண்மான புதுமண தம்பதிகளின் வாழ்க்கையை பதிவு
செய்து மண்சார்ந்த சில காட்சிகளை சென்டிமென்ட் கலந்து தந்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.
பெண்கள் குடும்பத்துடன்
சென்று ரசிக்கும் படியான கதையை ஒரு சின்ன ஆக்ஷன் காமெடி கலந்த படமாக கொடுத்துள்ளதால்
படத்திற்கு பலம். சிட்டியில் கொஞ்சம் வரவேற்பு குறைந்தாலும் மற்ற ஏரியாக்களில் நிச்சயம்
வெற்றிபெறும். எனவே கருப்பன் விஜய்சேதுபதியின் இன்னொரு வெற்றிப்படமாக கருதப்படுகிறது.
இதுவரை சென்னையில் கருப்பன் படம் தோராயமாக 80,20,000 ரூபாய் வசூல் செய்துள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi
Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities
Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe
us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment