Saturday, 12 November 2016

Amalapaul Feels- Behind the true reason

Amalapaul-Feels--Behind-the-true-reason/

Amalapaul Feels- Behind the true reason
அமலாபாலை பீல் பண்ண வைத்த சம்பவம்!
பெங்களூரில் உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏாியில் மஸ்திகுடி படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அந்த படத்திற்காக நாயகன் துனியா விஜய்யுடன் ஹெலிகாப்டரில் சண்டை காட்சியில் நடந்தபோது வில்லன் நடிகர்கள் உதய், அனில் இருவரும் தண்ணிரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகன் துனியா விஜய் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த நிலையில், நடிகை அமலாபால் அந்த சம்பவம் குறித்து டுவீட் செய்துள்ளார். அதில் உதய், அனில் ஆகியோரின் இறப்பு அவர்களின் குடும்பத்திற்கு பெரிய இழப்பாக இருக்கும் மஸ்திகுடி படப்பிடிப்பில் நடந்தது முட்டாள்தனமான செயல். அதனால்தான் அவர்களை இழக்க நேரிட்டுள்ளது. ஹெப்புலி என்ற படத்தில் அனிலுடன் நான் நடித்து பெருமையாக இருந்தது. இப்போது அவர் இல்லாதது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment