Tuesday, 28 February 2017

Director Bala and Jothika's Naachiyaar

Director Bala and Jothika's Naachiyaar
Director Bala and Jothika's Naachiyaar
பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் 'நாச்சியார்'
இயக்குனர் பாலா தாரை தப்பட்டை படத்துக்குப் பின்னர் ஜோதிகாவை மெயின் ரோலில் வைத்து எடுக்கும் படத்திற்கு நாச்சியார் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இப்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷும் முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். 
நாச்சியார் படத்திற்கு, இசையமைப்பாளராய் மீண்டும் பாலாவுடன் இணைகிறார் இளையராஜா. இந்த படத்தை தன் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மூலம் பாலவே தயாரிக்கிறார். நாச்சியார் எனும் வார்த்தை தற்போது இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ண்டிங்கில் உள்ளது. ஜோதிகாவின் கதாப்பாத்திரம் பெண் ரௌடி போன்றும், பாசமான அக்கா போன்றும் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்தும் நடிக்கும் ஜோதிகாவுக்கு இந்த படமும் வெற்றிப்படமாய் அமையும் என்பது உறுதியாகியுள்ளது.
 
Jothika's next movie with ace director  Bala is named as Naachiyaar. The first look of the movie has released and taken a leading position in Indian trending. Actor & Composer GV Prakash also roped in for an important role. Maestro Ilaiyaraja will be scoring music for this film while Bala is producing this film under his production house. 

Kumbha Rasi (Aquarius) March Month Predictions 2017 – Rasi Palangal

Makaram Rasi (Capricorn) March Month Predictions 2017 – Rasi Palangal

Dhanusu Rasi (Sagittarius) March Month Predictions 2017 – Rasi Palangal

Viruchigam Rasi (Scorpio) March Month Predictions 2017– Rasi Palangal

Thulam Rasi (Libra) March Month Predictions 2017 – Rasi Palangal

Songwriter affected by Asmita Mascara!

Songwriter affected by Asmita Mascara!
Songwriter affected by Asmita Mascara!
 
மஸ்காரா அஸ்மிதாவால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியர்!
 
அஸ்விகா கிரியேஷன்ஸ் Lion.பிறின்ஸ் தயாரிப்பில்,  சாம் இம்மானுவேல் இயக்கத்தில், புதுமுகங்கள் சபா, லுப்னாஅமீருடன், ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள படம், "கேக்கிறான் மேய்க்கிறான்".
இந்த படத்தில் பாடல்கள் எழுத அழைக்கப்பட்டார், பாடலாசிரியர் முருகன் மந்திரம். பாடல்களில் ஒரு பாடல் துள்ளல் பாடல். அறிமுக இசையமைப்பாளர், ஆதித்யா மகாதேவன் கொடுத்த அதிரடி துள்ளல் பாடல் மெட்டுக்கு,
"புத்தனுக்கு போதி மரம்
எனக்கு நீ தான் போதை மரம்..."
 
என்று பாடலின் பல்லவி வரிகளை எழுதி இருந்தார் முருகன் மந்திரம். பாடல் பதிவாகி படக்குழுவினர், தவிரவும்கேட்ட அனைவருக்கும் பிடித்த பாடலானது, புத்தனுக்கு போதி மரம். பாடல் வரிகளுக்காக முருகன் மந்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டார்.
ஆனால் தணிக்கைத்துறை, "புத்தனுக்கு போதி மரம்" என்ற வரியை பயன்படுத்த அனுமதி அளிக்காததால்,இயக்குநரும் இசையமைப்பாளரும் "மாமனுக்கு அத்தை மரம்" என்று முதல் வரியை மாற்ற மறுபதிவு செய்யப்பட்டதுபாடல்.
இதுபற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறும்போது, "புத்தனுக்கு போதி மரம்", என்ற வரி, "மாமனுக்கு அத்தைமரம்" என்று மாறியதில் வருத்தம் தான்.  ஒருவேளை என் வரிகளை விட மஸ்காரா அஸ்மிதா போட்ட ஆட்டம்தான் வரியை மாற்ற காரணமாக இருந்திருக்குமோ என நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவுக்குஅஸ்மிதாவை ஆட்டம் போட வைத்திருக்கிறார், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் போஸ். ¬¬
ஆனால் இந்த பாடலில் புத்தன் இல்லாத குறையை "எங்கேயும் நான் இருப்பேன்" படத்தில் இசையமைப்பாளர் ராம்இசையில், நான் எழுதி, விஜய் யேசுதாஸ் பாடியுள்ள "காற்றோடு தீபம் ஆடுதே" பாடல் தீர்த்து வைத்துவிட்டது. மிகமென்மையான மெலடியான "காற்றோடு தீபம் ஆடுதே"   பாடலில், ஒரு சரணத்தில்...
பூக்கள் இல்லை என்றால்
வாசம் இல்லையா?
புத்தன் இல்லை என்றால்
ஆசை இல்லையா?
 
என்று எழுதி இருப்பதில் மகிழ்ச்சி என்றார், முருகன் மந்திம். 

Kanni Rasi (Virgo) March Month Predictions 2017 – Rasi Palangal

Simmam Rasi (Leo) March Month Predictions 2017 – Rasi Palangal

Kadagam Rasi (Cancer) March Month Predictions 2017 – Rasi Palangal

Midhunam Rasi (Gemini) March Month Predictions 2017 – Rasi Palangal

Rishabam Rasi (Taurus) March Month Predictions 2017 – Rasi Palangal

Mesha Rasi (Aries) March Month Predictions 2017 – Rasi Palangal

Monday, 27 February 2017

Soundarya Rajinikanth Car Accident | Dhanush Rescue | ஆட்டோ மீது காரை மோதிய ரஜினி மகள்

Soundarya Rajinikanth Car Accident | Dhanush Rescue | ஆட்டோ மீது காரை மோதிய ரஜினி மகள்
Soundarya Rajinikanth Car Accident | Dhanush Rescue | ஆட்டோ மீது காரை மோதிய ரஜினி மகள்
ஆட்டோ மீது காரை மோதிய ரஜினி மகள்!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ஓட்டிவந்த கார், ஆழ்வார்பேட்டையில் சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் சிறிது காயமடைந்த தாகவும், இது குறித்து  நடிகர் தனுஷ்க்கு தகவல் அளிக்கப்பட்டபோது  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நடிகர் தனுஷ், ஆட்டோ ஓட்டுநரிடம் செய்த சமரச பேச்சுவார்த்தையை அடுத்து காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை.

'The song ‘Pori Vaithu’ will portray the soft side of a cop' says Vishal Chandrasekar, the composer of ‘Kuttram 23’

'The song ‘Pori Vaithu’ will portray the soft side of a cop' says Vishal Chandrasekar, the composer of ‘Kuttram 23’
“The song ‘Pori Vaithu’ will portray the soft side of a cop” says Vishal Chandrasekar, the composer of ‘Kuttram 23’
As the release date March 3rd is fast approaching, the excitement level for Arun Vijay – Mahima Nambiyar starrer ‘Kuttram 23’ is increasing to its peak. One of the main reasons for that excitement is, composer Vishal chandrasekar’s soulful melodies and theme based background scores. Produced by Inder Kumar under the banner ‘Redhan - The Cinema People’ and released by Across films in 300 theaters in Tamilnadu, the most expected Medical – Crime – Thriller Kuttram 23 is directed by Arivazhagan. 
“Arivazhagan sir a type of person who always gives attention to details, and he perfectly extracts what he wants from his technicians. I really feel proud to compose for his film. There are four songs in Kuttram 23 and among those, Pori Vaithu song is really a special one for me, because it portrays the soft side of a cop.  This song is built with common words related to cop such as Jail, Pistol, etc, but instead of using usual Tamil words for these terms, lyricists Viveka has gone for pure traditional Tamil words. The response that we get from the Audience for our Kuttram 23 album has really put me at the peak of happiness, and I am pretty confident that the BGMs will make the Audience  to travel along with the script” says Vishal Chandrasekar confidently.
"ஒரு போலீஸ்காரரின் மற்றொரு மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் பாடல் தான் 'பொறி வைத்து" என்று கூறுகிறார் 'குற்றம் 23' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் 
அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் மற்றும் மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'குற்றம் 23' திரைப்படம், வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பபை ஏற்படுத்தி வரும் இந்த படத்திற்கு, நிச்சயமாக விஷால் சந்திரசேகரின் இசை பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். 'ரெதான் - தி  சினிமா  பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து, மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும் இந்த  'குற்றம் 23' திரைப்படத்தை, 'அக்ராஸ் பிலிம்ஸ்'  தமிழகமெங்கும் 300 திரையரங்குகளில்  வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 
 "சிறு சிறு விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு காட்சியை மென்மேலும் அழகுப்படுத்தும் யுக்தியை நன்கு அறிந்தவர் இயக்குநர் அறிவழகன் சார். தனக்கு வேண்டியதை மிக தெளிவாக தன்னுடைய தொழில் நுட்ப கலைஞர்களிடம் இருந்து பெற்று கொள்ளும் அறிவழகன் சாரோடு இணைந்து பணியாற்றி இருப்பது எனக்கு பெருமையாக இருக்கின்றது. 'குற்றம் 23' படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள், அதில் 'பொறி வைத்து' பாடலுக்கு மட்டும் ஒரு தனித்துவமான சிறப்பு இருக்கின்றது.  ஒரு போலீஸ்காரரின் மற்றொரு மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் பாடல் தான் இந்த  'பொறி வைத்து. அவர் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் சிறைச்சாலை, துப்பாக்கி போன்ற சொற்களுக்கு, தூய தமிழாக்கம் கொடுத்து இந்த பாடலை  எழுதி இருக்கிறார் பாடலாசிரியர் விவேகா. குற்றம் 23 படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக இந்த படத்தின் பிண்ணனி இசை,  படம் பார்க்கும் ரசிகர் ஒவ்வொருவரையும், படத்தின் கதையோடு இணைந்து பயணிக்கச் செய்யும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.⁠⁠⁠⁠

Actress Sexual Harassment in Vikram Upcoming Movie

Actress Sexual Harassment in Vikram Upcoming Movie
Actress Sexual Harassment in Vikram Upcoming Movie 
விக்ரம் பிரபு படத்தில் பாலியல் தொல்லை!
பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லையில் அவர் நடந்து கொண்டவிதம் அனைத்து நடிகைகளிடமும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடித்து வரும் படம் ‘பக்கா’. இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி அருகே நடந்து வருகிறது. அறிமுக இயக்குனர் சூர்யா இயக்கி வருகிறார். ஆனந்தராஜின் மனைவியாக நடிப்பதற்கு ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுடன் ஒ.. போடு… பாடலுக்கு நடனமாடிய நடிகை ராணியை  ஒப்பந்தம் செய்தனர் படக்குழுவினர்.
நடிக்க வந்த நாள் முதலிருந்தே நடிகை ராணிக்கு பாலியல் சீண்டல் செய்து வந்திருக்கிறார் இயக்குனர் சூர்யா. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ராணி, 200க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகள், விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி ஆகியோரது முன்னிலையில் இயக்குனருக்கு கன்னத்தில் அறை விட்டுள்ளார். இதை அறிந்த தயாரிப்பு தரப்பு இயக்குனர் சூர்யாவிடம் ‘இனிமேல் இதுபோல நடந்து கொண்டால் படத்திலிருந்து விலகிக்கொள்கிறேன்’ என கையெழுத்து வாங்கியுள்ளது.

President Trump's take on Oscar mixup

President Trump's take on Oscar mixup
President Trump's take on Oscar mixup
ஆஸ்கர் சொதப்பலுக்கு காரணம் அதிபர் ட்ரம்பா?
நேற்று நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை ரொம்பவே சாடியும், கலாய்த்து பேசினார் ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல். விழா தொடக்கத்திலேயே, "இந்த நிகழ்வை உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான அமெரிக்கர்களும், 225 நாடுகளைச் சேர்ந்த மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மற்றும் இப்போது அவர்களுடைய வெறுப்பை நாம் சம்பாதித்திருக்கிறோம். அதிபர் டொனால்ட் ட்ரம்பை தேர்வு செய்ததன் மூலம் நாம் இரண்டு பட்டிருக்கிறோம்." எனக் கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான விமர்சாணத்தை வைத்தார். 
நிகழ்த்தி தொடங்கி இரண்டு மணி நேரம் கடந்த நிலையில், விழா மேடையிலேயே தன் மொபைல் எடுத்து ட்ரம்பின் த்விட்டேர் பக்கத்தில் நேரடியாகவே "ஹேய் ட்ரம்ப், இன்னும் முழுச்சிட்டு இருக்கீங்களா" ட்வீட் போட்டார். இவை எல்லாம் நடந்த பின்னரே, சிறந்த படத்துக்கான விருதை மாற்றி அறிவித்த குழப்பம் ஏற்பட்டது. 

இது குறித்து கருது தெரிவித்துள்ள அமெரிக்கா அதிரை ட்ரம்ப், "ஆஸ்கர் விழாவில் திரைப்படங்களை தவிர்த்து அரசியல் விஷயங்களில் எல்லாரும் மூழ்கி இருந்ததாலேயே இந்த கடைசி நேர கலாட்டா நடைபெற்றுள்ளது. என்னை விமர்சிப்பார்களுக்கு இது தான் கதி" என தன்னுடைய பாணியிலேயே ஜிம்மி மற்றும் ஆஸ்கர் குழுவினரை விமர்சித்துள்ளார். இனி தான் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பார்க்க மாட்டேன் என முன்னரே கூறியிருந்தார் அதிபர் ட்ரம்ப்.
 
After the mix-up in Oscar award ceremony, American Prez Trump has commented on it. "I think they were focused so hard on politics that they didn’t get their act together at the end,” Trump said from the Oval Office. Earlier in the awards, host Jimmy has criticised Trump on his recent controversial policies. 

Santhanam's ‘Bro’ song from ‘Server Sundaram’ is serving friendship

Santhanam's ‘Bro’ song from ‘Server Sundaram’ is serving friendship
சந்தானம் நடித்திருக்கும்  'சர்வர் சுந்தரம்'  படத்தின் 'ப்ரோ' பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது
 
சந்தானம் - வைபவி ஷண்டிலியா நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் திரைப்படம் 'சர்வர் சுந்தரம்'. இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் 'ப்ரோ' பாடல் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடம் பலத்த பாராட்டுகளை இந்த பாடல் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  'கெனன்யா பிலிம்ஸ்' சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து  இருக்கும் இந்த 'சர்வர் சுந்தரம்' படத்தில்,  நாகேஷ் பிஜேஷ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 
 
"சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு சிறப்பான பாடலை வைக்க வேண்டும் என்று நான்  எண்ணிய போது , என் மனதில் உதித்த முதல் கேள்வி, தாய், தந்தை  வரிசையில் ஏன் நண்பனை வைக்க கூடாது? என்பது தான். மாமா, மச்சி என்ற காலம் சென்று, தற்போது 'ப்ரோ' கலாச்சாரத்திற்கு நாம் மாறி இருக்கின்றோம் என்றால், அதற்கு ஒரு முக்கிய காரணம்  சந்தானம் ப்ரோ.  அதுமட்டுமின்றி, படப்பிடிப்பில் ஆரம்பித்து ரசிகர்கள் வரை பெருமபாலானோர் அவரை ப்ரோ என்று தான் அழைக்கின்றனர். அதனால் தான் நாங்கள் இந்த ப்ரோ பாடலை உருவாக்கினோம். வெளியான சில நாட்களிலேயே யுடியூபில் ஏறக்குறைய இரண்டு லட்சம் பார்வையாளர்களை எங்கள் ப்ரோ பாடல்  எட்டி வருவது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது " என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ஆனந்த் பால்கி
Santhanam's ‘Bro’ song from ‘Server Sundaram’ is serving friendship
 
The word ‘BROTHER’ may be originated from the language English, but the origin of the word ‘BRO’ that reveals the friendship has been derived only by Santhanam. Based on this most powerful and emotional word, the team Server Sundaram has released a special song called ‘BRO’ on 18th February, 2017 which is getting great response from the Audience. Produced by J Selvakumar under the banner Kenanya Films, the film ‘Server Sundaram’, directed by debutante Anand Balki has Santhanam - Vaibhavi Shandilya in the lead roles and Nagesh Bijesh in a crucial role. Songs and Background scores has been composed by Santhosh Narayanan. 
 
“Why don’t we include friends in close relatives category? This is the first thought I had in my mind while thinking for a special song for our Server Sundaram. We all know that, nowadays, the popular friendship terms Mama, Machi has been replaced by ‘BRO’, and one of the main reasons for that is Santhanam Bro. Right from the people in sets to the fans and General Audience, most of them are calling Santhanam as Bro only. Hence we have decided to go for this BRO song. We are very much happy to receive such huge appreciations from Audience, and the two lakh viewers on Youtube within a few days will witness it” says Director Anand Balki bro enthusiastically.

After Kamal, Vairamuthu now its actor Vivek's turn

After Kamal, Vairamuthu now its actor Vivek's turn
After Kamal, Vairamuthu now its actor Vivek's turn
கமல், வைரமுத்துவைத் தொடர்ந்து கவிதை எழுதிய நடிகர் விவேக்  
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் எழுதிய விமர்சனக்கவிதை, அணுகுண்டு கவிதை என பல கவிதைகள் வளம் வரத் தொடங்கி உள்ளன. முன்னர் கமலும், வைரமுத்துவும் தங்கள் பெயரில் வெளியான கவிதைகளைத் தாங்கள் எழுதவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விவேக் பெயரில் ஒரு சிறு கவிதை வளம் வர தொடங்கியுள்ளது. அந்த கவிதை இதோ..
காளைக்காக அன்று வாடிவாசல் !
கழனிக்காக இன்று நெடுவாசல்!
திறக்கட்டும் அரசின் இதயவாசல்!
அதுவரை உழவனின் வாழ்வு ஊசல்.


இது உண்மையிலேயே நடிகர் விவேக் எழுதியது தானா என நாம் விசாரணையில் இறங்கியபோது தான் உண்மை புரிந்தது. இந்த கவிதையை நடிகர் விவேக் அவர்களே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டு நெடுவாசலில் தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில், இளைஞர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தார் விவேக்.

Recently actor Kamal and lyricist Vairamuthu have clrafied that some false poems criticizing the Government are circulating in social medias in their names. Actor Vivek has written a small poem and showed his support for the protest in Neduvasal by youngsters.

Super star Rajni blessed Vignesh Shivan

Super star Rajni blessed Vignesh Shivan
Super star Rajni blessed Vignesh Shivan
ரஜினியிடம் ஆசி வாங்கிய விக்னேஷ் சிவன்
நடிகர் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் என்ற தன்னுடைய புது படத்திற்கான வேலைகளில் ஈடுப்பட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவின் நெருங்கிய நண்பரான விகனேஷ் இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷை தேர்ந்தெடுத்து ஒப்பந்தம் செய்திருக்கார். தன்னையோட ஆஸ்தான கதாநாயகி, தோழியை விட்டுட்டு ஏன் வேறொரு நடிகையை விக்னேஷ் பண்ணாருன்னு இண்டஸ்ட்ரில இன்னமும் சிலர் யோசிச்சிட்டு இருக்காங்க. 
தீவிர சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகரான விக்னேஷ், படத்தோட வேலைகள்ல பிசியா இருந்தாலும் எப்டியாச்சும் ரஜினியை சந்திச்சி ஆசி வாங்கணும்னு காத்திட்டு இருந்தார். அவருக்கு இன்ப அதிர்ச்சி தர்ற வகையில் விக்னேஷ வர வழைத்து அவருடன் கொஞ்சம் நேரம் செலவிட்டு தன்னோட ரசிகரின் ஆசைய நிறைவேற்றியுள்ளார் நம்ம சூப்பர் ஸ்டார். அப்போ, சூப்பர் ஸ்டாருக்காக தான் ரெடி பண்ண கதையை சொல்லி இம்ப்ரஸ் பண்ணியிருக்கார் விக்னேஷ். நேரம் கிடைக்கும்போது மீண்டும் சந்திச்சி விவாதிப்போம்னு பாசிட்டிவான பதிலை சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்குறதால குஷில இருக்காராம் விக்னேஷ். 
 
Director Vignesh Shivan is busy in his new film 'Thaana serndha kottam' with actor Surya. He is a big fan of Super Star Rajni. Vignesh was trying to meet his star and seeking his blessing. As his dream come true, Rajni gave him an appointment and blessed him for the movie's success.