Tuesday 28 February 2017

Songwriter affected by Asmita Mascara!

Songwriter affected by Asmita Mascara!
Songwriter affected by Asmita Mascara!
 
மஸ்காரா அஸ்மிதாவால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியர்!
 
அஸ்விகா கிரியேஷன்ஸ் Lion.பிறின்ஸ் தயாரிப்பில்,  சாம் இம்மானுவேல் இயக்கத்தில், புதுமுகங்கள் சபா, லுப்னாஅமீருடன், ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள படம், "கேக்கிறான் மேய்க்கிறான்".
இந்த படத்தில் பாடல்கள் எழுத அழைக்கப்பட்டார், பாடலாசிரியர் முருகன் மந்திரம். பாடல்களில் ஒரு பாடல் துள்ளல் பாடல். அறிமுக இசையமைப்பாளர், ஆதித்யா மகாதேவன் கொடுத்த அதிரடி துள்ளல் பாடல் மெட்டுக்கு,
"புத்தனுக்கு போதி மரம்
எனக்கு நீ தான் போதை மரம்..."
 
என்று பாடலின் பல்லவி வரிகளை எழுதி இருந்தார் முருகன் மந்திரம். பாடல் பதிவாகி படக்குழுவினர், தவிரவும்கேட்ட அனைவருக்கும் பிடித்த பாடலானது, புத்தனுக்கு போதி மரம். பாடல் வரிகளுக்காக முருகன் மந்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டார்.
ஆனால் தணிக்கைத்துறை, "புத்தனுக்கு போதி மரம்" என்ற வரியை பயன்படுத்த அனுமதி அளிக்காததால்,இயக்குநரும் இசையமைப்பாளரும் "மாமனுக்கு அத்தை மரம்" என்று முதல் வரியை மாற்ற மறுபதிவு செய்யப்பட்டதுபாடல்.
இதுபற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறும்போது, "புத்தனுக்கு போதி மரம்", என்ற வரி, "மாமனுக்கு அத்தைமரம்" என்று மாறியதில் வருத்தம் தான்.  ஒருவேளை என் வரிகளை விட மஸ்காரா அஸ்மிதா போட்ட ஆட்டம்தான் வரியை மாற்ற காரணமாக இருந்திருக்குமோ என நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவுக்குஅஸ்மிதாவை ஆட்டம் போட வைத்திருக்கிறார், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் போஸ். ¬¬
ஆனால் இந்த பாடலில் புத்தன் இல்லாத குறையை "எங்கேயும் நான் இருப்பேன்" படத்தில் இசையமைப்பாளர் ராம்இசையில், நான் எழுதி, விஜய் யேசுதாஸ் பாடியுள்ள "காற்றோடு தீபம் ஆடுதே" பாடல் தீர்த்து வைத்துவிட்டது. மிகமென்மையான மெலடியான "காற்றோடு தீபம் ஆடுதே"   பாடலில், ஒரு சரணத்தில்...
பூக்கள் இல்லை என்றால்
வாசம் இல்லையா?
புத்தன் இல்லை என்றால்
ஆசை இல்லையா?
 
என்று எழுதி இருப்பதில் மகிழ்ச்சி என்றார், முருகன் மந்திம். 

No comments:

Post a Comment