Sunday 26 February 2017

Vijay and Ajith’s Director Movie Releases on June 23

Vijay and Ajith’s Director Movie Releases on June 23
Vijay and Ajith’s Director Movie Releases on June 23
ஜூன் 23ம் தேதி வெளியாகும் ஏ.ஆர்.முருகதாஸ் படம்!
மகேஷ்பாபு, பரத், ராகுல்ப்ரீத்சிங், ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்கும் படம் ‘சம்பவாமி’. இப்படத்தை இயக்கி வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
உளவுத்துறை அதிகாரியாக நடித்து வரும் மகேஷ்பாபு. முதல் முறையாக இப்படத்துக்கு தமிழிலும் டப்பிங் பேசவிருக்கிறார் மகேஷ்பாபு.
சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment