Tuesday 28 February 2017

Sasikala vs Cyanide Mallika

Sasikala vs Cyanide Mallika
Sasikala vs Cyanide Mallika
சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
பிப்ரவரி 15ம் தேதி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவை சந்திக்க, தினந்தோறும் வழக்குரைஞர்கள், கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் என வந்த வண்ணம் இருந்தனர். இதுகுறித்து மற்ற கைதிகள் இது குறித்து பிரச்னை செய்தனர்.
பொதுவாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதியை, ஒரு வாரத்துக்கு 3 முறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும். அதுவும் அதிகபட்சம் 1 மணி நேரம் தான். ஆனால், சசிகலாவை தினந்தோறும் ஏராளமானோர் சந்தித்து வந்தனர். இந்த சந்திப்பு 2 லிருந்து 3 மணிவரை  நிகழ்ந்தது.
இதனால் சசிகலாவின் உறவினர்கள் மட்டுமே அவரை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த வாரம் பெங்களூர் சிறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி ஆகியோருக்கு சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.
மேலும் பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா அடைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்து அறையில் சயனைட் மல்லிகா என்ற தொடர் கொலைக் குற்றவாளி அடைக்கப்பட்டிருந்தார். இது குறித்து சமூக தளங்களிலும் செய்திகள் பரவியது. இந்நிலையில் மல்லிகா பெல்காம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

No comments:

Post a Comment