Sunday, 26 February 2017

Race Cars Ceased!

Race Cars Ceased!
Race Cars Ceased!
ரேஸ் கார்கள் பறிமுதல்!
பைக், கார் ரேஸ் என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் ‘தல’ அஜித் தான். ‘F1’ ரேஸ் வரை சென்று சாதனை படைத்தவர். அவர் கலந்து கொண்ட எல்லாமே சட்டத்திற்குட்பட்டது தான். அதோடு ஹெல்மெட் அணிவதின் அவசியத்தையும் வலியுறுத்தி வருபவர். ஆனால் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், 10க்கும் மேற்பட்ட  அதி நவீன ரக பந்தய கார்கள்  ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து, மாமல்லபுரம் நோக்கி சீறிப்பாய்ந்தன.
சீறிப்பாய்ந்த கார்களில் இருந்து வந்த அதிக சத்தம் கேட்டு அப்பகுதிகளில் வசித்தோர் அதிர்ச்சியடைந்து, வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். இந்நிலையில், உத்தண்டி சுங்கச் சாவடியில் 10 கார்களை, போலீசார் மடக்கி பிடித்தனர்; சில கார்கள், தப்பிவிட்டன. பந்தய கார்களில் இருந்து இறங்கி வந்தோர், 'எங்கள் காரை, எப்படி மடக்கி பிடிக்கலாம்' என, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கே பதற்றம் ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment