Thursday, 23 February 2017

Vishal Battle for Producer Council

Vishal Battle for Producer Council
Vishal Battle for Producer Council
விஷால் வெற்றி பெறுவாரா?
ஓய்வு பெற்ற நீதிபதியும் தமிழ்த்திரைப்பட தேர்தல் அதிகாரியுமான திரு . ராஜேக்ஷ்வரன் தலைமையில் இன்று காலை 11மணி அளவில் ‘பிலிம் சேம்பர்’ அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் 27.02.2017 அன்று வரை உறுப்பினர்களுக்கு ஏதேனும்  சந்தேகம் ஏற்படுமாயின்  புகார் கொடுக்கலாம் என்றும், 28.02.2017 -ல்  புகார்களுக்கு பதில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு வாபஸ் பெற கடைசி நாள் 01.03.2017. ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை  உட்லண்ட்ஸ் திரையரங்கில் தேர்தல் நடைபெறும் அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இக்கூட்டத்தில் பல மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
விஷால் அணி சார்பில் பிரகாஷ் ராஜ் ,ஆர்.பார்த்திபன்,  K.E.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ் ,SR.பிரபு ,AL உதயா ஆகியோருடன்  ராதாகிருஷ்ணன், கேயார்  உட்பட பலர் கலந்து கொண்டனர். பரப்பரப்பாக நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்ற விஷால் அணியினர் இந்ததேர்தலிலும் வெற்றிபெற கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். விஷால் அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுதிருந்து தான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment