Thursday, 23 February 2017

Modi's Coimbatore visit creates tension

Modi's Coimbatore visit creates tension
Modi's Coimbatore visit creates tension
பலத்த எதிர்ப்புகளை மீறி 'கலவர' கோயம்புத்தூர் வரும் மோடி
பிரதமர் நரேந்திர மோடி நாளை தனி விமானம் மூலமாக கோயம்புத்தூர் வர இருக்கிறார். ஈஷா யோகா அமைப்பு வருடந்தோறும் சிவராத்திரியை சிறப்பாக கொண்டாடுவர். இதன் தலைவர் ஜக்கி வாசுதேவ், யோகா, தியானம் போன்ற விஷயங்களை உலகெங்கிலும் பரப்பிட்டு இருக்கார். ஆதி யோகியான சிவனுக்கு 112 ஆதி உயர பிரம்மாண்ட சிலையை வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவே கோயம்புத்தூர் வருகிறார் பிரதமர் மோடி. 
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தின் மீதும் அதன் தலைவர் ஜாக்கி வாசுதேவ் மீதும் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஜக்கி அவர்கள் மீது தன மனைவியை கொலை செய்த கிரிமினல் வழக்கு இன்னும் முடித்து வைக்கப் படாமல் உள்ளது. மேலும், அப்பாவி பெண்களை மயக்கி மொட்டை அடித்து துறவறம் மேற்கொள்ள வற்புறுத்துவதாகவும், அவர்கள் தங்களுடைய பெற்றோரைக் கூட பார்க்க அனுமதிப்பதில்லை என பல்வேறு புகார்கள் சொல்லப்பட்டு வந்தன. 

இப்போது, ஆதி யோகியின் சிலை அமைக்கப் பட்டு இருக்கும் இடத்தைப் பற்றிய சர்ச்சைகள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலை அமைந்துள்ள அந்த இடமானது, வனப்பகுதி ஆகும், யானைகளின் வழித்தடமாக முன்னர் இருந்தது. ஈஷா அமைப்பினால் அந்த இடம் ஆக்கிரமிக்கப் பட்ட பின்னர் பூர்வகுடிகள் அந்த இடத்திற்கு செல்லவே அனுமதிக்கப் படுவதில்லையாம். இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் இடத்தை தங்கள் கட்டுப்பாட்துக்குள் கொண்டு வந்து அங்கே சிலையை பிரதிஷட்டை செய்து அதை திறந்து வைக்க நாட்டின் பிரதமரையே அழைக்கும் ஈஷாவின் செயல் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஈஷா நடத்தும் இந்த விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என பல்வேறு அமைப்புகளும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளன. ஆனால், இதை எதையுமே கண்டு கொள்ளாத பிரதமர் மோடி நாளை நடக்க இருக்கும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளையங்கிரி செல்கிறார். 

Despite the allegations against Isha foundation and its founder Jakki Vasudev, Prime Minister Narendra Modi will unveil a 112-ft tall face of Adiyogi – the Source of Yoga, designed and consecrated by Sadhguru Jakki Vasudev, founder on the occasion of Mahashivaratri falling on February 24 at the Isha Yoga Center, Coimbatore, Tamil Nadu. The statue is said to be installed in a place which was earlier a forest and hundreds of trees were cut. Modi will reach Coimbatore by flight, from there he will reach the venue by helicopter. 

No comments:

Post a Comment