Sunday 26 February 2017

Super comeback of Nokia 3310

Super comeback of Nokia 3310
Super comeback of Nokia 3310
மீண்டும் களம் இறங்கிய 'சூப்பர் ஸ்டார்' நோக்கியா 3310
தற்போது நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்களுக்கு எல்லாம் முன்னோடி என்றால் அது நோக்கியா வெளியிட்ட பேசிக் மாடல்கள் தான். கடந்த 2000ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நோக்கியா 3310 என்பது வெறும் குரல் அழைப்பு (வாய்ஸ்), எஸ்எம்எஸ் வசதி மட்டுமே கொண்ட  பேசிக் மாடல் ஆகும். ஆனால் அதன் பேட்டரியோ ஒருமாதத்திற்கு மேலும் நீடிக்கும் வகையில் இருந்தது. எத்தனை முறை கீழே போட்டாலும் உடையாத அளவிற்கு உறுதித் தன்மையும் கொண்டிருந்தது. காலப்போக்கில், ஸ்மார்ட் போன் வருகையால் இந்த பேசிக் போன்கள் கிட்டத்தட்ட சந்தையில் இருந்தே மறைந்து விட்டன. 
சில மணிநேர உபயோகத்திற்குப் பின் சார்ஜ் போட வேண்டிய கட்டாயத்தில்  உள்ள ஸ்மார்ட் போன் பயனர்கள், அந்த கால நோக்கியா 3310 பற்றி அவ்வப்போது சிலாகிப்பதுண்டு. அதை மையப்படுத்தியே பல மீம்ஸ்களும் வளம் வந்தன. இத்தகைய வரவேற்பை கண்ட நோக்கியா மீண்டும் தங்களின் 3310 மாடலை புத்தம் புது அம்சங்களோடு அறிமுகப்படுத்தி யுள்ளது. 
பார்ப்பதற்கு பழைய வெர்ஷனிலேயே உள்ளது. ஆனால், கீபேட் சிறியதாக்கப்பட்டு 2 அங்குல கலர் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக 2.0 மெகா பிக்சல் கேராவும், மெமரி கார்டு ஸ்லாட்டும் பொருத்தப் பட்டுள்ளது. பழைய நோக்கியா 3310 போன்றே புது மாடலும் ஒரு மாதத்திற்கும் மேலே தாக்குப்பிடிக்கும் பாட்டரியைக் கொண்டுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலே, நோக்கியா 3310 போனில் இருந்த 'பாம்பு விளைட்யாடு'ம், புதியதாய் அப்டேட் ஆகி இதனுடன் இணைக்கப் பட்டுள்ளது. எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன் இருந்தாலும் பேக்கப்பிற்காக ஒரு பேசிக் போன் நிச்சயம் தேவைப்படும். அதை தங்களின் புது நோக்கியா 3310 மூலம் சந்தையைக் கைப்பற்ற நோக்கியா திட்டமிட்டுள்ளது. இந்திய ரூபாயில் 3500க்கு இந்த போன் சந்தைகளில் கிடைக்கும். 

Nokia has resurrected the Nokia 3310, one of the world's most popular call-and-text handsets before touchscreen smartphones. t has a full color screen, a huge upgrade from the graphic LCD panel, month-long battery, 2 MP camera, web browsing. It is expected to capture the market of basic mobile. The phone is available for Rs.3500 in India.

No comments:

Post a Comment