Jayalalithaa's niece Deepa's new political party
Jayalalithaa's niece Deepa's new political party
மறுபடியும் முதலில் இருந்தா? அதிர்ச்சியில் ஜெ.தீபா ஆதரவாளர்கள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தன் அத்தையின் மறைவுக்குப் பின்னால் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வந்தார். சசிகலாவின் தலைமையை ஏற்காத அதிமுகவின் பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீபாவை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் பிறந்த நாள் அன்று அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தன்னுடைய அரசியல் பிரவேச முடிவை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிரவரி 24ம் தேதி அறிவிப்பதாக கூறி இருந்தார்.
சற்றும் எதிர்பாராத வகையில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா இடையே மோதல் வெடித்தது. அதன் காரணமாக ஓபிஸ் தனி அணியாக செயல்பட்டார். பின்னர் அதிமுக நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணியில் இடம் பெற ஆரம்பித்தனர். மக்களும் ஓபிஎஸ் அணி ஆதரவு மனநிலையிலேயே இருந்தனர். தனியாக செயல்பாட்டுக்கு கொண்டிருந்த தீபாவையும் தன்னுடைய அணியில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார் பன்னீர் செல்வம். சில நாட்களில், பலரும் எதிர்பார்த்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு, சசிகலா சிறை செல்ல நேர்ந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியான அன்று ஓபிஎஸ் அவர்கள் அதிமுக கட்சியினர் அனைவரும் தன்னோடு ஒன்றாக இணைந்து மக்கள் பணியாற்றுமாறும் அதிமுக என்ற மாபெரும் கட்சியை அழியாமல் காக்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார். அன்றிரவு ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் ஓபிஎஸ். அப்போது தீபாவும் அங்கு வந்திருந்தார். பின்னர் ஓபிஎஸ்ஸை அவருடைய வீட்டில் சென்று சந்தித்து தன ஆதரவை கூறி, தாங்கள் இருவரும் அதிமுகவின் இரு கரங்களாக செயல்படுவோம் என பேசினார்.
இதற்கிடையில், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டே ஜெயலலிதாவின் பிறந்தநாளான நாளை வெளிப்படுத்தப் போவதாக அறிவித்து தன ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் தீபா. ஓபிஎஸ்ஸுடன் இணைந்து அதிமுகவை மீட்டெடுப்பாரா அல்லது தனியே புதுக் கட்சியை ஆரம்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மீண்டும் மீண்டும் குழப்பாமல் தெளிவாக ஒரு முடிவை தீபா நாளை வெளிப்படுத்துவார் என்று அவர் ஆதரவாளர்கள் உள்ளனர்.

Late Chief minister Jayalaithaa's niece J.Deepa has expressed her wish to join politics to fill the void that Jayalalithaa has left behind after her demise. Deepa earlier met OPS and told media that they both will be functioning two hands of party. However, Deepa has announced that she will clarify her political stand tomorrow which is marking Jayalalithaa's 68th birthday. Deepa's supporters are expecting that she may launch a new political party.
No comments:
Post a Comment