Sunday 26 February 2017

Amala Paul replaces Nayanthara

Amala Paul replaces Nayanthara
Amala Paul replaces Nayanthara
நயன்தாராவின் வாய்ப்பைப் பறித்த அமலா பால் 
நடிகை அமலா பால் திருமணம், விவாகரத்து என பர்சனல் வாழ்க்கையில் கொஞ்சம் தடுமாற்றங்களை சந்தித்து வந்தாலும், அடுத்தடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தனுஷின் வேலையில்லா பட்டதாரி-2யில் நடித்து வரும் அமலா அடுத்ததாக ஒரு மலையாள ரீமேக்கில் நடிக்கவுள்ளார். 
மலையாளம், தமிழில் புகழ்பெற்ற இயக்குனர் சித்திக் எடுத்த மலையாள படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி மற்றும் நயன்தாரா நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டாகி இருந்தது. இதன் தமிழ் ரீமேக்கை தற்போது தானே  இயக்கவுள்ளார் சித்திக். மம்மூட்டி நடித்த ஹீரோ வேடத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த் சாமி. ஹீரோயினாக நயன்தாராவே நடிப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா கேரக்டரில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் நடிக்கவுள்ளது குறிப்பிடத் தக்கது. 

Actress Amala Paul has replaced actress Nayanthara in Tamil remake of Bhaskar the Rascal. Actor Arvindswami was already roped in for Mammooti's role. Director Siddique himself directing the Tamil remake.   Actress Meena's daughter baby Nainika also in the cast list of the movie. 

No comments:

Post a Comment