Monday, 27 February 2017

Blunder mistake in Oscar award, suspense climax

Blunder mistake in Oscar award, suspense climax
Blunder mistake in Oscar award, suspense climax
தவறாக கொடுத்த விருது, ஆஸ்கர் மேடையில் தள்ளு முள்ளு கிளைமாக்ஸ்! 

திரைப்படங்களில் மிக உயரிய விருது என போற்றப்படும் ஆஸ்கர் விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. வழக்கம் போலவே பல சுவாரஸ்ய நிகழ்வுகள் ஆஸ்கர் மேடையில் நடந்தன. சிறந்த நடிகர், நடிகர், இயக்குனர் என பல விருதுகள் அளிக்கப்பட்டான. இறுதியில் சென்ற ஆன்ட்ரிக்கான சிறந்த படத்தின் விருதை ஃபாயே டுனாவே எனும் பலம் பெரும் நடிகை அறிவித்தார். அவரிடம் கொடுக்கப்பட்ட கவரில் 'நடிகை எம்மா ஸ்டோன் - லா லா லேண்ட்' என குறிப்பிடப்பட்டு இருந்தது. சற்று குழப்பம் அடைந்த ஃபாயே, சிறந்த திரைப்படம் எனும் விருதைப்பெறுவது லா லா லேண்ட் என அறிவித்தார்.

மேடைக்கு வந்த லா லா லேண்ட் குழுவினர் அந்த விருதை பெற்றுக் கொண்டு அங்கே மேடையிலேயே கொண்டாடினர். அப்போது அந்த அவார்ட் கொடுத்த கவரைப் பார்த்த லா லா லேண்ட் படத்தின் தயாரிப்பாள ஜோர்டான் அது 'சிறந்த நடிகைக்கான விருது என்பதை உணர்ந்து, ஆஸ்கர் அமைப்பாளர்களிடம் கூற, அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து உண்மையில்  சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப் பட்டது 'மூன் லைட்' என தெரிவித்தனர். சற்றும் தாமதிக்காத ஜோர்டான் இதை மேடையில் அறிவித்தார். பின்னர் அந்த விருது மூன் லைட் படக்குழுவினருக்கு வழங்கப்பட்டது. 

இதனால், பரபரப்பானது விழா அரங்கம். விருது ஒன்று தவறுதலாக கொடுக்கப் பட்டு மேடையிலேயே மாற்றி அறிவிக்கப்பட்டது 89 வருட ஆஸ்கர் நிகழ்வில் முதல்முறை ஆகும். அதற்காக விழா அமைப்பு மன்னிப்பு கேட்டுள்ளது. தயாரிப்பாளர் ஜோர்டானின் நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர். 
First time in the history of Oscar awards, a award was presented incorrectly. "Moonlight" was named Oscar winner for best picture only after "La La Land" was announced first. The organisers have apologized for the error that created the chaos on the stage. 

No comments:

Post a Comment