Baashaa makes a digital comeback
Baashaa makes a digital comeback
மீண்டும் திரைக்கு வரும் பாட்ஷா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவின் சிம்மாசனத்தில் இன்றைக்கு வரைக்கும் அமர்ந்திருக்கும் படம் 'பாட்ஷா'. நொடிக்கு நொடி மாஸ், ஆக்ஷன் என ரஜினியின் விஸ்வரூப இமேஜுக்கு பாட்ஷாவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். பாட்ஷா வெற்றி விழாவில் தான் ரஜினியின் அரசியல் பேச்சும், சூட்டைக்கிளப்பி திமுக ஆட்சிக்கு வர உதவியது. தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என டப் செய்யப்பட்டு ஹிட் அடித்தது.
இன்றைக்கும் பாட்ஷாவை டிவியில் போட்டால் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில இருக்கிறது. எந்த ஒரு ரஜினி ரசிகரும் பாட்ஷா படத்தை குறைந்தது 10 முறைக்கு மேலாவது பார்த்திருப்பார். அப்படிப்பட்ட மாஸ் திரைப்படமான பாட்ஷா, இந்த மார்ச் மாதத்தில் மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. பாட்ஷா ஹிந்தி வெர்ஷன் ஏற்கனவே டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. 22 வருஷமாக ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் படம்,எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. மார்ச்-ல் இன்னொரு திருவிழாவிற்கு தயாராகி வருகிறது தமிழ் சினிமா என்றே சொல்ல வேண்டும்.
Super Star Rajni's blockbuster hit movie 'Baashaa' is making its comeback in digital format in March across Tamil Nadu. Baashaa is still grabs the top position in TRP rating whenever telecasted in TV. Fans are gearing up to celebrate the movie's comeback after 22 years.
No comments:
Post a Comment