Thursday 23 February 2017

WhatsApp's new cool feature.

WhatsApp's new cool feature.
WhatsApp's new cool feature.
வாட்சாப் அப்டேட் பண்ணிடீங்களா?
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் உபயோகிக்கும் ஒரு அப்ளிக்கேஷன் என்றால் அது வாட்சாப் ஆக தான் இருக்கும். டெக்ஸ்ட் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட இந்த ஆப், போகப் போக பலவித அம்சங்களுடன் அப்டேட் ஆகி வந்தது. தற்போது ஸ்டேடஸ் எனும் நிலைத்தகவல்-ஐ மக்கள்  ரசிக்கும் வண்ணம் உருவாக்கியுள்ளது வாட்சாப். 
இந்த புதிய அப்டேட் மூலம் நீங்கள் உங்களுக்கு பிடித்த படத்தையோ, வீடியோவையோ ஸ்டேடஸ் ஆக வைக்க முடியும். இந்த ஸ்டேடஸ் ஆனது 24 மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம், தினம் தினம் புதுப்புது ஸ்டேடஸ் போட பயனர்களை தூண்டுகிறது வாட்சாப். மேலும், இந்த ஸ்டேடஸ்களை உங்கள் நண்பர்கள் யார் யார் பார்த்திருக்கிறர்கள் எனவும் நீங்கள் பார்க்க முடியும். தங்களின் ஸ்டேடஸ்-ஐ யார் பார்க்கலாம், யார் பார்க்கக் கூடாது என்ற பிரைவஸி செட்டிங்ஸ்ஸும் செய்து கொள்ள முடியும்.
வாட்சாப்பின் இந்த புது வசதியானது அதன் போட்டியாளரான ஸ்நாப்சாட்டிற்கு பெரும் நெருக்கடியைத் தரும். ஏனெனில், ஸ்நாப்சாட்டில் 10 நொடி வீடியோ மட்டுமே அப்லாட் செய்ய முடியும், ஆனால் வாட்ஸாப்பில் 45 நொடி வீடியோ வரை அப்லாட் செய்ய முடியும். இருந்தாலும், வாட்ஸாப்பில் உங்கள் நண்பர் அப்லாட் செய்யும் போட்டோ மற்றும் வீடியோக்களை உங்களால் சேமித்து வைக்க இயலாது.  
 
WhatsApp has introduced a new Status feature to all users. Instead of the text-only status that lets people know whether you're busy or available to chat, the new Status feature uses photos, text, emojis and sketches to show what you're doing. If that sounds familiar, it could be because it appears to be inspired by Snapchat. The status will disappear within 24 hours, and you can also view how many friends have seen your status. However one cannot save other's status into their device. 

No comments:

Post a Comment