Sunday 26 February 2017

Stalin's Delhi visit challenges Thirunavukkarasu

Stalin's Delhi visit challenges Thirunavukkarasu
Stalin's Delhi visit challenges Thirunavukkarasu
டெல்லி சென்று திருநாவுக்கரசர் மீது புகார் ஸ்டாலின் 
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் தமிழக சட்டசபையில் நடந்த கலாட்டா குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புகார் அளிக்க டெல்லி சென்றிருந்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதி பற்றி நலம் விசாரித்த சோனியாவிடம், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் பற்றி புகார் அளித்திருக்கிறார் ஸ்டாலின். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போதே அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வந்தார் திருநாவுக்கரசர். ஜெயலலிதாவை நலம் விசாரிப்பதற்காக ராகுல் காந்தியை சென்னை வர ஆலோசனை தந்ததும் திருநாவுக்கரசர் தான். பாஜக தலைமை அதிமுகவை நெருங்கி வருவதை தடுக்கவே திருநாவுக்கரசர் இச்செயல்களில் ஈடுபட்டார் என கூறினார் காங்கிரஸ் காரர்கள். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெபிடுப்பில் காங்கிரசின் நிலை கேள்விக்கு குறியானது. 

இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்தும், ஆரம்பகாலங்களில் அதிமுகவில் திருநாவுக்கரசர் இருந்ததாலும் அவர் திமுகவோடு காங்கிரசை கூட்டணி அமைக்க விட மாட்டார் என்று கருதியே அவர் மீது புகாரை அளித்துள்ளாராம் ஸ்டாலின். இருந்தாலும், திருநாவுக்கரசர் ராகுல் காந்தியால் தேர்வு செய்யப்பட்டவர். ராகுலின் எண்ணப்படியே தமிழகத்தில் நடக்கிறார் என தமிழா காங்கிரசார் கூறுகிறார்கள். தமிழக உள்ளாட்சியைத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. அதற்குள், சோனியா - ஸ்டாலின் சந்திப்பால் திருநாவுக்கரசர் பதவிக்கு ஆபத்து வருமா என்பது ஓரிரு வாரத்தில் தெரிந்துவிடும். 
DMK's leader Stain was in Delhi recently to explain President Pranabh Mukherjee about the recent events in Tamil Nadu assembly. During his Delhi visit, Stalin has also called on Congress leader Sonia Gandhi and discussed on Tamil Nadu's political movements. He also expressed his views on Congress' TN Chief Thirunavukkarasu and given pressure to move him from the head post as his recent activities are more favour of ADMK.

No comments:

Post a Comment