Friday 24 February 2017

Jolly chat with Trisha | த்ரிஷாவுடன் ஓர் ஜாலி உரையாடல்

Jolly chat with Trisha | த்ரிஷாவுடன் ஓர் ஜாலி உரையாடல்
Jolly chat with Trisha | த்ரிஷாவுடன் ஓர் ஜாலி உரையாடல்
நடிகை த்ரிஷா நேற்றைக்கு ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் ஜாலியாக கலந்துரையாடினார். அதில்  சுவாரஸ்யமான சில பதில்கள் இதோ..

எப்படி இருக்கிறீர்கள்?
அமைதியாக இருக்கிறேன் :-)

சாமி 2 பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?
வரும் ஜூன் முதல் 

நடிகர் நிவின் பாலியுடன் எப்படிப் பட்டவர்?
அவருடன் இன்னும் நடிக்க ஆரம்பிக்கவில்லை. எங்கள் பட ஷூட்டிங் தொடங்கியதும் கேளுங்கள் சொல்கிறேன் 

டிவி சீரியல் பார்ப்பதுண்டா?
ஆங்கில ரொமான்ஸ், காமெடி சீரியல்களில் நெட்பிளிக்சில் பார்த்து மூழ்கிடுவேன் 

மீண்டும் அஜித்துடன் எப்போது நடிக்க உள்ளீர்கள்?
நானும் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

நம்ம சென்னையில் உங்களுக்குத் புடித்த இடம் எது?
கண்டிப்பா என் வீடு தான் 

தங்களின் விருப்பமான சுற்றுலாத் தளம் என்ன?
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் 

தியேட்டர் போய் படம் பாப்பீங்களா?
தியேட்டர் போயும்  பார்ப்பேன், இல்லைனா என் வீட்டு ஹோம் தியேட்டர்ல பாப்பேன் 

சமீபத்தில் ரசித்த பாடல்?
24 படத்துல வர்ற 'அழகியே, அடிமையே' . ஏ.ஆர்.ரகுமான் மியூசிக் சான்ஸே இல்ல 

முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ப்பது பற்றி?
விஜய் சேதுபதியுடன் நடிப்பதை ஆவலாய் எதிர்பார்க்கிறேன் 

சமைக்க தெரியுமா?
2017ல் அதைத்தான் கற்றுக் கொள்ள போகிறேன். 

எதை பார்த்து பயப்படுவீர்கள்?
நான் ஒரு க்ளாஸ்ட்ரோபோப்பிக், இருட்டான சிறு அறைகளில் இருந்தால் மிகவும் பயப்படுவேன் 
  
உங்களுக்கு என்ன நிறம்  பிடிக்கும்?
கருப்பு தான் என் ஆல் டைம் ஃபேவரைட் 

தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் ?
மகேஷ் பாபு 

எத்தனை பிரச்னை வந்தாலும் எப்படி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறீர்கள்?
மகிழ்ச்சியாக இருப்பதற்காகத் தானே வாழ்க்கையே. என் செல்லமான பிராணிகளுடன் நேரம் செலவழிக்கும் போது நேரம் போவதே தெரியாது 

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் 96 எப்படிப்பட்ட படம்?
ரொம்ப ஸ்வீட்டான அதேசமயம் ஆழமான காதல் கதை 

நயன்தாரா பற்றி..
நயன் ஒரு சூப்பர்வுமன் 

 
ஹாலிவுட் படத்தில்  நடிப்பீர்களா?
நிச்சயமாக, டைட்டானிக் ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோவோடு நடிப்பேன்  
Actress Trisha actress has answered questions from her fans in twitter yesterday. She said, "Nayanthara is a superwoman", "waiting to act with Ajith again", "will do an hollywood movie with Leanardo Dicaprio". Trisha has also revealed some interesting facts about her including that she is a claustrophobic.

No comments:

Post a Comment