Thursday 23 February 2017

Dhanush behind Actor Karthick and Singer Suchithra's split

Dhanush behind Actor Karthick and Singer Suchithra's split
Dhanush behind Actor Karthick and Singer Suchithra's split
நடிகர் கார்த்திக்கை விவகாரத்து செய்கிறார் பாடகி சுசித்ரா. காரணம் தனுஷா? 
ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக பிரபலம் அடைந்தவர் சுசித்ரா. மயக்கும் குரல் மற்றும் துறுதுறு பேச்சால் தமிழ்நாட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தவர். நன்றாக பாடவும் செய்த சுச்சி, பல பாடல்களையும் பாடியுள்ளார். ரசிகர்ளிடையே இவருக்கு இருந்த வரவேற்பால் இவரை  தன்னுடைய  ஆயுத எழுத்து படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் மணிரத்னம். 
அதே மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் கார்த்திக், பின்னர் வானம் வசப்படும் என்ற படத்தில் பி.சி.ஸ்ரீராம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக போகாததால் செகண்ட் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். இவரும் சுச்சியும் குடும்ப நண்பர்கள் ஆவர். பின்னர் இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

பல வருடம் ஒற்றுமையாக வாழ்ந்த வந்த இந்த ஜோடி இப்போது விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் நடிகர் தனுஷ் இருப்பதாக கூறப்படுகிறது. சில நாட்கள் முன்னர் தான் தனுஷ் ஆட்களால் தாக்கப்பட்டார் சுச்சி. அதற்கான பஞ்சாயத்து போய்க்கொண்டு இருக்கும் போதே இப்போது கார்த்திக் மற்றும் சுசித்ரா இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. 
 

இதுகுறித்த செய்தியை சுசித்ராவே தம்முடைய ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவித்துள்ளார். இந்த விவாகரத்து அறிவிப்பினை காரணம் காட்டியும் தனுஷ் ஆட்கள் தன்னை அசிங்கப்படுத்துவார்கள் என்றாலும், அது குறித்து தமக்கு கவலை இல்லை என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் சுசித்ரா. ஆனால் சிலர், சுச்த்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், விஷமிகள் இது போன்ற தகவல்களை பரப்புவகாகவும் கூறுகின்றனர். 

RJ turned Singer Suchithra has announced that she is divorcing her husband actor Karthick. Such and Karthick were family friends and tied the knot in 2006 after many years of love. Recently, Suchi claimed that she was attacked by actor Dhanush's supporters. Suchi has announced this split in her twitter page, but many say that her account was hacked and these are merely false rumours. 

No comments:

Post a Comment