Wednesday 9 November 2016

‘Doopaadoo’ adds new color to ‘Kamal Haasan’

Doopaadoo%E2%80%99-adds-new-color-to-%E2%80%98Kamal-Haasan%E2%80%99/


‘Doopaadoo’ adds new color to ‘Kamal Haasan’
Day to Day, Music and Individual composers are simultaneously growing higher and higher. The reason is, ‘Doopaadoo’. Being the most successful Musical platform for unrecognized young musicians, Doopaadoo has now come with an entirely new and unique birthday gift for Ulaganayagan ‘Kamal Haasan’. As the whole world had celebrated the birthday of Kamal Haasan recently, the founders of ‘Doopaadoo’ Kauntheya and Madhan Karky has given a new life and color for Kamal Haasan’s 1977 movie ‘Kokila’ by their new song called ‘Kadhal Nodiye’. They have merged the old visuals of that 39 year old movie with a new tune, which is composed by Anil Srinivasan, Penned by Madhan Karky and sung by Chinmayi Sripaada and Sathya Prakash.  
“Kadhal Nodiye is a tribute to Ulaganayagan Kamal Haasan sir. Now we may see him in many avatars, but that look of him in unique haircut, long collared shirt with rectangular framed specs are very popular in those times and it still stands as classic….And also, we would like to remember the works of veteran filmmaker Balumahendra sir….Hence we have chosen his directorial debut movie ‘Kokila’. This is the very first attempt by our team ‘Doopaadoo’. We have composed totally a new and fresh tune for the footage we have got, and we thank Mr. Venkatesh of GV films for providing that treasure worthy content to us. We are extremely happy to receive such a huge and positive response from the Audience…” says Kauntheya, the CEO of ‘Doopaadoo’ in great enthusiasm.
கமல் ஹாசனின் 'கோகிலாதிரைப்படத்திற்கு புத்துயிர் கொடுத்த  'டூப்பாடூ
இசையும், இசை கலைஞர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.... அதற்கு முக்கிய காரணமாக செயல்படுவது 'டூப்பாடூ' இசைத்தளம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இசை துறையில்  தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை பதிக்க விரும்பும் ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் அடித்தளமாக விளங்கும் 'டூப்பாடூ', சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய உலகநாயகன் கமல் ஹாசனிற்காக, புத்தம் புதிய ஒரு பாடலை அர்பணித்துள்ளனர். 1977 ஆம் ஆண்டு (ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்கு முன்)  கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான 'கோகிலா' திரைப்படத்தின் சில காட்சிகளை எடுத்து கொண்டு, அந்த  காட்சிகளுக்கு ஏற்றவாறு ஒரு புதிய பாடலை இசையமைத்து, இரண்டையும் அற்புதமாக இணைத்துள்ளனர் 'டூப்பாடூ' நிறுவனத்தின் நிறுவனர்கள் மதன் கார்க்கி  மற்றும் கௌந்தேயா. சின்மயி ஸ்ரீபதா மற்றும் சத்ய பிரகாஷின் குரலில் உதயமாகி இருக்கும்  'காதல் நொடியே' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பாடலுக்கு அணில் ஸ்ரீனிவாசனின் இசையும், மதன் கார்க்கியின் வரிகளும் கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.
"உலகநாயகன் கமல் ஹாசனிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல் 'காதல் நொடியே'. நாம் அனைவரும் கமல் சாரை பல அவதாரங்களில் பார்த்து இருக்கிறோம்.... ஆனால் அப்போது அவர் வைத்திருந்த சிகை அலங்காரம், அவர் அணிந்த உடைகள் மற்றும் அவருடைய கண்ணாடி ஆகியவற்றை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது....அதேபோல் பழம்பெரும் இயக்குநர் பாலுமகேந்திரா சாரையும் நாங்கள் நினைவுகூர விரும்பினோம். எனவே தான் அவருடைய முதல் இயக்கத்தில் உருவான 'கோகிலா' படத்தை தேர்ந்தெடுத்தோம்.அந்த படத்தின் காட்சிகளை எங்களுக்கு வழங்கிய ஜி வி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...எங்களின் இந்த 'காதல் நொடியே' பாடல் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருவது எங்கள் 'டூப்பாடூ' நிறுவனத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது...." என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் 'டூப்பாடூ' இசைத்தளத்தின்  தலைவர் கௌந்தேயா.

No comments:

Post a Comment