Six-Lakh-viewers-in-Eighteen-hours-for-Vijay-Sethupathi-starrer-%E2%80%98Puriyaatha-Puthir%E2%80%99-Trailer/
Six Lakh viewers in Eighteen hours for Vijay Sethupathi starrer ‘Puriyaatha Puthir’ Trailer
‘Twist and Turns’ always pulls the Audience attention, and the 120 seconds trailer of Vijay Sethupathi - Gayathrie starrer ‘Puriyaatha Puthir’ is the classic example for that. Produced by ‘Rebel Studio’ and Distributed by J Satish Kumar under the banner ‘JSK Film Corporation’, the thriller is directed by Ranjit Jeyakodi. The racy and twisted trailer was released on October 29th and it has earned more than six lakh viewers in just eighteen hours.
"The rapidly growing status of Vijay Sethupathi as a Mass Hero acts as the back bone for the success of this viral trailer. And also, the return of the successful pair Vijay Sethupathi and Gayathrie after ‘Naduvula Konjam Pakatha Kanom’ carries the lucky charm into this film also. ‘Puriyaatha Puthir’ webbed by Ranjit Jeyakodi is rich in terms of production value and also in terms of technical excellence " says J Sathish Kumar with pride.
பதினெட்டு மணி நேரத்தில் ஆறு லட்சம் பார்வையாளர்களை கடந்த விஜய் சேதுபதியின் 'புரியாத புதிர்' டிரைலர்
சுவாரசியமான திருப்பங்களும், எதிர்பாராத திருப்பு முனைகளும் அமைந்த கதை களத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும்.... சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி - காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'புரியாத புதிர்' படத்தின் இரண்டு நிமிட டிரைலரே அதற்கு சிறந்த உதாரணம். 'ரெபெல் ஸ்டுடியோ' தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'புரியாத புதிர்' திரைப்படத்தின் விநியோக உரிமையை 'ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்' சார்பில் வாங்கி இருக்கிறார் ஜே சதீஷ் குமார். திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த 'புரியாத புதிர்' படத்தின் விறுவிறுப்பான டிரைலர் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது....வெளியிடப்பட்ட பதினெட்டு மணி நேரத்திலேயே ஆறு லட்சம் பார்வையாளர்களை இந்த டிரைலர் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
"தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் 'மாஸ் ஹீரோ அந்தஸ்து', இந்த 'புரியாத புதிர்' டிரைலரின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். அதுமட்டுமின்றி, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்ற விஜய் சேதுபதி - காயத்ரி கூட்டணி, மீண்டும் இந்த படத்தில் இணைந்திருப்பது எங்களுக்கு கூடுதல் பலம். 'புரியாத புதிர்' ஆக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் தொழில் நுட்ப ரீதியாக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது..." என்று பெருமையுடன் கூறுகிறார் ஜே சதீஷ் குமார்.