Friday, 28 October 2016

‘BOGAN’ is heading towards a Wrap!

‘BOGAN’ is heading towards a Wrap!

‘BOGAN’ is heading towards a Wrap!
Right from the creation of the ‘Garden of Eden’ to the current ‘4 g Generation’, the world exists only with two major qualities. ‘The Good’ and ‘The Bad’. And that will be revealed on 23rd December through the upcoming Action flick ‘BOGAN’ that has Jayam Ravi and Arvind Swamy in the lead roles. Directed by ‘Romeo Juliet’ fame Lakshman, the most anticipated film ‘BOGAN’ is being produced by Prabhudeva and Dr.K.Ganesh under the banner ‘Prabhudeva Studios’. It is to be noted that the team ‘BOGAN’ is currently halted in abroad for shooting the final song, and the film is expected to hit the screens on 23rd December, 2016.  It is to be noted that this final song featuring Arvind Swamy, along with fifty other Russian Dancers is being choreographed by  Sherif.
“We are currently shooting the last song of our film that was sung by Arvind Swamy, and this is an exclusive song for him in which he will be portrayed as a Macho man. Actually this is the 100th song for dance master Sheriff. He was first introduced in the popular show ‘Ungalil Yaar Adutha Prabhudeva…” and coincidentally he choreographs his 100th song for Prabhudeva master’s production. Our DOP Soundar Rajan has captured such colorful and lively visuals for our Bogan, and his works are extra - ordinary, especially in this song….We are planned to release our teaser in few days...
Within three days we will be completing the entire shoot and after some patch works, we are planned for a wrap. The entire universe is eagerly waiting to celebrate Christmas on 25th December, and as an initial start for that celebration we have planned to release our ‘BOGAN’ on 23rd December….” Says Lakshman, the Director of ‘BOGAN’ enthusiastically.
மிக விரைவில் நிறைவு பெற இருக்கிறது 'போகன்' படத்தின் படப்பிடிப்பு 
'ஏதேன் தோட்டம்' உருவான காலக்கட்டம் முதல் இன்றைய 4 ஜி காலம் வரை, இந்த உலகம் இரண்டு குணாதிசயங்களை கொண்டு தான் சுழன்று கொண்டிருக்கிறது..... ஒன்று நன்மை, மற்றொன்று தீமை. அத்தகைய குணங்களை மையமாக கொண்டு,  முற்றிலும் புதுமையான கதைக்களத்தோடு  உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'போகன்'. 'ரோமியோ ஜூலியட்' புகழ் லக்ஷ்மன் இயக்கி வரும் 'போகன்' திரைப்படத்தை 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் இணைந்து  தயாரித்து வருகின்றனர் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களின் வரவேற்பை அதிகளவில் பெற்று வரும் 'போகன்' திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி உள்ளது. படத்தின் கடைசி பாடலை வெளிநாட்டில் படமாக்கி வரும் 'போகன்' படக்குழுவினர் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி 'போகன்'  படத்தை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். ரஷ்யா நாட்டை சார்ந்த  ஐம்பது  நடன கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த அரவிந்த் சுவாமிக்கான  பிரத்தியேகமான பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்  ஷெரிப். 
"நாங்கள் தற்போது அரவிந்த் சுவாமி பாடியிருக்கும் 'போகன்' படத்தின் இறுதி பாடலை படமாக்கி கொண்டிருக்கிறோம்... இந்த பாடலை  முழுக்க முழுக்க அரவிந்த் சுவாமிக்காக உருவாக்கி வருகிறோம். நிச்சயமாக இந்த பாடல் அவரை ஆஜானுபாகுவான ஆணழகனாக பிரதிபலிக்கும். நடன இயக்குனர் ஷெரிப்பிற்கு இது நூறுவது பாடல். "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியின் மூலம் திரையுலகிற்கு வந்த அவர், தற்போது தன்னுடைய நூறாவது பாடலை  பிரபுதேவாவின் தயாரிப்பிலேயே உருவாகும் படத்தில் நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.  அதேபோல், எங்களின் போகன் படத்தை, குறிப்பாக  இந்த பாடலை தன்னுடைய தத்ரூபமான காட்சிகளால் மேலும் மெருகேற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சௌந்தர் ராஜன்.   ஒரு சில தினங்களில் நாங்கள் எங்கள் படத்தின் டீசரை வெளியிட இருக்கிறோம். 
இன்னும் மூன்று தினங்களில் நாங்கள் இந்த பாடலின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரு சில மெருகேற்றும் பணிகளோடு எங்கள் 'போகன்' படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்ய இருக்கிறோம். தற்போது ஒட்டுமொத்த உலகமும் வருகின்ற டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட ஆயத்தமாகி கொண்டிருக்க, அந்த திருவிழாவின் ஆரம்ப கட்டமாக  நாங்கள் எங்களின் 'போகன்' படத்தை வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்...." என்று உற்சாகமாக கூறுகிறார் 'போகன்' படத்தின் இயக்குனர் லக்ஷ்மன்.

No comments:

Post a Comment