Saturday, 1 October 2016

Vijay Astonished the performance of Famous Actor’s Son!!!

Vijay-Astonished-the-performance-of-Famous-Actor’s-Son!!!/


Vijay Astonished the performance of Famous Actor’s Son!!!
பிரபல நடிகருடைய மகனின் நடனத்தை பார்த்து அசந்துபோன விஜய்
விஜய் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் அனைவரையும் அசர வைக்கும் அளவுக்கு நடமாடக்கூடியவரும் கூட. இவரே அசந்து போகிற அளவுக்கு பிரபல நடிகர் ஒருவரின் மகன் நடனம் ஆடியுள்ளார். அவர் யார் தெரியுமா? பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் தம்பிராமையாவின் மகன் உமாபதிதான்.
உமாபதி தற்போது ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு உமாபதி அசர வைக்கும் அளவுக்கு நடனம் ஆடியுள்ளார். வித்தியாசமான நடன அசைவுகளுக்கு பெயர் போன தினேஷ் மாஸ்டர்தான் இந்த பாடலுக்கும் நடனம் அமைத்துள்ளாராம்.
இந்த பாடலை சமீபத்தில் தம்பி ராமையா, வி4ய்க்கு போட்டு காட்டியுள்ளார். அந்த பாடலில் உமாபதியின் நடனத்தை பார்த்து விஜய் ஆச்சர்யப்பட்டு போனாராம். மீண்டும் ஒருமுறை அந்த பாடலை போட்டு பார்த்து, உமாபதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளாராம். விஜய் மட்டுமின்றி ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட சில முன்னணி நட்சத்திரங்களும் உமாபதியின் நடனத்தை பார்த்து அவரை பாராட்டியுள்ளார்களாம்
‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் உமாபதி, ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இன்பசேகர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

No comments:

Post a Comment