Thursday, 6 October 2016

Ajith Entering in Politics?

Ajith-Entering-in-Politics/

Ajith Entering in Politics?
அரசியலில் குதிக்கிறாரா அஜித்? சர்ச்சை எழுப்பிய செய்திகள்!
எந்த ஒரு சினிமா பின்னணியம் இல்லாமல் தற்போது தனக்கென ஒரு ராஜ்ஜியம் நடத்துபவர் அஜித். அஜித்திற்கும் அரசியலுக்கும் எப்போதும் தூரம் அதிகம். ஆனால், அவர் விலகி சென்றாலும் அவரின் ரசிகர்கள் பலம் எப்படியும் இங்கு கொண்டு வந்துவிடும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
இந்நிலையில் மலையாள ஊடகம் ஒன்று அஜித் விரைவில் தமிழக முதல்வர் ஜெயலலீதாவை சந்திக்கின்றார் என்ற செய்தியை கிளப்பிவிட்டுள்ளது.
அஜித் ஏன் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று தற்போதே பல கோடி கேள்விகள் உலா வர தொடங்கிவிட்டது. தன்னை பற்றி வரும் அனைத்து சர்ச்சைகளுக்கும் மௌனம் சாதிக்கும் அஜித் இதிலும் அவரின் பதில் மௌனம்தான். எது எப்படியோ இந்த சர்ச்சைக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

No comments:

Post a Comment