Whose-That-G.V.Prakash’s-Next-Movie’s-Music-Director/
Whose That G.V.Prakash’s Next Movie’s Music Director?
ஜீவி பிரகாஷின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் கோலிவுட்
இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார் ஜீவி பிரகாஷ். ப்ரூஸ் லீ, கடவுள் இருக்கான் குமாரு போன்ற படங்கள் வெளியாக தயாராக இருக்கும் நிலையில் இவரின் அடுத்த படத்தை இயக்கவிருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜிவ் மேனன்.
இப்படத்தில் மேலும் சிறப்பு என்னவென்றால் இப்படத்திற்காக இசையமைப்பது ஜீவி அல்ல ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான். இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே பாடல்கள் அனைத்தும் இறுதி செய்ய படக்குழு ஆர்வம் காட்டுகிறது அதனால் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களை முடித்து விட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 15 தேதி முதல் தொடங்குகிறது. ஜீவி பிரகாஷுக்கு தந்தையாக நடிகர் சீனு மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.

No comments:
Post a Comment