Wednesday, 3 May 2017

Bhainse of Kollywood ‘Thala Ajith’| கோலிவுட்டின் எருமை மாடு அஜித்?

Bhainse of Kollywood ‘Thala Ajith’| கோலிவுட்டின் எருமை மாடு அஜித்?
Bhainse of Kollywood ‘Thala Ajith’| கோலிவுட்டின் எருமை மாடு அஜித்?
தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட பிரபலங்களை கிண்டல் செய்து வருபவர் பாலிவுட்டை சேர்ந்த நடிகரும்,தயாரிப்பாளருமான கமால் ரஷித் கான். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஃ ஆபிஸ் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் முன்னணி ஹீரோ அஜித்குமாரை அவரது பிறந்த நாளன்று வாழ்த்து கூறுவது போல்  எருமை மாட்டுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'Happy Birthday to real Bhainsa of Kollywood #ThalaAjith! Lol! Kaise Kaise Hero hai South Main!' அதன் பொருள்  "Bhainsa of Kollywood - கோலிவுட்டின் எருமைமாடு"
கமால் ரஷித் கான் இதற்குமுன் ரஜினியை அசிங்கமானவர் என்றும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை ‘சோட்டா பீம்’ என்றும் கூறி ரசிகர்களின் கண்டனத்திற்குள்ளானார்.   அஜித்தை விமர்சித்துள்ளது அவர்களுடைய ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது இதனால் அவரது ரசிகர்கள்   கமால் ரஷித் கானை டிவிட்டரில்   கழுவி ஊற்றி வருகின்றனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/                                                                

Follow us:

Tuesday, 2 May 2017

"Saravanan Irukka Bayamaen"


"Saravanan Irukka Bayamaen"


"Saravanan Irukka Bayamaen"
 
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  எழில் இயக்கியிருக்கும் படம் 'சரவணன் இருக்க பயமேன்'. ஏற்கனவே டி.இமான் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 
 
எல்லா படங்களையும் நான் திரையரங்கில்  தான் பார்க்கிறேன். படம் நன்றாக இருந்தால் பத்து தடவை வரை பார்ப்பேன். மற்றவர்களை பார்க்க பரிந்துரை செய்வேன். நல்லா இல்லைனா திட்டிக் கொண்டே வருவேன். தியேட்டர் டிக்கட், கேண்டீன் விலை எல்லாம் குறைத்தால் நிறைய மக்கள் படம் பார்க்க வருவார்கள். நான் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன், அதனாலேயே பார்த்த உடனே நடிப்பில் யார் தேறுவார்கள் என சொல்லி விடுவேன். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் படங்கள் பார்த்திருக்கிறேன், அவர் பெரிய ஹீரோவாக நிச்சயம் வருவார். ரெஜினா கஸாண்ட்ரா சிறந்த நடிகை. அவர் தமிழ் சினிமாவின் ஜூலியா ராபர்ட்ஸ் என கலகலப்பாக பேசி விட்டு போனார் நடிகர் லிவிங்ஸ்டன்.
 
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கிடைத்த அளவுக்கு இந்த படத்தில் எனக்கு தீனி இல்லை. ஒரிரண்டு சீன்கள் தான் என்றாலும் எழில் படம் என்பதால் மட்டுமே நடித்தேன். வசந்தபாலன் எனக்கு கடவுள், இயக்குனராக இருந்த என்னை நடிகராக்கியவர். எனக்கு காமெடியும் வரும் என்பதை எனக்கு உணர்த்தியவர் என் அண்ணன் இயக்குனர் எழில். அதனால் தான் ஒரு சீன் என்றாலும் நான் நடிக்கிறேன்.  உதயநிதி ஸ்டாலின் பெரிய குடும்பத்தின் வாரிசு என்றாலும் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். நல்ல மனிதர் என்றார் நடிகர் ரவி மரியா.
 
பல முக்கியமான நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது மானிட்டரில் மிகவும் அமைதியாக அமர்ந்திப்பார் இயக்குனர்  எழில். அவர் பொறுமைசாலி மட்டும் இல்லை, புத்திசாலி. எடிட்டிங் தெரிந்த் ஒரு இயக்குனர். அது தான் இயக்குனர் எழிலின் வெற்றிக்கான முக்கிய காரணம். நல்ல இயக்குனர்கள் இங்கு அதிகமாக இல்லை. எழில் மாதிரி குறைந்தபட்சம் 10 இயக்குனர்கள் தற்போதைய தமிழ் சினிமாவுக்கு தேவை. உதயநிதி ஸ்டாலினை இரண்டு முறை பார்த்து பேசியிருக்கிறேன். யாருக்கு தெரியும் தமிழ் நாட்டின் வருங்கால முதலமைச்சருடன் கூட நான் பேசியிருக்க  வாய்ப்பு இருக்கிறது என்றார் இயக்குனரும், நடிகருமான ஜி.எம்.குமார்.
இது தான் கதையா? என்ற ரீதியில் ஒரு மெல்லிய கதையை சொல்லுவார் இயக்குனர் எழில். ஆனால் படமாக பார்க்கும் போது மிகவும் பிரமாதமான படமாக எடுத்து வைத்திருப்பார். அப்படி நான் நினைத்த நான்கு படங்களும் சூப்பர் ஹிட். அந்த மாதிரி  இந்த படமும் பெரிய வெற்றி பெறும். என் கைபேசியை எடுத்து பார்த்தால் என் மனைவியை விட யுகபாரதியின் மொபைல் நம்பருக்கு தான் அதிகம் பேசியிருப்பேன். அவருடன் தான் அதிக பாடல்கள் பணியாற்றியுள்ளேன், அது ஒரு நல்ல அனுபவம் என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.
 
10 வருடங்களுக்கு முன்பு தமிழ் படங்களுக்கு வரிவலக்கு சட்டத்தை கொண்டு வந்த கலைஞருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாகுபலி மாதிரி படங்கள் ஏன்  தமிழில் எடுக்கப்படுவதில்லை என ஆதங்கமாக இருக்கிறது. நாட்டில் விவசாயிகளின் பிரச்சினையை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை. ஆனால் சத்குரு விழாவில் கலந்து கொள்கிறார். முடியும்போது ஒலிக்க வேண்டிய தேசிய கீதத்தை திரையரங்குகளில் படம் ஆரம்பிக்கும் முன்னரே போடுகிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் தமிழில் கூட தேசிய கீதத்திற்கு அறிவிப்பு இல்லை. இதை எந்த ஒரு மாநில கட்சியும் கண்டு கொள்ளவில்லை என்று பாய்ச்சலாக பேசி விட்டு போனார் மன்சூர் அலிகான்.
 
இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு புஷ்பா புருஷன் என்ற புதிய அடையாளத்தை கொடுத்தவர் சுசீந்திரனின் குரு எழில். என் மனைவி தான் அந்த அடையாளத்தால் ரொம்ப வருத்தப்படுகிறார். ஷூட்டிங்கில் நடிக்கும் நாங்கள் எவ்வளவு எக்ஸ்ட்ராவா பேசினாலும் அதை அனுமதிப்பார் இயக்குனர் எழில். அவருக்கு தெரியும் எதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று. உதயநிதி சின்சியரான நடிகர், நல்ல மனசுக்காரர். என் அப்பா இறந்தபோது பிரஸ்மீட்டை கூட கேன்சல் செய்து விட்டு எனக்காக மதுரை வரை வந்து என் அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அந்த அளவு நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர். ரெஜினா பாடல் ஒன்ஸ் மோர் கேட்கும் வகையில் வந்திருக்கிறது. அதுவே 50 நாட்கள் வரை ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வரும் என்றார் நடிகர் சூரி.
 
இமான் ஒரு உணவுப்பிரியர். கம்போஸிங்குக்கு முன்பு அவருக்கு பிரியாணி ரெடி பண்ணிருவேன். இமானும், யுகபாரதியும் சேர்ந்துட்டாலே தன்னால சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து விடும். நம் முன்னோடி இயக்குனர்கள் எல்லோரும் மிகவும் திறமையானவர்கள், புத்திசாலிகள், அவர்களுடம் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவம். இப்போது இருப்பவர்கள் சினிமா வரலாற்றை, நம் மூத்த இயக்குனர்களை பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். அது தவறு, மாற வேண்டும் என்றார் இயக்குனர் எழில். 
சிருஷ்டி என்ன சொன்னாலும் நம்புவார், கொச்சினை தாண்டி ஒரு கடற்கரையில் ஷூட்டிங் நடந்தபோது சிருஷ்டிக்கு கேரவன் கூட இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். எம்புட்டு இருக்குது ஆசை பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு அவ்ளோ பெரிய அளவு பேசப்படறதுக்கு முக்கிய காரணம் ரெஜினா தான். நான் மூணாவதா ஒப்பந்தமான படம் தான் சரவணன் இருக்க பயமேன். ஆனா முதல்ல ரிலீஸ் ஆகுது, அது தான் எழில் சாரின் வேகம். படம் பார்த்துட்டு நல்லா இருந்தா உடனே விமர்சனம் எழுதுங்க, இல்லைனா மூணு நாள் கழிச்சு எழுதுங்க என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.
 
விழாவில் நாயகிகள் ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, கவிஞர் யுகபாரதி, நடிகர்கள் ரோபோ சங்கர், கும்கி அஸ்வின், சுப்புராஜ், ராஜாசேகர், சாம்ஸ், நடிகைகள் ஜாங்கிரி மதுமிதா, ரிஷா ஆகியோரும் பேசினார்கள்.

Baahubali Movie Star Cast Real Names | Original Names of Baahubali Movie Cast

Baahubali Movie Star Cast Real Names | Original Names of Baahubali Movie Cast
Baahubali Movie Star Cast Real Names | Original Names of Baahubali Movie Cast
Baahubali 2 ( The Conclusion ) is an epic historical fiction film directed by S. S. Rajamouli. It is the continuation of Baahubali part 1 (The Beginning). Initially, both parts were jointly produced on a budget of ₹ 250 crore (2.5 billion)  however the budget of the second part was increased later. Baahubali 2: ( The Conclusion ) has made a business of ₹500 crore (5 billion) before release. The film is scheduled for a worldwide release on 28 April 2017. Baahubali 2 will be the first Telugu film to be released in 4K High Definition format. It is estimated that close to 200 screens are being upgraded to 4K projectors before the release date of the movie.
Prabhas – Baahubali
Rana Daggubati – Bhallala Deva
Anushka Shetty – Devasena
Tamanna Bhatia – Avanthika
Ramya Krishnan – Sivagami
Nassar – Bijjaladeva
Sathya Raj – Kattappa
Adivi Sesh – Bhadrudu
Sudeep – Aslaam Khan
Prabhakar – Kalakeya
Rohini – Sanga
Tanikella Bharani – Swamiji
Teja Kakamanu – Sakethudu
Nora Fatehi (Item Song)
Scarlett Mellish Wilson (Item Song)
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

Baahubali 2 Movie is Equal to Hollywood Movie | ஹாலிவுட்டிற்கு நிகரான படம் பாகுபாலி 2

Baahubali 2 Movie is Equal to Hollywood Movie | ஹாலிவுட்டிற்கு நிகரான படம் பாகுபாலி 2
Baahubali 2 Movie is Equal to Hollywood Movie | ஹாலிவுட்டிற்கு நிகரான படம் பாகுபாலி 2
எஸ் எஸ் .ராஜமௌலி  இயக்கத்தில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான 'பாகுபலி' இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலும் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
இதுவரை பாலிவுட்டின் அமீர்கான் ,சல்மான் கான்,ஷாருக்கான் ஆகியோரின் படங்கள் மட்டுமே உலக அளவில் சாதனை படைத்த வட இந்திய படங்களாகும். தற் போது  முதல் முறையாக தென்னி ந்திய   படமான 'பாகுபாலி 2' பாலிவுட்டின் சாதனைகளை முறியடித்ததோடு மட்டுமில்லாமல் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் இந்திய படம் முதல் இடத்தைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். உஉலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாகுபலி 2 படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வரும்நிலையில் எளிதில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்று கூறுகின்றனர் விநியோகஸ்தர்கள்.
வெளியான  மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 540 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ. 415 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 125 கோடியும் வசூலித்துள்ளது. இந்தி டப்  செய்யப்பட்டு வெளியான  பாகுபலி 2  இந்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை ரூ. 41 கோடியும், சனிக்கிழமை ரூ. 40.5 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 46.5 கோடியும் என மொத்தம் ரூ. 128 கோடி வசூல் செய்துள்ளது. கரண் ஜோஹார் இந்தியில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் சாதனைக்குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு 'ஹாலிவுட் படங்களின் நிகரான சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தியுள்ளது என்றார்.' மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

yenda thalaila yenna vekkala Film Audio Launch actor Mansoor Ali Khan Speech

Yenda Thalaila Yenna Vekkala Movie Audio Launch | Celebrities Speech

Yenda Thalaila Yenna Vekkala Movie Audio Launch | Actress Sanchitha Shetty Speech

Actress Keerthi Suresh Inagurates Silicone Live Art Museum at ECR VGP Snow Kingdom

Toulouse Indian Film Festival (France)

Toulouse Indian Film Festival (France)


பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்! வில்லேஜ் தியேட்டர் S.முருகானந்தம் தயாரிப்பில், என்னுடைய எழுத்து இயக்கத்தில் உருவான வாகை சூட வா திரைப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை ஏற்கனவே வென்று இருந்த நேரத்தில், இப்பொழது
 
 The Toulouse Indian  Film Festival (FRANCE) 2017
 
Best Feature Film Award- Vaagai Sooda Va (Tamil)
 
சிறந்த படமாக 
வாகை சூட வா திரைப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளது என்பதை பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷமடைகிறேன்., என்றும் உங்கள் அதரவு வேண்டி நிற்கும் இயக்குனர் A.சற்குணம், மற்றும் தயாரிப்பாளர் S.முருகானந்தம்.
 

‘GIVING’ BACK AFTER ‘RECEIVING’!

‘GIVING’ BACK AFTER ‘RECEIVING’!


‘GIVING’ BACK AFTER ‘RECEIVING’!

As far as the film industry is concerned, however talented and however commercially viable one is, not all prefer to give back to the industry whatever they received from the industry when the career graph is flying high! But there are exceptions; Vijay Sethupathi who took off to a humble yet powerful start with Seenu Ramasamy’s ‘Thermeerku Paruvakaatru’ is one such exceptional actor who came in willingly forward to give back what he has received from the film industry since his days of start!
 
How else one could possibly choose to celebrate May Day on May 1st which is basically dedicated to the hard working community of Laborers (and hence hailed as Laborers’ Day), especially with respect to all those voluminous labor force who toil hard behind to make things at the front to ‘glitter’!
 
‘Ulagayutha’ is basically the brain child of director S.P. Jananathan who started his colorful career as a filmmaker with the National award winning film, ‘Iyarkkai’ following it up with discerning films as ‘Peraanmai’. But Vijay Sethupathi walked in to add more pep to it by coming forward to contribute 100 gold medals (worth 1 sovereign) to 100 senior people from the film industry who had contributed immensely to the film industry and one cannot possibly think of a better way to celebrate 100 years of ‘talkies’!
 
Several film technicians from the film industry like R.K.Shanmugham (well known script writer for films) who had been associated with the late matinee idol, M.G.R., (penning the screenplay and dialogue for many of his films) were honored on the occasion. It is really a walk down the memory lane while he spoke of his association with the film industry as well as film personalities like M.G.R. and Sivaji Ganesan.
 
Several film personalities as Ameer, Cheran, M.S.Baskar, Perarasu, Rohini, P.C.Sreeram, R.K.Selvamani, Vikraman, Lenin (Editor), V.Sekar, Arulpathi, President of the Film Distributors’ Association etc graced the occasion by their presence and gave away the honors!Film Journalists as Nellai Bharathi (whose acceptance speech was punctuated with fervor and flavor!), Kalaipoonga Ravanan, ‘Devi’ Mani and Maalee were all honored on the occasion.
One other salient feature of the memorable event was the fact that it had provided a big platform for all those associated with the film industry to meet up and interact, emotional expressions gushing out from the bottom of their hearts!
 
In his address, Vijay Sethupathi was simply, ‘simplicity-personified’!
 
‘Everybody who received mentioned me as the ‘giver’; let me tell us this-I just gave back what I have received from the industry so far!’ he remarked.
 
While 99 gold sovereigns were given away to a select set of people, the 100th one was given to none other than director Seenu Ramasamy who holds the credit of having launched Vijay Sethupathi through ‘Thenmeerku Paravakaatru’ that marked the ’arrival’ of the actor who has tactfully managed to keep clear of the viscous circle of ‘image’, an avoidable factor as far as the film industry is concerned despite his trails with commercial potboilers once in a while!
Vijay Sethupathi’s gesture is certain to find a definite place in the history of Tamil Cinema as he managed to make it truly memorable!
 
More successful stars from the film industry can possibly take a clue…!

உலகாயுதா சார்பில் தமிழ்த் தேசிய சலனப்படம் 100வது ஆண்டை ஒட்டி 100 மூத்த திரைப்பட தொழிலாளர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதற்கான மொத்த செலவையும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டார். மொத்தம் 100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அதில் முதல் பதக்கத்தை நடிகர் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு விஜய் சேதுபதியின் தாயார் வழங்கி கவுரவப்படுத்தினார். 33 துறைகளை சார்ந்த 99 தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வழங்கினர்.
 
ஆயிரத்தில் ஒருவன் உட்பட 50 படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் விருது வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டார். விருது வழங்க வந்த  அவருக்கும் ஒரு விருதை வழங்கி சிறப்பித்தனர் விழாக்குழுவினர். விருது வாங்கிய பின் ஆர்.கே.சண்முகம் பேசும்போது, "எனக்கு வயது 87, மனதளவில் எனக்கு வயது வெறும் 27 தான். அதனால் இங்குள்ளவர்களிலேயே நான் தான் இளைஞன். தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் எதுவும் இப்போது வருவதில்லை. ஆனால் அதில் ஜனநாதன் விதிவிலக்கு. அவர் ஒரு புரட்சி இயக்குனர். அவரின் பேராண்மை படத்தை நான் ஐந்து முறை பார்த்து ரசித்திருக்கிறேன், நல்ல படங்கள் நிறைய வர வேண்டும்" என்றார். 
 
பணம் இருப்பனிடம் குணம் இருக்காது, குணம் இருப்பவனிடம் பணம் இருக்காது. இந்த இரண்டும் விஜய் சேதுபதியிடம் இருக்கிறது. ஜனநாதனிடம் குணம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை. பணம் சேர்க்கும் நோக்கமும் இல்லை. ஜாக்கி சான், அர்னால்டு, ரஜினி, கமல், விஜய், அஜித் பலரும் கலந்து கொண்ட விழாக்கள் சென்னையில் நடந்துள்ளன. அதை விட இந்த விழாவை முக்கியமான விழாவாக நான் கருதுகிறேன். இந்த அரங்கம் நிறையவில்லை என்றாலும் இங்கு வந்துள்ள அனைவரின் மனமும் நிறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தில் பெரிதாக என்ன வாங்கி விட முடியும் என நினைக்கலாம். அது இத்தனை காலம் சினிமாவில் உழைத்தவர்களுக்கான அங்கீகாரம் என்றார் இயக்குனர் அமீர்.
 
100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கும் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசும்போது, "நான் பெரிதாக எதையும் கொடுத்து விடவில்லை. சினிமா எனக்கு கொடுத்ததில் இருந்து கொஞ்சம் எடுத்து, சினிமாவிற்கு கொடுக்கிறேன். சினிமா தான் என்னை அங்கீகரித்தது. சினிமா தான் எனக்கு எல்லாம். ஒரு ஹீரோவாக நான் நடித்த முதல் படத்திலேயே எனக்கு சினிமா தொழிலாளர்கள் கொடுத்த மரியாதை என்னை ரொம்பவே நெகிழ வைத்து விட்டது. என்னை கவுரவித்த என் இயக்குனர் ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்கிறேன்.  இதை கூட அவர் உபயோகப்படுத்த மாட்டார். வேறு யாருக்காவது தான் இந்த தங்கமும் பயன்படும். எல்லா கலைஞர்களும் சந்தித்து கொண்ட ஒரு விழாவாக தான் இதை நான் பார்க்கிறேன். இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார். 
 
விழாவில் மூத்த பத்திரிக்கையாளர்கள் தேவி மணி, கலைப்பூங்கா ராவணன், மாலி, நெல்லை பாரதி ஆகியோரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அப்போது பேசிய நெல்லை பாரதி, "ஏற்பது இகழ்ச்சி என்பர், ஆனால் ஏற்பது மகிழ்ச்சி என உணர்கிறேன்" என்றார். 
 
70 ஆண்டுகளை சினிமாவில் நான் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறேன் என பெருமிதத்துடன் கூறினார் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன். எடிட்டர் மோகன் தன்னுடைய ஆரம்ப கால சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
 
விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எடிட்டர் லெனின், வினியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, நடிகை கஸ்தூரி, இயக்குனர் விக்ரமன், இயக்குனர் சீனு ராமசாமி, சுசீந்திரன், இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் கண்ணன், கன்னட திரையுலகின் சார்பில் கிரிஷ் துவாரகீஷ், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இயக்குனர் பேரரசு, நடிகை ரோகிணி, தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், நடிகர் ராஜேஷ், இயக்குனர் வி.சேகர், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்,நடிகர் அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
 

Vijay Tv Neeli Serial Actress Rekha (Kavitha) Biography | Neeli Serial Rekha Biodata

Vijay Tv Neeli Serial Actress Rekha (Kavitha) Biography | Neeli Serial Rekha Biodata
Vijay Tv Neeli Serial Actress Rekha (Kavitha) Biography | Neeli Serial Rekha Biodata
Kavitha Gowda is a newbie in Sandalwood Industry. She is popular for her role in the Kannada serial Lakshmi Baramma that is aired on ETV Kannada since 2013. She plays the interesting dual lead role of Lakshmi aka Lachi, who escapes from her ever-torturing family and faces various struggles in her life and how she overcomes all of it and then in the later part portrays herself as Chinnu.
With her staggering performances in the mentioned above serial, she got her ticket into movies making her debut in Srinivasa Kalyana that is yet to be released. Moreover, the budding actress will also be seen in Tamil serial ‘Mahabaratham’ and Telugu serial Swathi Chinukulu. It is also interesting to hear from her that she also wanted to pursue higher studies in some subjects of her choice.
Name: Kavitha Gowda
Nick Name: Chinnu
DOB: 15th Aug 1992
Age: 25
Birth Place: Karnataka
Debut Serial: Mahabharatham
Debut Movie: First Love
Hobbies: Social Work
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:


Monday, 1 May 2017

Raghava Lawrence Builds a Temple For His Mother

Raghava Lawrence Builds a Temple For His Mother


உலகில் முதல் முறையாக தாய்க்கு கோயில்.... மே 14 அன்று ராகவா லாரன்ஸ் திறக்கின்றார்

தனது தாயார் கண்மணிக்கு லாரன்ஸ் கட்டிக் கொண்டிருக்கும் கோயிலின் இறுதி கட்டப்பணிகள் நடை பெற்றுக்
கொண்டிருக்கிறது...
ஏற்கெனவே ஒரு தேதியை அறிவித்து அந்த தேதியில் கோயிலை திறக்க ஏற்பாடு நடை பெற்றுக் கொண்டிருந்தது..
மே 14 ம் தேதி அன்னையர் தினத்தன்று 
கோயிலை திறப்பது இன்னும் சிறப்பாக 
இருக்கும் என்று நினைத்த  லாரன்ஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்...
அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள அன்னையருக்கு சமர்ப்பிக்க உள்ளார் லாரன்ஸ்...
அன்னை ஒர் ஆலயம்...
அன்னைக்கு ஒர் ஆலயம்..

​Actress Nikki Galrani donates 3 lakhs for Nadigar Sangam building !!


​Actress Nikki Galrani donates 3 lakhs for Nadigar Sangam building !!


​Actress Nikki Galrani donates 3 lakhs for Nadigar Sangam building !!
 
Nadigar Sangam building works are in full swing. All the government approvals are approved and the Actors and Actress are donating funds by themselves for the building.. Nadigar Sangam General Secretary Vishal announced he will donate 5 crores, Sivakumar,Suriya and Karthi family also announced 5 crores. Money for a small Marriage hall inside the building will be funded by Nadigar Sangam Treasurer Isari Ganesh. In Nadigar Sangam Treasurer KamalHaasan's presence Lyca production house donated 1crore, Veteran actress Vaani sree Rs. 1,55,555/- , Radha 1 lakh, Janani Rs. 40,000/-, Sathya Priya Rs. 25,000/-, JeyaChithra Rs.10,000/-, Tamil Film Cinematographers Union Rs. 5000/-, Nadigar Sangam PRO Johnson Rs. 60,000/-. Now actress Nikki Galrani donated 3 Lakhs. She went to NadigarSangam building and handed over the cash to NadigarSangam Executive committee member Sreeman. Further all Stage actor and actress are donating funds from various cities.​

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடிகை நிக்கி கல்ராணி 3 லட்சம் அன்பளிப்பு . !!
 
  தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டுவதற்கான அரசு அனுமதிகளும் கிடைத்த நிலையில் கட்டிட நிதிகளையும் நடிகர் நடிகைகள் தாமாகவே முன்வந்து நன்கொடை அளித்து  வருகின்றனர். கட்டிடத்தில் சிறிய திருமண மண்டபத்தை கட்டுவதற்கான செலவை  நடிகர் சங்கம் அறங்காவலர் ஐசரி கணேஷ் மற்றும் preview theatre கட்டும்  செலவை சிவகுமார்,சூர்யா,கார்த்தி குடும்பத்தாரும்  ஏற்றுகொண்டுள்ளனர் .பழம் பெரும் நடிகை வாணிஸ்ரீ - ரூபாய் 1,55,555/= , ராதா- ரூபாய் 1,00,000/=, ஜனனி- ரூபாய் 40,000/=,சத்யபிரியா- ரூபாய் 25,000=,ஜெயசித்ரா-ரூபாய் 10,000/=,நடிகர் சங்கம் பி.ஆர். ஒ. ஜான்சன் - ரூபாய் 60,000/= நன்கொடை அளித்துள்ளனர் . இதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி 3 லட்சம் ரூபாய் கட்டிட நிதிக்காக நன்கொடை வழங்கி உள்ளார் .இதற்கான காசோலையை அவர்நடிகர் சங்கம் அலுவலகத்தில் நேரில் சென்று சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமன் அவர்களிடம் வழங்கினார். ஏற்கனவே நடிகர் சங்கம் பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தலா 5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

Actor Rana is blind from his right eye

Actor Rana is blind from his right eye


Actor Rana is blind from his right eye
Rana Daggubati, winning international acclaim after playing the eponymous character Bhallala Deva in SS Rajamouli's Baahubali: The Beginning.
However, the actor, who was part of a television show, admitted that he's blind in one eye during his childhood. In order to motivate one of the constants, Rana narrated his own story that left the audience shell-shocked.
Speaking about his childhood, Rana said, "Should I tell you one thing, I am blind from my right eye. I see only from my left eye. The one you see is someone else's eye which was donated to me after his death. If I close my left eye, I can see no one."
"LV Prasad operated me when I was young. Study well, we will support, be courageous as you have to look after her. Sorrows will go away one day but you have to gear up and keep them happy always," he added. It is truly mind-blowing that he has made it big in movies even after so many hurdles. 
எனக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை நடிகர் ராணா அதிர்ச்சி தகவல் 
நடிகர் ராணா டகுபதி, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி 2 படத்தில் பல்லாலதேவா ஆக நடித்து உலகப் புகழ் பெற்றுள்ளார். ஆனால், அவரைப் பற்றி வந்துள்ள ஒரு செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராணா, தமக்கு ஒரே ஒரு கண் மட்டுமே தெரியும் என்ற அஹீர்ச்சி தகவலை  வெளியிட்டுள்ளார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராணா, "உங்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும். என்னுடைய வலது கண்ணில் பார்வை கிடையாது. என்னுடைய இடது கண்ணால் மட்டுமே நான் பார்த்து வருகிறேன். இப்போது நீங்கள் பார்க்கும் என்னுடைய வலது கண், வேறொருவருடையது. இறந்த பிறகு எனக்கு தானமாக வழங்கப்பட்ட கண் இது. என்னயுடைய இடது கண்ணை மூடிவிட்டால் எனக்கு எதுவுமே தெரியாது."

"பிரபல மருத்துவர் பிரசாத் அவர்கள் தான் எனக்கு இந்த கண் ஆபரேஷனை சிறு வயதில் செய்து நம்பிக்கை ஊட்டினார். நன்றாக படி, நாங்கள் எல்லாரும் உனக்கு துணை நிற்போம். தைரியமாக இரு, உன் அம்மாவிற்கு நீ தான் துணை இருக்க வேண்டும். அவருடைய துன்பங்களை நீதான் போக்கி, மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை கூறி என்னை தேற்றினார்" என்று மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார் நடிகர் ராணா. இத்தனை வலிகளிலும் அவர் போராடி இன்றும் பெரும் நடிகராக வளர்ந்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியதே. 

Selvaraghavan to direct actor Suriya

Selvaraghavan to direct actor Suriya
Selvaraghavan to direct actor Suriya
Director Selvaraghavan is awaiting for the release of his horror flick 'Nenjam Marappathillai' with S J Suryah in the lead. After this, he is all set to direct actor Suriya in his next film. The Singam actor is said to have a different look in this film, which would have Yuvan Shankar Raja as music composer. Actor Suriya is currently working in director Vignesh Sivan's Thaana Serndha Koottam along with actress Keerthi Suresh.
The other side, Nenjam Marappathillai has S J Suryah, Regina Cassandra and Nandita Swetha in lead roles. Music is by Yuvanshankar Raja and the flick’s album has four songs and the lyrics for all has been written by Selvaraghavan himself.The director of photography is Aravind Krishna and the art director is Vijay Athinathan. Nenjam Marappathillai is expected to have its release very soon. 
We are awaiting for the official announcement and other details like cast and crew of actor Suriya's next film with Selva.
செல்வராகவனுடன் இணையும் சூர்யா 
இயக்குனர் செல்வராகவன், தன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திகில் திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவை அடுத்து நடிகர் சூர்யாவை இயக்க இருக்கிறார் செல்வராகவன். தற்சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கம் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, அதற்கு பிறகு செல்வா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த படத்தில், வித்தியாசமான கெட்டப்பில் வர இருக்கிறாராம் சூர்யா. 

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ஹீரோயின்களாக நந்திதாவும், ரெஜினா கசான்ட்ராவும்  நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப்பின் செல்வராகவனுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் பாடல்கள் முன்னரே வெளியாகி விட்டன. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் ரிலீசுக்குத் தயார் ஆகி உள்ளதாம். படத்தினை ரிலீஸ் செய்ய நல்ல நாள் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். 

நடிகர் சூர்யா செல்வராகவனுடன் இணையும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கலாம் என்று கூறப் படுகிறது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம். 

Rajni calls Rajamouli - God's own child

Rajni calls Rajamouli - God's own child
Rajni calls Rajamouli - God's own child 
Baahubali 2, which released on friday in over 6,500 screens across India in languages like Tamil, Telugu, Hindi and Malayalam is unarguably the biggest film of this year by collected Rs 121 crores on its first day of release in box office. Director Rajamouli and his team is getting praise from all over the world. 
Among other big fans, Super Star Rajnikanth has also praised Baahubali 2 team in his tweet, "Baahubali 2 ... indian cinema's pride. My salutes to God's own child @ssrajamouli and his team!!! masterpiece". Rajamouli was prompt to reply to his inspiration, "THALAIVAAAA... Feeling like god himself blessed us... our team is on cloud9... Anything couldn't be bigger..."

Other celebrities like actor Chiranjeei, Dhanush, Priyanka Chopra have also shared their happiness with Rajamouli. Priyanka tweeted, "Congratulations @ssrajamouli Sir on another spectacle! May u keep the flag flying..@karanjohar congrats! Baahubali2". It was really inspiring as Rajamouli's counter part Director Shankar tweeted, "Just saw Bahubali 2 - The pride of Indian Cinema.What a Bravery,Beauty, Grandness & Music.. Awestruck.Hats off to 'Raja'mouli artsts n team."
 
கடவுளின் குழந்தை ராஜமௌலி, புகாரம் சூட்டிய ரஜினி 
 
மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாராகிய பாகுபலி 2, கடந்த வெள்ளியன்று உலகெங்கிலும் வெளியாகி பட்டையைக்  கொண்டிருக்கிறது. முதல் நாளில் 121 கோடி ரூபாய் வசூல் செய்து, இதுவரை  சாதனைகளை மிஞ்சி உள்ளது. படத்தைப் பார்த்த   பலரும், படத்தின் இயக்குனர் ராஜமௌலியை பாராட்டி வருகின்றனர். 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாகுபலி 2 படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய எண்ணங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "பாகுபலி 2, இந்திய சினிமாவின் பெருமைமிகு படைப்பு. கடவுளின் சொந்த குழந்தையான இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய சல்யூட். இந்திய சினிமாவின் பாகுபலி 2 ஓர் மாஸ்டர் பீஸ்" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ரஜினி. இதற்கு பதில் அளித்துள்ள இயக்குனர் ராஜமௌலி, "தலைவா.. உங்களிடம் இருந்த கிடைத்த பாராட்டு, கடவுளிடம் இருந்தே பாராட்டுக்களை பெற்றது போல் உள்ளது. பாகுபலி 2 வின் மொத்த குழுவும் உங்களுடைய வாழ்த்துக்களால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளோம். இதைவிட பெரிதாக வேறு என்ன கேட்டுவிட முடியும்" என்று தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தி உள்ளார். 

இதைப்போன்ற நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட  பல்வேறு தரப்பினரும் இயக்குனர் ராஜமௌலிக்கு  பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கரும், ராஜமௌலியை 'இந்திய சினிமாவின் பெருமை மிகு ராஜா' என்று அழைத்துள்ளார். 

Second look of Ajith's Vivegam on his birthday

Second look of Ajith's Vivegam on his birthday
Second look of Ajith's Vivegam on his birthday
It is no doubt that hard working actor 'Thala' Ajith born on May 1, which falls on International labour day. Thala is known for his hard working who made it big in Indian cinema on his own. He is an inspiration for millions of his fans who believes hard work will take you places. 
Ajith is currently working on Vivegam, and the team of Vivegam is wishing the actor with second look of the film. The pic has taken storm in social media already, in which Ajith is looking massive and courageous. 
 
We have already reported that Thala Ajith's upcoming movie Vivegam's teaser trailer of the film is to be unveiled today on the occasion Ajith's birthday by Director 'Siruthai' Siva. to release a short clipping of a song sequence of the film. Music composer Anirudh has composed this song and actress Kajal Agarwal will be seen alongside Ajith. With this movie Actor Kamal's second daughter Akshara Hasan making her debut in Tamil. Famous Bollywood actor Vevek Oberoi casted in Vivegam as villain for the first time. 
 
உழைப்பாளர் தின ஸ்பெஷல் அஜித்தின் இரண்டாம் லுக் 

உலகமே உழைப்பாளர்களை கொண்டாடும் மே 1 அன்று பிறந்த 'தல' அஜித் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம். கடினமாக உழைத்தால், எந்த வெற்றியும் தானாய் நம்மை வந்து சேரும் என்பதற்கு அஜித்தின் வாழ்க்கையே உதாரணம். தற்போது தல அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் விவேகம் படக்குழுவினர். 

முன்னர் வெளியான விவேகம் பட பர்ஸ்ட் லுக்கில், சிக்ஸ் பேக்குடன் வெற்றுடம்புடன் அட்டகாசமாய் இருந்தார். இப்போது வெளியாகியுள்ள இரண்டாம் லுக்கில், கர்ஜிக்கும் சக்திவாய்ந்த போராளி போன்று அசத்தலாக இருக்கிறார் நம்ம தல. பனிக்காட்டின் நடுவே, ஒரு மாபெரும் மரக்கட்டையை தூக்கி போடும் படி இருக்கிற அந்த லுக், படத்தில் வரும் இடைவேளைக் காட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விவேகம் படத்தின்  டீசரை, அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட உள்ளதாக முன்னரே நாம் சொல்லி இருந்தோம். இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக டீசரை வெளியிடவுள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா. படத்தின் டீசர் வெளியாகும் போதே, படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் இரண்டு நிமிட வீடியோவையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கு இந்த பாடலில் நடிகை காஜல் அகர்வாலுடன் தோன்ற இருக்கிறார் நம்ம தல. 

விவேகம் படத்தில், மூன்றாம் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கை கோர்த்துள்ளார் நம்ம தல. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் மட்டுமல்லாமல், உலக நாயகன் கமலின் இரண்டாம் மகள் அக்ஷரா ஹாசன் தமிழில் அறிமுகம் ஆகிறார். மேலும், இந்தியில் பெரும் நாயகனான விவேக் ஓபராய், இப்படத்தில் வில்லனாய் அஜித்துடன் மோதுகிறார்.