Baahubali 2 Movie is Equal to Hollywood Movie | ஹாலிவுட்டிற்கு நிகரான படம் பாகுபாலி 2
Baahubali 2 Movie is Equal to Hollywood Movie | ஹாலிவுட்டிற்கு நிகரான படம் பாகுபாலி
2
எஸ் எஸ் .ராஜமௌலி இயக்கத்தில் தமிழ்,
தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில்
வெளியான 'பாகுபலி' இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலும்
வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
இதுவரை
பாலிவுட்டின் அமீர்கான் ,சல்மான் கான்,ஷாருக்கான்
ஆகியோரின் படங்கள் மட்டுமே உலக
அளவில் சாதனை படைத்த வட
இந்திய படங்களாகும். தற் போது முதல் முறையாக தென்னி
ந்திய படமான
'பாகுபாலி 2' பாலிவுட்டின் சாதனைகளை முறியடித்ததோடு மட்டுமில்லாமல் புதிய சாதனைகள் படைத்து
வருகிறது. அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் இந்திய
படம் முதல் இடத்தைப் பெறுவது
இதுவே முதல் முறையாகும். உஉலகின்
பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாகுபலி 2 படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வரும்நிலையில் எளிதில் 1000 கோடி ரூபாய் வசூல்
செய்துவிடும் என்று கூறுகின்றனர் விநியோகஸ்தர்கள்.
வெளியான மூன்று
நாட்களில் உலக அளவில் ரூ.
540 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில்
ரூ. 415 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 125 கோடியும் வசூலித்துள்ளது.
இந்தி டப் செய்யப்பட்டு
வெளியான பாகுபலி
2 இந்தியிலும்
மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை ரூ. 41 கோடியும், சனிக்கிழமை
ரூ. 40.5 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 46.5 கோடியும் என மொத்தம் ரூ.
128 கோடி வசூல் செய்துள்ளது. கரண்
ஜோஹார் இந்தியில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின்
சாதனைக்குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா
நாயுடு 'ஹாலிவுட் படங்களின் நிகரான சாதனையை பாகுபலி
2 நிகழ்த்தியுள்ளது என்றார்.' மற்றும் திரையுலக பிரபலங்கள்
பலரும் பாராட்டி வருகின்றனர்.
Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment