Actors and Actresses participates Stunt Union's golden festival
Actors and Actresses participates Stunt Union's golden festival
இந்திய திரைக்கலைஞர்கள் பங்கு பெறும் ஸ்டண்ட் யூனியனின் பொன் விழா...
சினிமாவில் பல துறைகள் ஒன்றுபட்டு உருவாக்கினாலும் சண்டைகலைஞர்களின் பங்களிப்பு என்பது மகத்தானது. மற்றதுறைகளை விட உயிருக்கு பாதுகாப்பு என்பது இந்த துறையில் உர்த்தரவாதம் இல்லை, மறைந்த முன்னாள் முதல்வர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவங்கபட்ட யூனியன் 50 ஆண்டை கடந்துள்ளது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டண்ட் யூனியன் தலைவர் அனல் அரசு கூறியதாவது.
‘சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத் தான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது...கூட்டுக் குடும்பமாக உழைத்துத் தான்
ஒரு படம் திரைக்கு வருகிறது அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளை கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் ஸ்டண்ட் யூனியன்...புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால்
துவக்கி வைக்கப் பட்ட எங்கள் யூனியன் பொன்விழா ஆண்டை தொட்டிருப்பது எங்கள் உறுப்பினர்கள் 650 பேருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம்..
இந்த யூனியனின் வளர்ச்சிக்கு இன்றும் எங்களோடு இணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.. இன்று எங்களோடு இல்லா விட்டாலும் யூனியனின் வளர்ச்சிக்கு உழைத்து மறைந்து விட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் ஒவ்வொருவரின் நல்லாசியுடன் கம்பீரமாக நாங்கள் 50 தை கடந்திருக்கிறோம்..
இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக பொன்விழாவை ஆகஸ்ட் 26 ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியாகக் கொண்டாட இருக்கிறோம்..
நாங்கள் இந்திய மொழிப் படங்கள் எல்லாவற்றிலும் இனைந்திருக்கிறோம்...
எங்கள் உழைப்பைப் பற்றியும் எங்கள்இழப்பைப் பற்றியும் எல்லா நடிகர்கள், நடிகைகள் இயக்குநர்கள் ,தயாரிப்பாளர்கள் மற்றும் எல்லா கலைஞர்களுக்கும் தெரியும்..அதனால் எல்லோரையும் நேரிடையாக அழைக்க உள்ளோம்...
எங்களுடைய அழைப்புக்கு நிச்சயம் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறோம்.
விழாவில் மூத்த உறுப்பினர்களை கெளரவப் படுத்த உள்ளோம்..சுமார் 6 மணி நேரம் நடை பெற உள்ள கலை நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் மற்றும் எங்கள் ஸ்டண்ட் கலைஞர்களின்
ஸ்டண்ட் காட்சிகளும் நடை பெறும்..கலா மாஸ்டரின் குழுவினரின் பங்களிப்போடு பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது..இந்த ஷோ இயக்குனராக ‘ மானாட மயிலாட’ புகழ் கோகுல் நாத் இருக்கிறார்..பொன்விழா குழு தலைவராக ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜன் சார் எங்களோடு இருப்பது எங்களுக்கு ரொம்பவும் பெருமை’ என ‘ ஸ்டண்ட் யூனியன்’ தலைவர் அனல் அரசு தெரிவித்தார்.
அவருடன் செயலாளர் செல்வம் பொருளாளர் ஜான் மற்றும்
இணை செயலாளர் ஆர்.நாராயணன் துணை செயலாளர் பரமசிவம் துணைத்தலைவர் ராக்கி ராஜேஷ் உபதலைவர் கே. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment