Is Rajni all set to quit movies?
Is Rajni all set to quit movies?
Film Industry is surprised in a way that Rajini is acting in films back to back. We have always seen him doing films once in 2 or 3 years. He quickly joined Kaala shooting after completing his work in Endhiran 2.0 with director Shankar. Sources believe that Kaala could be Super Star's final movie as he would continue to rock in politics. Political analysts reveals that Rajini could pull the crowd and will have a successful career in politics unlike his friends Vijayakanth and Chiranjeevi. Whatver, Kaala will be a spectacular treat for Super star fans.
சினிமாவுக்கு முழுக்கு போடும் ரஜினி ?
தமிழக அரசியல் மற்றும் சினிமா இரண்டுமே, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சுற்றியே நிகழ்ந்து வருகிறது. ஆனால், ரஜினியோஇயக்குனர் ப.ரஞ்சித்தின் அடுத்த படமானா ‘காலா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பைக்கு சென்றுள்ளார். நீண்ட வருடங்கள் கழித்துதன்னுடைய ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பேசிய அவர் "நான் அரசியலுக்கு வந்தால், ஊழல்செய்பவர்கள், பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுபவர்களை பக்கத்துலயே வைத்துக்கொள்ள மாட்டேன்." எனக் கூறி தன்னுடையஅரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். ஜூலை மாதத்தில், ரஜினி தொடங்க உள்ள கட்சிப்பெயர், அதன் கொடி போன்றவை அறிமுகம்செய்யப்படும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர், இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்த ரஜினி, எந்திரன் 2.0 படத்தின் வேலைகள் முடிந்த உடன் அவரதுஅடுத்த படமான காலாவில் பணியாற்றத் தொடங்கி இருப்பது திரைத்துறையினரையே ஆச்சர்யப்படுத்தி உள்ளது. கபாலி, காலா எனதன்னுடைய வயதிற்கும், கெட்டப்பிற்கும் ஏற்ற கதாப்பாத்திரங்களை அவர் தேர்வு செய்திருப்பதும் புது முயற்சியே. காலா படத்தின்ஷூட்டிங் இன்னும் இரண்டு மாதத்தில் முடிந்துவிடுமாம். அதற்குப் பின்னர் முழுமையாக அரசியல் பக்கம் ரஜினி ஒதுங்கி விடுவார் என்றேதகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் ரஜினி செய்யாத சாதனைகள் ஏதும் மிச்சம் இல்லை, அரசியலில் ஈடுபட இதுவே சரியான தருணம் என்றுஅவரது நலம்விரும்பிகளும் அவருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதனால், தற்போது அவர் நடித்து வரும் ‘காலா’ படமே ரஜினியின்கடைசி திரைப்படமாக அமைய வாய்ப்பிருக்கிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற விஜயகாந்த், சிரஞ்சீவி போன்ற நடிகர்கள்மீண்டும் சினிமாவுக்கு திரும்பி உள்ள நிலையில், அப்படி ஒரு நிலைமை ரஜினிக்கு ஏற்படாது என்றே தமிழக அரசியலை நன்குஅறிந்தவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment