Tuesday 9 May 2017

Is Actor Karthi Sivakumar will Overcome? | தோல்வியிலிருந்து மீள்வாரா கார்த்தி?

Is Actor Karthi Sivakumar will Overcome? | தோல்வியிலிருந்து மீள்வாரா கார்த்தி?
Is Actor Karthi Sivakumar will Overcome? | தோல்வியிலிருந்து மீள்வாரா  கார்த்தி?
தோல்வியிலிருந்து மீள்வாரா  கார்த்தி?
‘காஷ்மோரா', 'காற்று வெளியிடை' இரண்டு படங்களுமே கார்த்தியை வியாபார விஷயத்தில் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. அதிலும் மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை' கார்த்தியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் கார்த்தி,ராகுல் பிரீத்சிங்குடன்  'ட்ரீம்  வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ்' தயாரிப்பில் 'தீரன்  அதிகாரம் ஒன்று' படத்திலும் சாயிஷாவுடன் பிரபுதேவா ஸ்டூடியோ' தயாரிப்பில்  'கருப்புராஜா வெள்ளை ராஜா'  படத்திலும் நடித்து வருகிறார். இந்த 'இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதிலும் ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை  பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கார்த்தி ரசிகர்கள் .சிறுத்தை படத்தில் போலீஸ் வேடமிட்ட கார்த்தி இந்தப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக ‘தீரன் திருமாறன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் வில்லனாக  மோதவிருப்பவர், விஜய் படங்களில் நடித்த அபிமன்யூ சிங் .சண்டைக்காட்சி களில் இருவரும் மோதிக்கொள்ளும் இடங்கள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் காட்சிகளாக இருக்கும் என்கின்றனர். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கார்த்திக்கு  ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படம் நிச்சயமான ஒரு திருப்பு முனை படமாக அமையும் என்கின்றனர் படத்தின் உதவி இயக்குனர்களில்  சிலர்.
படத்தின் முதல் ஷெட்யூல்  45 நாட்கள் வட இந்தியாவில் நடந்தது. இரண்டாவது ஷெட்யூல்  சென்னையில் நடந்து வருகிறது

No comments:

Post a Comment