Monday 8 May 2017

Nettizen alleges cheap act by actress Radhika


Nettizen alleges cheap act by actress Radhika



Nettizen alleges cheap act by actress Radhika 
 
Recently, actress Radhika was the target of the trolls. Netizens were very vocal when a video of actress Radhika endorsing Cocacola, which resulted in multiple memes and troll videos. However, the alleged ad was released in 2005 and some have spread it as if it is a new ad. On clarifying this actress Radhika tweeted, "Understand ur sentiments, but talking about an ad which was done in 2005, Hindi version by Aamir Khan, Shows moral constipation, get a life".
 
However, it didn't stop there, a nettizen named 'Sembiyan' continued to troll Radhika even after her clarifications. Things got uglier when he tweeted about Radhika's personal life. Provoked by him, the actress seemed to have sent him a cheap message describing about his mom and family women. He has posted a screenshot of the message he has received from the actress. Man felt that a top class actress shouldn't have responded a anonymous netizen. Radhika also seeked help fromher followers by tweeting, "Pls all my friends complain @jallikattu_2017 to cybercrime, for abusing all females who follow me. Thks". Actress Thrisha has reteeted and stood with Radhika.
 
கீழ்த்தரமாக நடந்து கொண்டாரா நடிகை ராதிகா 
 
சமீபத்தில் நடிகை ராதிகா தோன்றும் கோககோலா விளம்பரம் சமூக வலை தளங்களில் பரவி வந்தது. இந்த விளம்பரம் காரணமாக நடிகை ராதிகாவுக்கு சமூக வலை தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. பல மீம்களும் வலம் வந்தன. ஆனால், உண்மையில் அந்த விளம்பரம் வெளிவந்தது 2005-ல். இதை பற்றி நடிகை ராதிகாவே விளக்கம் அளித்திருந்தார். 
 
தன்னை பற்றிய தவறான மீம்களை பரப்பியவர்களுடன் நேரடியாக மோதி வந்தார் நடிகை ராதிகா. இந்நிலையில், செம்பியன் என்ற ஒரு நபருக்கும் ராதிகாவுக்குமான மொட்டுகள் மிகவும் கீழ்த்தரமாக சென்றுள்ளது. ராதிகாவைப் பற்றியும் அவரது திருமண வாழ்க்கையைப் பற்றியும் கிண்டல் செய்து தொடர்ச்சியாக பதிவுகள் இட்டு வந்தார் செம்பியன். இதனால், கோபம் அடைந்த ராதிகா செம்பியனுக்கு அனுப்பியதாக ஒரு மெசேஜை அவருடைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார் செம்பியன். குறிப்பிட்ட அந்த பதிவில், செம்பியனின் தாய் மற்றும் குடும்ப பெண்களை பற்றி கீழ்த்தரமாக ராதிகா வர்ணித்தது போன்று உள்ளது. 
 
ஒரு முன்னணி நடிகை இப்படி நடந்து கொள்ளலாமா என்று பலரும் ராதிகா மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த பிரச்சனையை தேவை இன்றி முதலில் தொடங்கி வைத்தவரே அந்த செம்பியன் தான் என்று ராதிகாவுக்கு ஆதரவான குரலும் கேட்கிறது. செம்பியன் என்ற நபரை ட்விட்டரில் இருந்து வெளியேற்ற அவரை ப்ளாக் செய்யுங்கள் என்ற ராதிகாவின் ட்வீட்டை நடிகை த்ரிஷா ரீட்வீட் செய்துள்ளார். ரசிகர்களுடன் நேரடியாக பிரபலங்கள் உரையாட ட்விட்டர் உதவியாக இருந்தாலும் இது போன்ற வெறுப்புணர்வும், கீழ்த்தரமான செய்கைகளும் வெளிப்படுவது வருத்தம் அளிக்கக்கூடியதே. 

No comments:

Post a Comment