Vishal, Karthi's film, sold for huge amount
பெரும் தொகைக்கு விற்ற விஷால்,கார்த்தி படம்
பிரபு தேவா ஸ்டூடியோஸுடன் ஐசரி கணேஷ் இணைந்து தயாரித்து வரும் படம் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' பிரபு தேவா இயக்கிவரும் இப்படத்தில் விஷால், கார்த்தி ஆகியோருடன் கதாநாயகியாக சாயீஷா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே 'வனமகன்' படத்தில் ஜெயம்ரவியுடன் நடித்துள்ளார். சமீபத்தில் விஷால்,கார்த்தியுடன் ஆர்யாவும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
'கருப்பு ராஜா வெள்ளை ராஜா ' படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை விஷாலும் கார்த்தியும் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கொடுத்துள்ளனர் . இந்நிலையில் இப் படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நடிகர் அருண்பாண்டியனின் 'ஏ அன்ட் பி' நிறுவனம் வாங்கியுள்ளதாம். அதுவும் இதுவரை இவர்களின் படங்களுக்கு வாங்கப்பட்ட தொகையை விட அதிகம் என்கின்றனர் வினியாகஸ்தர்கள்.
No comments:
Post a Comment