Tuesday, 30 May 2017

Rangoon Movie Herione will replace Simran Says AR Murugadoss


Rangoon Movie Herione will replace Simran Says AR Murugadoss
Rangoon Movie Herione will replace Simran Says AR Murugadoss

ரங்கூன் படத்தின் நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார் - இயக்குனர் ஏஆர் முருகதாஸ் நம்பிக்கை

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். 

இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்த படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்த படத்தில் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன். இயக்குனர் ராஜ்குமார் சில முக்கிய தருணங்களில் நான் தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானபர், தெளிவான இயக்குனர் என்றார் நாயகன் கௌதம் கார்த்திக்.

வழக்கமா நடக்கிற மாதிரி கதை கேட்டு நான் இந்த படத்துக்கு ஒப்பந்தம் ஆகலை. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என் நண்பர். படத்தை போட்டுக் காட்டினார், படத்துக்கு பின்னணி இசை அமைக்க சொன்னார். கூடவே படத்தில் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்தேன், அவை இரண்டும் படத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் வரும் பயணத்தை பின்னணி இசையின் மூலம் நகர்த்தியிருக்கிறேன். பர்மீஷ் மொழி பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறோம் என்றார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.

இங்க எல்லோரும் என்னை பற்றி அதிகமா புகழும் போது எனக்கு பயமும், அதிக பொறுப்பும் வந்திருக்கிறது. இங்கு என்னை மாதிரி நிறைய திறமையான உதவி இயக்குனர்கள் படம் இயக்கும் முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைச்சவங்க, வாய்ப்பு கிடைக்காதவங்க என்பது தான் உண்மை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் முருகதாஸ். அவருக்கு உதவி இயக்குனர்கள் தாம் குடும்பம். உதவி இயக்குனர்களுக்கு என்ன உதவினாலும் முதல்ல வந்து நிற்பவர். அவரிடம் வேலை செய்தால் படம் இயக்கி விடலாம். அவர் இந்த மாதிரி படம் தயாரிக்கிறதுக்கு முக்கிய காரணம் நிறைய திறமையானவர்களை அறிமுகப்படுத்துவதற்கு  தான். கௌதம் கார்த்திக் தன் எல்லைகளில் இருந்து வெளியே வந்து ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார். ஊட்டி கான்வெண்ட்ல படிச்சவர், வடசென்னை இளைஞராக கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும், படத்தின் உண்மைத் தன்மைக்காக கடுமையாக மெனக்கெட்டிருக்கிறோம். படத்தின் தலைப்பு பாடலான யாத்ரீகா என்ற பாடலை நா. முத்துகுமார் எழுதிக் கொடுத்தார் என்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் எனக்காக வந்து என் படங்களுக்கு உதவி செய்பவர். ஒரு முதல் பட இயக்குனரின் படத்தை நான் தான் தயாரிப்பேன் என் இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு நின்றார்கள். அந்த வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. சிலர் உதவி இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள், ஒரு சிலர் இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். ராஜ்குமார் இரண்டுக்குமே ரொம்ப கஷ்டப்பட்டார். புதுப்புது இடங்களாக தேடித்தேடி, திரையில் தான் நினைத்ததை கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சின்னதிரையில் இருந்து வந்து இயக்குனராகி இருக்கும் ராஜ்குமார் வெற்றி பெற்றால் தான் அவரை போல முயற்சி செய்து வரும் பலருக்கும் நம்பிக்கை வரும். நாயகன் கௌதம் கார்த்திக் படத்துக்காக தன் நிறத்தை மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி நடித்துள்ளார். சிம்ரன் முதல் படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன், அதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் நாயகி சனா, சிம்ரன் விட்டு சென்ற இடத்தை பிடிப்பார் என நம்புகிறேன். நல்ல படங்களை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் ஏஆர் முருகதாஸ்.

ஃபாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங், நாயகி சனா, படத்தின் இன்னொரு இசையமைப்பாளர் விக்ரம், நடன அமைப்பாளர் சதிஷ், சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

No comments:

Post a Comment