Wednesday, 10 May 2017

Justin Bieber's first visit to India

Justin Bieber's first visit to India



Justin Bieber's first visit to India
 
International pop sensation Justin Bieber arrived here today for his maiden concert in India. One might wonder why such craze for Bieber, you should know that JB has 94 million followers in his twitter but the most powerful political leader of the world and US Prez Donald Trump has just 23 million followers. 
 
Titled the 'Purpose World Tour', around 45,000 'Beliebers' are expected to be in attendance for the Grammy- winning singer's first-ever show in India at Navi Mumbai's D Y Patil Stadium. Tickets are priced from Rs.5,000 to whooping Rs.70,000. Arjun Jain of  White Fox is the mastermind behind bringing Justin Bieber to India. We could relate this only to Michael Jackson's concert which took place 2 decades ago.

முதன் முறையாக இந்தியா வந்தார் ஜஸ்டின் பீபர்  
 
அமெரிக்க பாப் இசைக்கலைஞர் ஜஸ்டின் பீபர் முதன் முறையாக இந்தியா வந்துள்ளார். இளம் வயதிலேயே புகழ் வெளிச்சத்திற்கு வந்த ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ட்விட்டரில் இவருக்கு 94 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர், இது என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்யுக்கே வெறும் 23 மில்லியன் ஃபாலோயர்கள் தான் உள்ளனர். அந்த அளவுக்கு, அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இந்தியாவிலும், இளம் தலைமுறையினரிடம் பீபருக்கான ஈர்ப்பு அதிகம். ஆனாலும், இது வரை இந்தியாவில் நிகழ்ச்சி எதுவும் நடத்தியதில்லை ஜஸ்டின் பீபர்.
 
வளர்ந்துவரும் இந்திய நிறுவனமான 'வொயிட் ஃபாக்ஸ்' நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் ஜெயின் எடுத்த கடும் முயற்சியின் மூலமாக இந்தியா வந்துள்ளார் ஜஸ்டின் பீபர். இன்று மும்பையில் நடைபெறும் இசை விழாவில், முதன்முறையாக இந்திய ரசிகர்களுக்காக பாட இருக்கிறார் பீபர். 45,000 க்கும் அதிகமான பீபர ரசிகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட்டின் விலை குறைந்த பட்சம் 5,000 முதல் 70,000 ருபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வளவு விலை விற்றாலும், மொத்த  டிக்கெட்டுகளும் காலியாகி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க பாப் இசையின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சிக்கும் இதே போன்ற வரவேற்பு இருந்தது குறிப்பிடத் தக்கது. 

No comments:

Post a Comment