Call For Film Studio
திரைப்பட கல்லுரியில் சேர அழைப்பு
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லூரி, கோல்கட்டாவில் உள்ள சத்யஜித்ரே திரைப்பட கல்லூரி, புனே திரைப்பட கல்லூரி என, இந்திய அளவில் மூன்று அரசு திரைப்பட கல்லூரிகள் செயல்படுகின்றன. இது தவிர பல தனியார் திரைப்பட கல்லுரரிகளும் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் இயக்குனர் பாரதிராஜா ஒரு திரைப்பட கல்லூரி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவற்றில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே கல்வி நிறுவனம் எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியேட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு (எடிட்டிங்), அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த பட்டய படிப்புகளுக்கான 2017-18 ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் இணையதளத்தில் 10-ம் தேதி இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது. இந்த இனைய தளத்தில் இதற்கான அனைத்து விபரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment