Monday 8 May 2017

Nagma's meet with Rajni shocks BJP

Nagma's meet with Rajni shocks BJP
Nagma's meet with Rajni shocks BJP
Yesteryear actress and Mahila Congress President Nagma met Rajinikanth at his residence recently. Though it has been said it was a friendly meeting, it has triggered political speculation that BJP is trying to woo the superstar to join the party.
Sharing several picture along with the superstar, Nagma tweeted, "In conversation with my favourite #co-star and friend #Rajnikant from Baasha met him today was so nice to catch up wth him in various issues."
To a question, she said many people have huge expectations from Rajinikanth and added that "if he comes politics he will be very successful and he will be very good." She also said that she's retired from movies, when asked if she would again with Rajni.
ரஜினியை சந்தித்து பாஜகவிற்கு முட்டுக்கட்டை போட்ட நக்மா
பிரபல முன்னாள் நடிகையம் மஹிளா காங்கிரசின் பொதுச் செயலாளருமான நக்மா சமீபத்தில் தன்னுடைய பாட்ஷா படத்தின் ஹீரோவான சூப்பர் ஸ்டார் ரஜினியை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். ரஜினியை எப்படியாவது தங்களின் கட்சிக்கு அழைத்து வர வேண்டும் என்று பாஜகவினர் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரசை சேர்ந்த நக்மா சந்தித்து பாஜகவினருக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். 

ரஜினியுடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டரில்  வெளியிட்டுள்ளார் நக்மா. என்னுடைய விருப்பமான நடிகரும், பாட்ஷா படத்தின் ஹீரோவும், நல்ல நண்பருமான ரஜினிகாந்த் அவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று சந்தித்து உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியான தருணம்" என்று கூறியுள்ளார். 

சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, நீண்ட கால நண்பர் என்ற முறையில் ரஜினியை சந்தித்தாக கூறினார். "ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் மற்றும் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அவர் அரசியலுக்கு வந்தால், நிச்சயம் பெரும் வெற்றி பெறுவார் அதனால் மக்களுக்கு நல்லது நடைபெறும்." என்று கூறிய நக்மா, ரஜினியுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு "நான் இப்போது நடிப்பிலிருந்து ஓய்வில் இருக்கிறேன்' என்றார்.    

No comments:

Post a Comment