Tuesday 9 May 2017

ஜனாதிபதி தேர்தலுக்காக களேபரமாகும் தமிழக அரசியல்

ஜனாதிபதி தேர்தலுக்காக களேபரமாகும் தமிழக அரசியல்


ஜனாதிபதி தேர்தலுக்காக களேபரமாகும் தமிழக அரசியல் 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், களேபரமாகி இருக்கும் தமிழா அரசியல் வெகு விரைவில் இன்னுமோர் களேபரத்திற்கு தயாராகி வருகிறது. இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் பிராபி முகர்ஜியின் பாதிக்கலாம் வரும் ஜூலை மதத்துடன் முடிவடைய இருக்கிறது. ஜுலே 25ஆம் தேதிக்குள் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். ஜூன் முதல் வாரத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி தேர்தல், முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளின் பலத்தை சோதிப்பதற்கான களமாகும். அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் ஜெயலலிதா இருந்த போது 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 135 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற மிகப்பெரிய பலத்தை கொண்டு மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை வைத்திருந்தார். ஆனால், அவர் மறைவுக்குப் பின்னர் இரண்டாக பிளவு பட்டு நிற்கிறது அதிமுக. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் இவர்களை பிரித்து, இருவருடைய ஆதரவையும் கபளீகரம் செய்ய காத்திருக்கிறது மத்தியில் ஆளும் பிஜேபி. 

தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர் என்றாலும் மோடி மற்றும் அவரது அரசுக்கு அனுசுரணையாகவே நடந்து கொண்டார். பிரணாப்பின் மீது மோடிக்கும் நம்பிக்கை இருக்கிறது ஆனால், மீண்டும் அவரை ஜனாதிபதி ஆக்கும் அளவுக்கு அந்த நம்பிக்கை இல்லை. வரவிருக்கும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி தற்போது இருக்கும் பலத்துடன் ஜெயிக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருப்பதே அதற்கு காரணம். ஒருவேளை, எம்பிக்களின் எண்னிக்கை பிசகினால், பிரணாப் பிஜேபியை ஆட்சி அமைக்க அழைப்பாரா என்ற பயம் காரணமாகவே வேறு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தேடுகிறது பிஜேபி.

இதுவரை திரைமறைவில் மட்டும் ஆட்சியை இயக்கி வந்த ஆர்எஸ்எஸ் முதன் முறையாக உயர்ந்த பதவியில் அமர வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், தமிழக பாஜகவின் முன்னணி தலைவர் எச்.ராஜா, "ஆர்எஸ்எஸ் தலைவர் ஜனாதிபதி ஆவார், அதில் உங்களுக்கென பிரச்சனை.." என்று கூறியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம், பிரதமர் பதவிக்காக காத்திருந்து கிடைக்காமல், ஜனாதிபதி பதவியாவது கிடைக்கும் என்று இலவு காத்த எல்.கே.அத்வானிக்கும் வாசற்கதவை கதவை காட்டி உள்ளது பிஜேபி தலைமை. 

இந்த பக்கம் காங்கிரஸோ, 2014 தேர்தலில் தாங்கள் இழந்ததை மீண்டும் எட்டிப் பிடிக்க இந்த ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கிறது. பாஜகவிற்கு எதிராக அனைத்து மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை இப்போதே தொடங்கி விட்டது. உத்திரப்பிரதேசத்தில், முலாயம், மாயாவதி என்று பரம எதிரிகளை ஒரே அணியில் இணைக்கும் அளவிற்கான முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பிரிந்து இருக்கும் இரண்டு அதிமுக அணிகளையும் பாஜக தங்கள் வழிக்கு கொண்டு வந்துவிடும் என்பதால், எதிரே இருக்கும் தங்கள் பழைய நட்பான திமுகவிற்கு தூது விட்டுள்ளது. 

முன்னாள் நடிகையும், மஹிளா காங்கிரசின் தலைவர் நக்மா, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வரும் ஜூன் மாதம் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில், அதிமுகவை தவிர்த்த மற்ற கட்சிகளை அழைத்து, ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு இருப்பவர்களை ஒரே அணையில் திரளச் செய்யும் முன்னேற்பாடுகள் ஜோராக நடந்து வருகின்றன. ஆனாலும், இரண்டு அதிமுக அணிகளிலும் உள்ள சிலரை கடைசி நேரத்தில் தங்கள் பக்கம் இழுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. அப்போது தமிழக அரசியல் காட்சிகள் இன்னும் களேபரமாகும். யார் எதிர்பார்த்தது, அணி தாவல் தடை சட்டம் அது இதுவென்று ஆட்சியை கலைக்கும் அளவிற்கும் செல்லலாம். என்ன நடந்தாலும், ஜனாதிபதி தேர்தல் வரையிலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிப்பார் என்பது மட்டும் உறுதி. 

No comments:

Post a Comment