Monday, 1 May 2017

Second look of Ajith's Vivegam on his birthday

Second look of Ajith's Vivegam on his birthday
Second look of Ajith's Vivegam on his birthday
It is no doubt that hard working actor 'Thala' Ajith born on May 1, which falls on International labour day. Thala is known for his hard working who made it big in Indian cinema on his own. He is an inspiration for millions of his fans who believes hard work will take you places. 
Ajith is currently working on Vivegam, and the team of Vivegam is wishing the actor with second look of the film. The pic has taken storm in social media already, in which Ajith is looking massive and courageous. 
 
We have already reported that Thala Ajith's upcoming movie Vivegam's teaser trailer of the film is to be unveiled today on the occasion Ajith's birthday by Director 'Siruthai' Siva. to release a short clipping of a song sequence of the film. Music composer Anirudh has composed this song and actress Kajal Agarwal will be seen alongside Ajith. With this movie Actor Kamal's second daughter Akshara Hasan making her debut in Tamil. Famous Bollywood actor Vevek Oberoi casted in Vivegam as villain for the first time. 
 
உழைப்பாளர் தின ஸ்பெஷல் அஜித்தின் இரண்டாம் லுக் 

உலகமே உழைப்பாளர்களை கொண்டாடும் மே 1 அன்று பிறந்த 'தல' அஜித் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம். கடினமாக உழைத்தால், எந்த வெற்றியும் தானாய் நம்மை வந்து சேரும் என்பதற்கு அஜித்தின் வாழ்க்கையே உதாரணம். தற்போது தல அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் விவேகம் படக்குழுவினர். 

முன்னர் வெளியான விவேகம் பட பர்ஸ்ட் லுக்கில், சிக்ஸ் பேக்குடன் வெற்றுடம்புடன் அட்டகாசமாய் இருந்தார். இப்போது வெளியாகியுள்ள இரண்டாம் லுக்கில், கர்ஜிக்கும் சக்திவாய்ந்த போராளி போன்று அசத்தலாக இருக்கிறார் நம்ம தல. பனிக்காட்டின் நடுவே, ஒரு மாபெரும் மரக்கட்டையை தூக்கி போடும் படி இருக்கிற அந்த லுக், படத்தில் வரும் இடைவேளைக் காட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விவேகம் படத்தின்  டீசரை, அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட உள்ளதாக முன்னரே நாம் சொல்லி இருந்தோம். இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக டீசரை வெளியிடவுள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா. படத்தின் டீசர் வெளியாகும் போதே, படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் இரண்டு நிமிட வீடியோவையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கு இந்த பாடலில் நடிகை காஜல் அகர்வாலுடன் தோன்ற இருக்கிறார் நம்ம தல. 

விவேகம் படத்தில், மூன்றாம் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கை கோர்த்துள்ளார் நம்ம தல. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் மட்டுமல்லாமல், உலக நாயகன் கமலின் இரண்டாம் மகள் அக்ஷரா ஹாசன் தமிழில் அறிமுகம் ஆகிறார். மேலும், இந்தியில் பெரும் நாயகனான விவேக் ஓபராய், இப்படத்தில் வில்லனாய் அஜித்துடன் மோதுகிறார்.  

No comments:

Post a Comment