Sunday 8 October 2017

Shankar’s Indian 2 Movie Story is Ready | Kamal returns as Senapathy| இந்தியன் 2 கதை தயார் | Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News

We were among the first to report about Shankar teaming up with Kamal Haasan after 21 years for Indian 2. Though there were so many speculations till date, now we finally have an official word regarding this project.
Renowned Telugu producer Dil Raju's banner officially confirmed the news via Twitter, "Delighted to be associated with two stalwarts of Indian Cinema @ikamalhaasan and @shankarshanmugh for the prestigious project #Indian2"
இந்தியன் 2 கதை தயார்                                          
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் வசூல் குவித்தது. குறிப்பாக  கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் 2-பாகம் எடுக்கப்போவதாக உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- "நான் ஒவ்வொரு படத்தை உருவாகும் போதும் அதன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதன்படி தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 தயாராகி வருகிறது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு அதற்கான கரு என் மனதில் உருவாகி அதற்கான திரைக்கதையை தயார் செய்து வந்தேன். தற்போது அது இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் இந்தியன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கப்படும்" என்றார். இது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் அரசியல் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்கின்றனர்.

No comments:

Post a Comment