Wednesday, 31 May 2017

பிறந்தநாளில் பெயர் சூட்டும் விழா | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


பிறந்தநாளில் பெயர் சூட்டும் விழா | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
பிறந்தநாளில் பெயர் சூட்டும் விழா | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Vijay 61 movie name title will be announce on Vijay’s Birthday June 22nd | பிறந்தநாளில் பெயர் சூட்டும் விழா | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் படம் தான் விஜய் 61. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த ஒரு மாதமாக ஐரோப்பாவில் நடந்து கொண்டு வருகிறது. ஐரோப்பாவில் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னை திரும்பவிருக்கிறது படக்குழு.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படமான விஜய் 61 படத்தில் விஜயுடன் சேர்ந்து காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு இசை புயல் .ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார்.
இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கடைசியில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளது படக்குழு.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் டைட்டில் பிரஸ்ட் லுக்'கை விஜயின் பிறந்த நாள் ஆன ஜூன் 22ஆம் தேதி அன்று வெளியிட உள்ளது விஜய் 61 குழு
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

தலைவரை ஓரம்கட்டிய தல|Tamil Cinema News|Kollywood News|Tamil Cinema Seithigal


தலைவரை ஓரம்கட்டிய தல|Tamil Cinema News|Kollywood News|Tamil Cinema Seithigal
தலைவரை ஓரம்கட்டிய தல|Tamil Cinema News|Kollywood News|Tamil Cinema Seithigal
Thala Ajith’s Vivegam Teaser Overtakes Superstar Rajini’s Kabali Teaser | தலைவரை ஓரம்கட்டிய தல|Tamil Cinema News|Kollywood News|Tamil Cinema Seithigal
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன் மற்றும் பலர் நடித்து வரும் படம்விவேகம்‘.இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் டீசர் மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
விரைவில் இது 14 மில்லியன் பார்வையையும், 4 லட்சம் லைக்குகளையும் தொட உள்ளது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றுள்ளது.குறிப்பாக பல்கேரியா நாட்டில் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல்விவேகம்படத்திற்கான டப்பிங் பணிகள் ஆரம்பமாக உள்ளன.விவேகம்படத்தின் டீசர்கபாலிடீசரை முறியடித்துள்ளது. இந்நிலையில்இப்படத்தின் வியாபாரமும், வசூலும் அதைவிடப் பெரிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Tuesday, 30 May 2017

Rangoon Movie Herione will replace Simran Says AR Murugadoss


Rangoon Movie Herione will replace Simran Says AR Murugadoss
Rangoon Movie Herione will replace Simran Says AR Murugadoss

ரங்கூன் படத்தின் நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார் - இயக்குனர் ஏஆர் முருகதாஸ் நம்பிக்கை

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். 

இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்த படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்த படத்தில் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன். இயக்குனர் ராஜ்குமார் சில முக்கிய தருணங்களில் நான் தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானபர், தெளிவான இயக்குனர் என்றார் நாயகன் கௌதம் கார்த்திக்.

வழக்கமா நடக்கிற மாதிரி கதை கேட்டு நான் இந்த படத்துக்கு ஒப்பந்தம் ஆகலை. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என் நண்பர். படத்தை போட்டுக் காட்டினார், படத்துக்கு பின்னணி இசை அமைக்க சொன்னார். கூடவே படத்தில் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்தேன், அவை இரண்டும் படத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் வரும் பயணத்தை பின்னணி இசையின் மூலம் நகர்த்தியிருக்கிறேன். பர்மீஷ் மொழி பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறோம் என்றார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.

இங்க எல்லோரும் என்னை பற்றி அதிகமா புகழும் போது எனக்கு பயமும், அதிக பொறுப்பும் வந்திருக்கிறது. இங்கு என்னை மாதிரி நிறைய திறமையான உதவி இயக்குனர்கள் படம் இயக்கும் முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைச்சவங்க, வாய்ப்பு கிடைக்காதவங்க என்பது தான் உண்மை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் முருகதாஸ். அவருக்கு உதவி இயக்குனர்கள் தாம் குடும்பம். உதவி இயக்குனர்களுக்கு என்ன உதவினாலும் முதல்ல வந்து நிற்பவர். அவரிடம் வேலை செய்தால் படம் இயக்கி விடலாம். அவர் இந்த மாதிரி படம் தயாரிக்கிறதுக்கு முக்கிய காரணம் நிறைய திறமையானவர்களை அறிமுகப்படுத்துவதற்கு  தான். கௌதம் கார்த்திக் தன் எல்லைகளில் இருந்து வெளியே வந்து ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார். ஊட்டி கான்வெண்ட்ல படிச்சவர், வடசென்னை இளைஞராக கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும், படத்தின் உண்மைத் தன்மைக்காக கடுமையாக மெனக்கெட்டிருக்கிறோம். படத்தின் தலைப்பு பாடலான யாத்ரீகா என்ற பாடலை நா. முத்துகுமார் எழுதிக் கொடுத்தார் என்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் எனக்காக வந்து என் படங்களுக்கு உதவி செய்பவர். ஒரு முதல் பட இயக்குனரின் படத்தை நான் தான் தயாரிப்பேன் என் இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு நின்றார்கள். அந்த வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. சிலர் உதவி இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள், ஒரு சிலர் இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். ராஜ்குமார் இரண்டுக்குமே ரொம்ப கஷ்டப்பட்டார். புதுப்புது இடங்களாக தேடித்தேடி, திரையில் தான் நினைத்ததை கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சின்னதிரையில் இருந்து வந்து இயக்குனராகி இருக்கும் ராஜ்குமார் வெற்றி பெற்றால் தான் அவரை போல முயற்சி செய்து வரும் பலருக்கும் நம்பிக்கை வரும். நாயகன் கௌதம் கார்த்திக் படத்துக்காக தன் நிறத்தை மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி நடித்துள்ளார். சிம்ரன் முதல் படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன், அதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் நாயகி சனா, சிம்ரன் விட்டு சென்ற இடத்தை பிடிப்பார் என நம்புகிறேன். நல்ல படங்களை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் ஏஆர் முருகதாஸ்.

ஃபாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங், நாயகி சனா, படத்தின் இன்னொரு இசையமைப்பாளர் விக்ரம், நடன அமைப்பாளர் சதிஷ், சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Swathi Kolai Valaku Movie Trailer Launch | Swathi Kolai Valaku Trailer Launch

சங்கமித்ராவில் ஸ்ருதி விலகினாரா? விலக்கப்பட்டாரா?|Tamil Cinema News|Tamil Cinema Seithigal

சங்கமித்ராவில் ஸ்ருதி விலகினாரா? விலக்கப்பட்டாரா?|Tamil Cinema News|Tamil Cinema Seithigal
சங்கமித்ராவில் ஸ்ருதி விலகினாரா? விலக்கப்பட்டாரா?|Tamil Cinema News|Tamil Cinema Seithigal|Kollywood News
Is She Sruthi Hassan exits from the Sangamithra Movie|சங்கமித்ராவில் ஸ்ருதி விலகினாரா? விலக்கப்பட்டாரா?|Tamil Cinema News|Tamil Cinema Seithigal|Kollywood News
ஜெயம்ரவி, ஆர்யா ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் படம்சங்கமித்ரா’. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப்படத்திலிருந்து விலகியுள்ளார் ஸ்ருதிஹாசன். ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய கேரக்டரை உள்வாங்கிய ஸ்ருதிஹாசன் குதிரையேற்றம், வாள் பயிற்சி உள்பட தனது கேரக்டருக்காக தன்னை மெருகேற்றி வந்த நிலையில்சங்கமித்ராபடத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் விலக காரணமாக அவர் கொடுத்த அறிவிப்பு படக்குழுவினர் உட்பட அனைவரையும் அதிரச்செய்தது.தாது என்னவென்றால் முழுமையான ஸ்க்ரிப்ட் தனக்கு கொடுக்கப்படவில்லை அத்துடன் சரியான படப்பிடிப்பிற்கான தேதிகளையும் கொடுக்கவில்லை எனவேசங்கமித்ராபடத்திலிருந்து விலகுகிறேன் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். ஆனால் படக்குழுவினர் நாங்கள் தான் வெளியேற்றினோம் என்கின்றனர்.
இது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவது என்னவென்றால் ஸ்ருதிஹாசன் படத்திற்காக சண்டைப் பயிற்சிக்காக  தன்னை தயார் படுத்திக்கொள்ள தயாரிப்பு தரப்பினரால் அமர்த்தப்படும் பயிற்சியாளர்களைத் தவிர்த்துவிட்டு தனக்கு பிடித்த  வெளிநாட்டு பயிற்சியாளர்களை வைத்துக்கொள்வதாகவும் அதற்கான செலவை தயாரிப்பாளரே ஏற்றுக் கொள்ளவேன்டும் என்று நடந்த பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட மோதல் ஸ்ருதிஹாசன் விலக காரணம் என்கின்றனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

கல்யாணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுகொள்வேன்!|Tamil Cinema News|Tamil Cinema Seithigal

கல்யாணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுகொள்வேன்!|Tamil Cinema News|Tamil Cinema Seithigal
கல்யாணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுகொள்வேன்!|Tamil Cinema News|Tamil Cinema Seithigal|Kollywood News
Shruthi Haasan wants a baby before marriage| கல்யாணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுகொள்வேன்!|Tamil Cinema News|Tamil Cinema Seithigal|Kollywood News
கோலிவுட் தவிர பாலிவுட்டிலும்,டோலிவுட்டிலும் கவர்ச்சி நடிப்பில் கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன். அப்பாவின் (கமல்ஹாசன்) பெயரை பயன்படுத்தாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துகொண்டவர். சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்ருதிஹாசனின் காதலர் மைக்கேல் கோர்சேல் என கிசுகிசுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசனிடம் அவரின் திருமணம் குறித்து கேட்கபட்டதாம் அப்போது அவர்திருமணத்திற்கு இன்னும் சரியான நேரம் வரவில்லை. எனக்கேற்ற நபரை இன்னும் சந்திக்கவில்லை. அப்படி சந்தித்தால் திருமணம் செய்துகொள்வேன். மேலும் கல்யாணத்திற்கு முன்னதாக குழந்தை பெற்றுகொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என அதிரடியாக கூறியுள்ளாராம்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

‘சுவாதி கொலை’ படமாகிறது | Tamil Cinema News |Tamil Cinema Seithigal | Kollywood News


‘சுவாதி கொலை’ படமாகிறது | Tamil Cinema News |Tamil Cinema Seithigal | Kollywood News
சுவாதி கொலை’  படமாகிறது | Tamil Cinema News |Tamil Cinema Seithigal | Kollywood News
Nungambakkam Swathi Murder Case is going to reveal as a movie| ‘சுவாதி கொலை’  படமாகிறது | Tamil Cinema News |Tamil Cinema Seithigal | Kollywood News
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.K.சுப்பையா தயாரிக்கும் படத்திற்குசுவாதி கொலை வழக்குஎன்று பெயரிட்டுள்ளனர்..சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கையில் எடுத்திருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்..இவர் விஜயகாந்த் நடித்த உளவுத்துறை அருண்விஜய் நடித்த ஜனனம் மற்றும் வஜ்ரம் படத்தையும் இயக்கியவர்.
இந்தப் படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார்.மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
கதை வசனத்தை R.P.ரவி எழுதி இருக்கிறார்...இவர் ஏற்கெனவே விமல் நடித்த சில்லுன்னு ஒரு சந்திப்பு மற்றும்  தற்காப்பு போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன். தயாரிப்பு: S. K.சுப்பையா.
நிஜ சம்பங்களை படமாக்கும் போது சுவாரஸ்யத்திற்காகவும் பரபரப்புக்காகவும்  கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு...ஆனால் சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப் பட வில்லை..நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர்..
பரபரப்பான சம்பவங்கள் இந்த படத்தின் சிறப்பம்சம்.. மக்களுக்கு தெரிவிக்கப் படாத நிறைய சம்பங்கள் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ளது...அந்த காட்சிகளை திரையில் பார்க்கும்  ஒவ்வொருவரும் மனமும் திடுக்கிட்டுப் போகும்.. இப்படி கூடவா நடக்கும் என்று யோசிப்பார்கள் என்றார் இயக்குனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Swathi Kolai Valaku Movie Trailer Launch | Actor Vishal Speech in Swathi Kolai Valaku Trailer Launch


PakkaTv Cocktail is a compilation of Last Week's Latest Hot News, Cinema Events, Box Office Collections, Tamil cinema Gossips, Twitter Trends and the latest political news. You can watch the highlight news of the previous week that happens in social media like Facebook and Twitter and all the latest hot Kollywood news and Tamil cinema news.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

Monday, 29 May 2017

Truth Reasons Behind the Name’Ganja
Truth Reasons Behind the Name’Ganja’| கஞ்சா பட்டம் எப்படி வந்தது?!|Tamil Cinema News|Tamil Cinema Seithigal| Kollywood News
In an exclusive interview with our Pakka Tv, comedian Ganja Karuppu shared his life experiences. He told us that director Bala is the reason behind his lavish life, who introduced the actor in his movie Pithamagan. "Director Ameer also gave me wonderful characters like 'Vaalavandhan' in his films. I'm thankful to both of them whom I consider as my brothers", said Ganja Karuppu.
The interview was on live in Pakka Tv's facebook page, in which he also talked about his downfall as a producer, political interest, his upcoming movies, Rajini's Kaala and many more. You can enjoy the full interview below.
Youtube Link: https://youtu.be/eceXmlfY9_Q

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, நம் பக்கா டிவிக்கு ஃபேஸ்புக்  லைவ்வில் அளித்த பிரத்யேக பேட்டியில் சுவாரஸ்யமான தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இயக்குனர் பாலாவின் மூலமாக தான் சினிமாவுக்கு வந்தேன், ஷூட்டிங்கில் சமைப்பதற்காக சென்ற என்னை நடிகனாக்கி அழகு பார்த்தவர் அண்ணன் இயக்குனர் பாலா. அதே போன்று எனக்கு இன்னொரு அண்ணனாக இருந்துவாழவந்தான்என்ற அற்புதமான கதாப்பாத்திரத்தை தந்து எனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுத் தந்தவர் இயக்குனர் அமீர்.

காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த என்னை குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து, என் நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார் இயக்குனர் சமுத்திரக்கனி. இடையில்தயாரிப்பாளர் ஆக அவதாரம் எடுத்து ஒரு படத்தை தயாரித்து, நஷ்டம் அடைந்தேன். அதனால், நான் இழந்ததே அதிகம். என் மீது கொண்ட அன்பினால் இயக்குனர் பாலா என்னை கடிந்து கொண்டார். இனி வெறும் நடிப்பு மட்டுமே என்னுடைய வேலையாக இருக்கும். தற்சமயம்பள்ளிப்பருவம்’, ‘நாச்சியார்உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். பக்கா டிவி மூலம் ரசிகர்களுடன் தொடர்பு கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று நம்மிடம் பேசினார். மேலும், கஞ்சா என்ற பட்டம் எப்படி வந்தது, அரசியல் ஆர்வம், ரஜினியின்காலாதிரைப்படம் பற்றி கஞ்சா கருப்பு அவர்களின் இந்த பேட்டியின் முழு வடிவத்தைபக்காடிவியில் காணலாம்
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us: