Wednesday, 3 May 2017

Keerthy Suresh joins Trisha's film

Keerthy Suresh joins Trisha's film
Keerthy Suresh joins Trisha's film        
Diretor Hari is working on the script of Sami 2. Actor Vikram and Trisha were the lead actors in Sami. Earlier, Hari was looking out for a new heroine, however Trisha has  retained her role in Sami 2. This will be her third movie with actor Vikram and Hari.
In the recent progress, director Hari has casted actress Keerthy Suresh along with Trisha as leading lady. Earlier he has casted second heroines in his Singam 2 and 3. We should note that Keerthy Suresh declined a movie offer opposite actor Vikram citing age difference between them. Surprisingly, she has agreed to do Sami 2. 
த்ரிஷாவுக்கு போட்டியாக வந்த கீர்த்தி சுரேஷ்
டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்த 'சாமி' படம் சூப்பர் ஹிட் படமாய் அமைந்தது. சாமி வெளியாகி 14 ஆண்டுகள் கழிந்த பின்னர், மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார் ஹரி. விக்ரமே இந்த படத்திலும் நடிக்கிறார். ஆனால், த்ரிஷாவுக்கு பதிலாக வேறு நடிகையையோ தேடுவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தன்னுடைய கேரக்டரை தானே தக்க வைத்துக் கொண்டார் த்ரிஷா. இயக்குனர் ஹரி மற்றும் த்ரிஷா இருவருமே இந்த தகவலை உறுதி செய்திருந்தனர்.

தற்போது சாமி-2ல் விக்ரமுடன் மற்றொரு கதாநாயகியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷை புக் செய்துள்ளனர். இதற்கு முன்னர் சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 படங்களை எடுத்திருந்த ஹரி, முக்கிய கதாநாயகி அனுஷ்காவை தவிர்த்து ஹன்ஷிகா, ஸ்ருதி ஹாசன் போன்றோரையும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வைத்திருந்தார். சாமி-2ல் தாம் நடிப்பதை உறுதி செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை வயது வித்தியாசம் காட்டி நடிக்க மறுத்தார் கீர்த்தி சுரேஷ். அதனால், ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்றிருந்தவரிடம் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ, தற்போது விகாரமுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். 

No comments:

Post a Comment