Suicide of Artists continues!
தொடரும் நடிகர்களின் தற்கொலை!
சில வாரங்களுக்கு முன்னர் டிவி, சினிமா நடிகை நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்சசியடைய வைத்தது. அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் பிரபல தெலுங்கு சீரியல் நடிகர் ஓருவர் ஆந்திர மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது பெயர் பிரதீப் குமார்.தமிழ் தொலைக்காட்சி தொடரான 'சுமங்கலி' சீரியலில் முக்கிய வேடத்தில் நடிகர் பீரதிப் நடித்து வந்தார். மேலும் சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது நண்பர்கள் இவரது தற்கொலை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment