"The Mangalapuram" Based on A Horror Story
அமானுஷ்ய கதையாக உருவாகிறது “ மங்களாபுரம் “
ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக புதுவை G.கோபால்சாமி தயாரிக்கும் படம் “ மங்களாபுரம் “
இந்த படத்தில் யாகவன், சிவகுரு, இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக காயத்ரி கமலி,இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் அஜெய்ரத்னம், டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, சந்தோஷ், வேலுசாமி, பேபி தர்ஷினி, பேபி மகதி ஆகியோர் நடிக்கிறார்கள்.
திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - R.கோபால் படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது..
புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவுக்கு குடியேறுகிறார்கள். அந்த பங்களாவுக்குள் அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்யா ஷக்தி தடுக்கிறது. அந்த அமானுஷ்யா ஷக்தி யார் ? இளம் காதலர்கள் வென்றார்களா ? அமானுஷ்யா ஷக்தி வென்றதா என்கிற பரபரப்பான திரைக்கதைதான் “ மங்களாபுரம் “ மது என்கிற அரக்கன் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதுதான் படத்தின் மையக் கரு.படப்பிடிப்பு சென்னை காரைக்குடி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது படம் இம்மாதம் வெளியாகிறது என்றார் இயக்குனர்.
No comments:
Post a Comment