Tuesday, 20 September 2016

டிச.16-ல் வெளியாகிறது 'சிங்கம் 3'

%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A.16-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/


டிச.16-ல் வெளியாகிறது 'சிங்கம் 3'
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'சிங்கம் 3' டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சிங்கம் 3'. ஹரி இயக்கிவரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழு இதனை உறுதிப்படுத்தாமல் இருந்தது.
சென்னையில் படத்தின் முதல் பாடல் மற்றும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளையும் காட்சிப்படுத்த இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மலேசியாவில் சில முக்கிய காட்சிகளையும், ஜார்ஜியாவில் ஒரு பாடலையும் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
தற்போது டிசம்பர் 16ம் தேதி 'சிங்கம் 3' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறைகளை கணக்கில் கொண்டு இத்தேதியை இறுதி செய்திருக்கிறது படக்குழு.


No comments:

Post a Comment