Samantha-and-Naga-Chaitanya-Wedding-Date-Confirmed/
Samantha and Naga Chaitanya Wedding Date Confirmed?
சமந்தா நாக சைதன்யா திருமண தேதி முடிவானது
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு இளம் நடிகர் ஒருவரை காதலிக்கிறேன் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளோம் என்றும் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் நடிகர் யார் என்பதை சொல்ல மறுத்து விட்டார். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைத்தான் அவர் காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் பரவின.
அதை மெய்ப்பிக்கும் விதமாக இருவரும் பட விழாக்களுக்கும், விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக சென்று வந்த படங்களும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன்ற படங்களும் வெளிவந்தன. நாகார்ஜுனாவும் தனது மகன் காதலில் இருப்பதை உறுதிப்படுத்தினார். அவரும் பெயரை சொல்லாமலேயே எங்களுக்கு பிடித்தமான பெண்ணையே நாக சைதன்யா தேர்வு செய்து இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
தற்போது சமந்தா தனது காதலன் நாக சைதன்யாதான் என்பதை உறுதி செய்து இருக்கிறார். இதுகுறித்து அவர் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் காதலிப்பவர் யார் என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். நடிகர் நாக சைதன்யாவைத்தான் காதலிக்கிறேன். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. 2 பேர் பெற்றோர்களின் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு இருக்கிறது. குடும்பத்தினர் திருமண தேதியை முடிவு செய்து அறிவிப்பார்கள். தெலுங்கில் நான் முதல் படத்தில் அறிமுகமான நாளில் இருந்தே நாக சைதன்யா நெருக்கமானவராகி விட்டார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் எங்கள் காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரிய வந்தது.
திருமணத்துக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. எட்டு வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவது பற்றி சிந்திக்கவே இல்லை. நாக சைதன்யாவும் தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பதை விரும்புகிறார்.
சினிமாவை நேசிக்கும் ஒரு குடும்பத்திலேயே வாழ்க்கைப்பட்டு போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு ரசிகர்கள் என்னை எப்படி ஏற்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்னை வேண்டாம் என்று சொல்வது வரை நடித்துக்கொண்டே இருப்பேன்.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
நாக சைதன்யாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்று கேட்டபோது, “நாக சைதன்யாவிடம் நிறைய பிடித்த விஷயங்கள் இருக்கிறது. குழப்பமாக இருந்த என் வாழ்க்கையை மாற்றி ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்தது அவர்தான். ஒரு படகுக்கு துடுப்பு எப்படி முக்கியமோ அதுமாதிரி என் வாழ்க்கையில் அவர் இருக்கிறார்” என்றார்.
No comments:
Post a Comment