Tuesday, 20 September 2016

மலேசியா படப்பிடிப்பின் போது தன்ஷிகாவுக்கு நடந்தது என்ன?

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/



மலேசியா படப்பிடிப்பின் போது தன்ஷிகாவுக்கு நடந்தது என்ன?
கபாலிக்கு பிறகு தன்ஷிகா நாயகியாக நடித்து வரும் படம்ராணி’. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜயசாந்தி பாணியில் நடிக்கிறார். சமுத்திரக்கனியின் உதவியாளர் பாணி இயக்கும் இந்த படத்தில் ஒரு கொலை தொடர்பான விசாரணையை தன்ஷிகா மலேசியா சென்று நடத்துகிறார். அப்போது நடைபெறும் சம்பவங்களே திரைக்கதை.
ராணி படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக மலேசியாவில் நடந்தது. தன்ஷிகா தங்கி இருந்த ஓட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுவர ரூ. 2 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு காரை ஏற்பாடு செய்து இருந்தனர்.
கேமரான் தீவு பகுதியில் படப்பிடிப்பை முடித்து விட்டு ஓட்டலுக்கு திரும்ப தன்ஷிகா தயார் ஆனார். ஆனால் அப்போது பதட்டத்துடன் அங்கு வந்த டிரைவர் ‘‘காரை காணவில்லை, யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள்’’ என்று கூறியுள்ளார்.
மாயம் ஆன காரை கண்டு பிடித்து தரும்படி படத்தயாரிப்பாளர் அங்குள்ள போலீசில் புகார் செய்து இருக்கிறார். காரை மலேசியா போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


No comments:

Post a Comment