Friday, 30 September 2016

Raashi Khanna opposite Atharva in Imaikka Nodigal Movie


Raashi-Khanna-opposite-Atharva-in-Imaikka-Nodigal-Movie/
Raashi Khanna opposite Atharva in "Imaikka Nodigal" produced by Cameo films C J  Jayakumar and directed by R.Ajay Gnanamuthu.
"Imaikka Nodigal"  produced under the banner Cameo films by C J Jayakumar and directed by R.Ajay Gnanamuthu is shaping up as a mega budget film with the inclusion of all major names in the respective arenas in the cast and crew list.
 "We are consciously building the brand value of the project. The script is the roof of this project and the pillars that carry the script are Atharva the happening actor, Ajay Gnanamuthu the Director, R D Rajasekar the cinematographer, HipHop Tamizha the music Director and to top it all the Amazing screen presence of Nayanthara that is a major boost in this film, which we are determined to make big with cast, crew and promotions.  Nayanthara’s arrival has given this project a huge momentum. This script has the dimension of a Hollywood scripting style, where alternative tracks showcase the strength of the respective artiste that will form the fulcrum of the movie.  We were looking for a fresh face that could be paired opposite Atharva and our search ended when we met Raashi Khanna, and happening actress in Tollywood. She will add more colour to this project. We are in discussion with one of the top names in the country to play the antagonist of this film, I’m sure it will give this film a pan Indian look.   In R D RajaSekar as cinematographer, HipHop Tamizha as music director, Bhuvan Srinivasan as editor, Selvakumar as Art Director and Stunt choreographer Dilip Subbarayan, we are assured of an excellence in the technical side too. The shooting is all set to commence by mid-October and we are glad that the film has touched the pinnacle in terms of curiosity even before we could commence officially. The audience can be rest assured with a presentation that will not let them wink their eyes even for a second" declared Producer C J Jayakumar with confidence.
கேமியோ பிலிம்ஸ் சி ஜெ  ஜெயக்குமார் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்க  இருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்.. 
மிக பெரிய பட்ஜெட்.... தலை சிறந்த நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்.... இந்த இரண்டு சிறப்பம்சங்களையும் வலுவாக உள்ளடக்கி உருவாகி வருகிறது கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து, ஆர். அஜய் ஞானமுத்து இயக்க  இருக்கும் 'இமைக்கா நொடிகள்'  திரைப்படம்.
"எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள்   மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில்  எழுப்பி கொண்டு வருகிறோம்....முக்கியமாக எங்கள்  படத்தின் அஸ்திவாரமாக செயல்படுவது கதை களம் தான்.... அந்த கதை களத்தை தாங்கி நிற்கும்  வலுவான தூண்களாக  அதர்வா, இயக்குனர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா  இருப்பது எங்கள் படத்திற்கு கூடுதல் பலம். சிறந்த நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம்....அந்த வகையில்  நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது... ஹாலிவுட் திரைப்படங்களை போல இந்த படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது...இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம். அது தான் எங்கள் கதையின் தனித்துவமான சிறப்பு. அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, தெலுங்கு திரையுலகின் நம்பகமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும்  ராஷி கண்ணாவை  நாங்கள் தேர்வு செய்து இருக்கிறோம்.... நிச்சயமாக அவரின் இந்த வருகை படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்....தற்போது எங்கள் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காக  இந்தியாவின் முன்னணி நபர்களுள் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்....இதன் மூலம் தேசிய அளவில் எங்கள் திரைப்படம் பேசப்படும்  என முழுமையாக நம்புகிறேன்.    
ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன்,  கலை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன்  என சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள்  பணியாற்றுவது, எங்கள் படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதத்தில் எங்கள் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் துவங்க இருக்கிறோம்....படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் எங்கள் 'இமைக்கா நொடிகள்'  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது, எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.... 'இமைக்கா நொடிகள்' படத்தை பார்க்க வரும் ஒவ்வொருவரும் தங்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட மாட்டார்கள்...." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் சி ஜெ ஜெயக்குமார்.

No comments:

Post a Comment