Friday, 23 September 2016

Santhanam’s ‘Server Sundaram’ team is now in Dubai for their final leg of shoot
Santhanam’s-‘Server-Sundaram’-team-is-now-in-Dubai-for-their-final-leg-of-shoot/



Life is mixed with emotions such as Love, Comedy, Sentiment, Action and Heroism, and so as Films too. The one actor who can express those emotions in a more realistic way is Santhanam. After earning huge positive reviews for his Commercial Blockbuster hit ‘Dhilluku Dhuddu’, Santhanam is all set to continue his tremendous success journey through the upcoming film ‘Server Sundaram’. Produced by the most promising J Selvakumar under the banner Kenanya Films, Server Sundaram is being directed by Anand Balki which has Marathi actress Vaibhavi Shandilya in the female lead.
After completing their major sequences in chennai, Goa and Thenkasi, Server Sundaram team is currently landed in Dubai for their last schedule. In Dubai they are shooting a song, pre climax and climax for 12 days. The entire unit of Server Sundaram was astonished to see the tremendous fan base of Santhanam in Dubai. We all know that Santhanam has got a huge fan base in Tamil Cinema, but the grand welcome given by Santhanam fans in Dubai Airport has carried the popularity of Santhanam to the next level. 
The post production works of Server Sundaram is expected to commence after this climax shoot. It can be clearly said that, the Commercial Star’s upcoming Server Sundaram releasing by the fag end of this year  will surely keep the cash bell ringing…

'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ளனர் சந்தானம் மற்றும் படக்குழுவினர்
காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட், அதிரடி, ஹீரோயிசம் என பல சிறப்பான குணங்கள் தான் ஒரு சிறந்த திரைப்படத்திற்கு அடையாளம்... அந்த குணங்களை எல்லாம் மிக யதார்த்தமாக திரையில் பிரதிபலிக்கும் ஒரு நடிகர் யார் என்றால், அவர் சந்தானம் என்று  கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம். 'தில்லுக்கு துட்டு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தன்னுடைய வெற்றி பயணத்தை 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் மூலம் தொடர இருக்கிறார் சந்தானம். தரமான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து  ரசிகர்களுக்கு வழங்கி வரும் 'கெனன்யா பிலிம்ஸ்' - ஜெ செல்வக்குமார்  தயாரித்து வரும்  'சர்வர் சுந்தரம்' படத்தை ஆனந்த் பல்கி இயக்கி வர, மராத்திய நடிகை வைபவி ஷந்திலியா முன்னணி கதாபாத்திரத்தில்  நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
சென்னை, கோவா மற்றும் தென்காசியில்  முக்கிய காட்சிகளை படமாக்கிய 'சர்வர் சுந்தரம்' படக்குழுவினர், தற்போது கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்காக துபாயில் தரை இறங்கி இருக்கின்றனர். பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில், ஒரு பாடல், கிளைமாக்ஸ் மற்றும் ஒரு முக்கிய காட்சியானது படமாக்கப்பட இருக்கிறது. துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய 'சர்வர் சுந்தரம்' படக்குழுவினர், சந்தானத்திற்கு துபாய் ரசிகர்கள் கொடுத்த விமர்சையான வரவேற்பால் வியந்து போய் இருக்கின்றனர்... தமிழ் சினிமாவில் சந்தானத்தின் ரசிகர் பலத்தை பற்றி நன்கு அறிவோம், ஆனால் தற்போது துபாயில் கொடுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட வரவேற்பானது, உலகளவில் உள்ள அவரது எண்ணற்ற ரசிகர்களை பற்றி உணர்த்தி இருக்கிறது. 
இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு 'சர்வர் சுந்தரம்' படத்தின் தொழில் நுட்ப பணிகள்  ஆரம்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது...வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' திரைப்படமானது, வர்த்தக உலகில் புதியதொரு சாதனையை படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்டுகிறது.

No comments:

Post a Comment