Wednesday, 21 September 2016

Thala Dhoni At SuperStar’s House

Thala-Dhoni-At-SuperStar’s-House/



Thala Dhoni At SuperStar’s House 

'தலைவரை' பார்க்க போயஸ் கார்டன் வரும் 'தல' டோணி

சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி தனது வாழ்க்கை பற்றிய படத்தை விளம்பரப்படுத்த சென்னை வரும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளாராம். கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கையை மையமாக வைத்து எம்.எஸ். டோணி- தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் இந்தியில் படம் எடுத்துள்ளனர். படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார். ட்ரெய்லரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.
டோணி என்ன தான் கிரிக்கெட்டில் பிசியாக இருந்தாலும் தன்னைப் பற்றிய படத்தை விளம்பரப்படுத்த நேரம் ஒதுக்கத் தவறவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் சேர்ந்து பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் டோணி. தன்னை பற்றிய படத்தை விளம்பரப்படுத்த சென்னை வருகிறார் டோணி. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தனக்கு ரசிகர்கள் தனக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள சென்னைக்கு வரும் அவர் விளையாடியபோது தமிழக ரசிகர்கள் அவரை தல, தலன்னு கொண்டாடினார்கள், இன்னும் கொண்டாடுகிறார்கள். பட வேலையாக சென்னை வரும் டோணி திரையுலக ஜாம்பவான் ரஜினியை போயஸ் கார்டனில் இருக்கும் அவரின் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசுகிறாராம். ஒரு ரசிகனாக டோணி ரஜினியை சந்திக்கிறார்.

No comments:

Post a Comment